என்னென்ன தேவை?
மீடியம் சைஸ் மாம்பழம் (அல்போன்சாவாக இருந்தால் நல்லது.
மற்றபடி நார் பழங்கள் தவிர்த்து சதைப்பற்றுள்ள எந்த வகையும் ஓ.கே.) - 1,
அதிக புளிப்பில்லாத, வடிகட்டிய தயிர் - 1 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பாதாம்,
பிஸ்தா - சிறிது.
எப்படிச் செய்வது?
மாம்பழத்தைத் தோல் நீக்கி, மிக்சியில் நன்கு அடிக்கவும். அதில் தயிர், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்து பாதாம், பிஸ்தா தூவி, குளிர வைத்துப் பரிமாறவும்.