Posted by: SweeTie
« on: September 16, 2025, 07:30:29 PM » காற்றிலே தவழும் இசையே உன்னை
கைகளால் தொட்டணைக்க முடியலையே
காதுகளால் கேட்க்கும் இசையே உன்னை
கண்களால் பார்க்க முடியலையே
மலரோடு மனம்போல எங்கள்
உயிரோடு உணர்வானாய் இசையே!
காற்றிலே அசையும் மூங்கில்
கார்மேகம் கக்கும் மழைத்துளி
சேற்றிலே நாற்று நடும்
உழவனின் முணுமுணுப்பு
மலரிடம் மயக்கம் கொள்ளும்
வண்டுகளின் ரீங்காரம்
விளக்கின் ஒளியில் மடியும்
விட்டில்களின் விசும்பல்
சுகமான இரவில் சுழலும்
பூமியின் ஓங்காரம்
எல்லையில்லா ஆழ்கடலின்
ஆர்ப்பரிக்கும் அலையோசை
மலைகளை கடந்துவரும்
நீர்வீழ்ச்சியின் ஓ ...வென்னும் இரைச்சல்
காதலனை கவர்ந்திழுக்கும்
காதலியின் கொலுசின் சிணுங்கல்
வானுயர பறக்கும் பருந்து
சிறகடிக்கும் ஒலியும்
காக்கை கூட்டில் கண்விழிக்கும்
குயில் குஞ்சின் குரலும்
கானகத்தை கலங்கடிக்கும்
யானையின் பிளிறலும்
எல்லையில்லா இசையே!
இசையின்றி இவ்வையகத்தில் ஏதுமில்லை
இசையோடு இன்பமாய் வாழ்வோம்
i
கைகளால் தொட்டணைக்க முடியலையே
காதுகளால் கேட்க்கும் இசையே உன்னை
கண்களால் பார்க்க முடியலையே
மலரோடு மனம்போல எங்கள்
உயிரோடு உணர்வானாய் இசையே!
காற்றிலே அசையும் மூங்கில்
கார்மேகம் கக்கும் மழைத்துளி
சேற்றிலே நாற்று நடும்
உழவனின் முணுமுணுப்பு
மலரிடம் மயக்கம் கொள்ளும்
வண்டுகளின் ரீங்காரம்
விளக்கின் ஒளியில் மடியும்
விட்டில்களின் விசும்பல்
சுகமான இரவில் சுழலும்
பூமியின் ஓங்காரம்
எல்லையில்லா ஆழ்கடலின்
ஆர்ப்பரிக்கும் அலையோசை
மலைகளை கடந்துவரும்
நீர்வீழ்ச்சியின் ஓ ...வென்னும் இரைச்சல்
காதலனை கவர்ந்திழுக்கும்
காதலியின் கொலுசின் சிணுங்கல்
வானுயர பறக்கும் பருந்து
சிறகடிக்கும் ஒலியும்
காக்கை கூட்டில் கண்விழிக்கும்
குயில் குஞ்சின் குரலும்
கானகத்தை கலங்கடிக்கும்
யானையின் பிளிறலும்
எல்லையில்லா இசையே!
இசையின்றி இவ்வையகத்தில் ஏதுமில்லை
இசையோடு இன்பமாய் வாழ்வோம்
i