Author Topic: உடல் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சைகளை சாப்பிடுங்க  (Read 839 times)

Offline kanmani

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கட்டு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.