Author Topic: மீன் பிரியாணி  (Read 765 times)

Offline kanmani

மீன் பிரியாணி
« on: November 21, 2012, 12:05:39 PM »

    அரிசி - முக்கால் கிலோ
    மீன் - முக்கால் கிலோ
    வெங்காயம் பெரியது - 4
    தக்காளி பெரியது - 3
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
    பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
    பட்டை - 2
    கிராம்பு - 5
    ஏலக்காய் - 4
    புதினா, மல்லித் தழை - தலா 5 கொத்து
    எண்ணெய் - 100 மில்லி
    தயிர் - அரை கப்
    பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை - ஒன்று
    முட்டை - ஒன்று

 

 
   

மீனை சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், முட்டை, உப்பு சேர்த்து முறுகாமல் அரைபாகம் வேகுமளவு பொரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை சாறு எடுத்து வைக்கவும்.
   

அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடிகட்டி அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.
   

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, அவற்றோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

நன்கு வதங்கியதும் தூள் வகைகள், தயிர், தக்காளி சாஸ், உப்பு, பன்னீர், எலுமிச்சைச் சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
   

கொதித்த பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு மீனை தனியாக எடுத்து விடவும்.
   

வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் போட்டு நன்கு கிளறி விட்டு சாதத்தின் மேல் மீன் துண்டுகளை வைத்து மூடி போட்டு, மேலே கனமான பொருளை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் தம்மில் வைக்கவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.
   

சுவையான மீன் பிரியாணி ரெடி. விரும்பினால் முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடலாம்.