Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 96455 times)

Online RajKumar

புத்தகப் பை



அடுத்த விடுகதை
🪷கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்? 🪷


Offline Yazhini

விடை : பாம்பு 🐍


அடுத்த புதிர்:
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
« Last Edit: April 14, 2025, 02:32:02 PM by Yazhini »

Online RajKumar

வாழை மரம்


அடுத்த விடுகதை

        🪷 பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்? 🪷
 

Offline Yazhini

விடை : வெண்டைக்காய்

அடுத்த புதிர் :
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன ?

Online RajKumar

பாய்


அடுத்த விடுகதை
🪷 மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல
அவன் யார்?🪷

Offline Vethanisha

அணில்

கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம்.  கண்டுபிடியுங்கள்

Online RajKumar

கடையெழுத்து மாறிடில் தின்னலாம்   பழம் முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்.  பனி
மொத்தத்தில் முருகன் இடம்.  பழனி


அடுத்த விடுகதை
🪷 முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம்
அது என்ன? 🪷



« Last Edit: April 16, 2025, 04:28:38 PM by RajKumar »

Offline Vethanisha

பலாப்பழம்

தொடர்மொழியில் ஆற்றை குறிக்கும் இச்சொல் தனிமொழியாக வேறு அர்த்தம் படும். கடைச் சொல் உடல் உறுப்பை குறிக்கும். அது என்ன சொல் .

Online RajKumar

வைகை
தொடர்மொழியில்
                   ஆற்றை குறிக்கும்            வைகை
இச்சொல் தனிமொழியாக
       வேறு அர்த்தம் படும்                        வை  கை
கடைச் சொல்
         உடல் உறுப்பை குறிக்கும்             கை

அது என்ன சொல்                வைகை



அடுத்த விடுகதை
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?




Offline Yazhini

விடை : கண்


அடுத்த புதிர் :
ஒற்றை கண்ணன். ஓடும் இடமெல்லாம் அடைப்பான். அவன் யார் ?🤔

Offline Vethanisha

அன்பே இது ஊசி சரியா?😅

இரட்டையன் நான் , ஒருத்தர் இன்றி மற்றோருவர் குப்பையிலே ..

Online RajKumar

செருப்பு


அடுத்த விடுகதை
🪷 கடல் நீரில் வளர்ந்து ,
மழை நீரில் மடிவது என்ன ? 🪷

Offline Yazhini

விடை : உப்பு🧂🧂🧂


அடுத்த புதிர் :

ஓடுவான் சாடுவான் ஒத்த காலுல நிற்பான். அவன் யார்? 🤔

Online RajKumar

ஒற்றை கதவு



அடுத்த விடுகதை
🪷 [காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? 🪷

Offline Yazhini

விடை : நிழல்


அடுத்த புதிர் :
பெருந்தீணிகாரன். அனைத்தையும் உண்பான் ஆனால் நீர் அருந்த மாட்டான். அவன் யார்? 🤔