Author Topic: பான் போகிபா  (Read 1283 times)

Offline kanmani

பான் போகிபா
« on: November 05, 2012, 12:24:17 PM »


பான் என்றால் ப்ரெட். போகிபா என்பது இந்த வகை உணவு. இதில் பல போகிபா இருக்கு. முட்டை சேர்த்து செய்வது, கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பது, காரம் சேர்ப்பது, மீன் சேர்ப்பது, ப்ரெட் ரஸ்க் சேர்ப்பது இப்படி நிறைய சொல்றாங்க. இது ப்ரெட் சேர்த்து செய்வது. இதை பேக் செய்யவும் செய்யலாம், அடுப்பிலேயே தவாவிலும் செய்யலாம். நான் தவாவில் செய்யும் முறை தான் கொடுத்திருக்கேன்.


 

    ப்ரெட் துண்டுகள் - 12
    தேங்காய் பால் - ஒரு கப்
    சர்க்கரை - 3/4 கப்
    சோடா மாவு - கால் தேக்கரண்டி
    நட்ஸ் வகைகள் - ஒரு மேசைக்கரண்டி (முந்திரி, பாதாம், பிஸ்தா, டேட்ஸ் என உங்க விருப்பம்)
    வெண்ணெய் / நெய் - 2 மேசைக்கரண்டி

 

 
   

ப்ரெட் துண்டுகளை (ஓரம் நீக்க தேவையில்லை) துண்டுகளாக போட்டு வைக்கவும்.
   

தேங்காய் பால், சர்க்கரை என எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.
   

ப்ரெட் துண்டுகள் மீது கால் கப் கொதிக்கும் நீர் சேர்த்து தேங்காய் பால் சேர்த்து அப்படியே ஊற விடவும்.
   

இப்போது ப்ரெட் துண்டுகளை மாவு பிசைவது போல் பிசையவும்.
   

இதில் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும். (பொங்கல் பதம் இருக்க வேண்டும். பதம் ரொம்ப முக்கியம், அப்ப தான் சாஃப்ட்டான போகிபா கிடைக்கும்)
   

சின்ன நாண்ஸ்டிக் பாத்திரத்தில் (அகலம் குறைவானது) வெண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த கலவையை போட்டு மேலே நட்ஸ் துண்டுகளை போட்டு மூடி வேக விடவும். (வெண்ணெய் சூடு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க கூடாது, பிடித்து கொள்ளும். போட்ட பின் மிதமான தீ பாத்திரம் முழுவதும் ஒரு சீராக பரவும்படி இருக்க வேண்டும், அப்போது தான் ஒரே நிறமாக போகிபா சிவக்கும்.)
   

இப்போது மேலே ஒரு தட்டு வைத்து கவிழ்த்து எடுத்து விடவும். கரண்டி போட்டால் உடைய கூடும்.
   

மீண்டும் தவாவில் சிறிது வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அப்படியே தட்டில் இருப்பதை அதில் விட்டு விடவும்.
   

இரண்டு பக்கமும் நன்றாக சிவந்ததும் எடுக்கவும்.
   

ஆறிய பின் கேக் போல் துண்டுகள் போட்டு பரிமாறலாம். மிக சுவையான பான் போகிபா தயார். வெளியே மொறு மொறு என்றும், உள்ளே சாஃப்டாகவும் மிக சுவையாக irukum