FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: பவித்ரா on February 26, 2013, 04:59:32 PM

Title: சமுதாய குளறுபடி
Post by: பவித்ரா on February 26, 2013, 04:59:32 PM
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவள் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
முதிர் கன்னி என்கிறாய் .

கணவரை பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்கிறாய் .

மகபேறு இல்லாத பெண்ணை
மலடி என்கிறாய் .

கணவரை இழந்த  பெண்ணை
கைம்பென் (விதவை )என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள ஆண் மகனை
என்ன சொல்வாய் சமுதாயமே?...
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: Bommi on February 26, 2013, 05:19:42 PM
ஆண்கள்  இதை படிக்க நேர்ந்தால் கொஞ்சமாவது
பெண்கள் மனசு புரியிற அளவிற்கு இருந்தா நல்லா இருக்கும்...பவி
பெண்களோட எதிர்பார்ப்புகள் என்னன்னும் நம்மளே தெரிஞ்சுக்கலாமே
கவிதை அருமை
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: Thavi on February 27, 2013, 03:26:52 AM
nadaimurai visaangalai kavithaiyaai maatri irukinga pavima simply superb keep write more ;D
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: bharathan on February 27, 2013, 03:48:10 AM
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை   என்கிறாய் .

மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன்  என்கிறாய் .

மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .

மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...


when it is comes to problem to a human being , its common irrespective of gender.
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: aasaiajiith on February 27, 2013, 10:04:40 AM
அபாரமான கருத்தை  முன்வைத்தீர் பரதன் !!

வாழ்த்துக்கள் !!!
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: vimal on February 27, 2013, 12:28:41 PM
நல்ல கருத்து பவிமா...ஆனால் ஒரு விஷயம் தெரிஞ்சிகோடா.... ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தில்
அதிர்ஷ்டம் இல்லாதவள்,முதிர்கன்னி,வாழாவெட்டி,மலடி,கைம்பெண்....இந்த அனைத்து பெயர்களும் பெண்களால்தான் உருவாக்கப்பட்டது... ஆண்களால் அல்ல... மறவாதே....பவிமா :) :) :)
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: bharathan on March 01, 2013, 11:16:11 PM
அபாரமான கருத்தை  முன்வைத்தீர் பரதன் !!

வாழ்த்துக்கள் !!!


Nandri nanba..   en muthal pathiviruku kidaitha muthal vaazthukal !
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: சிநேகிதன் on March 02, 2013, 04:09:30 AM
சமுதாயத்தில் அதிகம்  வஞ்சிக்க படுவது பெண்களே.

ஆண்களும் வஞ்சிக்கபடுகிரார்கள் எனினும் அதன் பாதிப்பு ஒரு ஆண் எதிர்கொள்ள கூடிய ,சகித்துக்கொள்ள கூடிய அளவிலேயே இருக்கிறது .அதிக அளவில்  சக பெண்களாலும் ,சில ஆண்களாலும் கொடுக்கப்பட்ட அடைமொழிகளே நீங்க சொன்ன கவிதை வரிகள் .நல்ல  சிந்தனை கவிதை பவித்ரா.
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: ஆதி on March 21, 2013, 11:42:29 PM
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை   என்கிறாய் .

மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன்  என்கிறாய் .

மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .

மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...


when it is comes to problem to a human being , its common irrespective of gender.


மலடி, விதவை, முதிர்கன்னி, வாழவெட்டி,  பரத்தை, வைப்பாட்டி, தாசி, தேவர் அடியள், இத்யாதி இத்யாதி

இது எல்லாம் கூட ஆண்கள் பெயரா பரதன், உங்கள் கருத்து வியக்கும்படியானதாக‌ இருக்கிற‌து
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: ஆதி on March 21, 2013, 11:49:23 PM
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவள் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
முதிர் கன்னி என்கிறாய் .

கணவரை பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்கிறாய் .

மகபேறு இல்லாத பெண்ணை
மலடி என்கிறாய் .

கணவரை இழந்த  பெண்ணை
கைம்பென் (விதவை )என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள ஆண் மகனை
என்ன சொல்வாய் சமுதாயமே?...

பெண்களுக்கு கொடுக்கப்படும் அடைமொழிகள் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை

பெண்கள் காலங்கலாங்களாய் வஞ்சிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்

நல்லக் கவிதை வாழ்த்துக்கள்
Title: Re: சமுதாய குளறுபடி
Post by: Global Angel on March 26, 2013, 02:26:50 PM
பவி  அருமையான கவிதை பெண்கள் குறைகள் இலாமலே குறைகளாக்க படுகின்றார்கள் ... தொடர்ந்து எழுதுமா



Quote
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .

திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை   என்கிறாய் .

மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன்  என்கிறாய் .

மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .

மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .

இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...

பரதன் இவை எல்லாம் இருப்பதாக எந்த ஆண்மகனும் தானாக சொன்னதில்லை .. அப்படி தெரிய வந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை நூற்றில் ஒரு ஆண் தான் இப்படி எதாவது ஒன்றாகின்றான் 99 பெண்கள் இதுவாகவே வாழ்கிறார்கள் ... வாழ  வைக்கப் படுகிறார்கள் .
உங்கள் மனக்கவலை புரிகிறது இருந்தாலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமல்லவா ..