Author Topic: தமிழ் விக்சனரி  (Read 24042 times)

Offline Global Angel

தமிழ் விக்சனரி
« on: October 17, 2012, 04:40:05 PM »
தமிழ் விக்சனரி

தமிழ் விக்சனரி ... கீழ் வரும் பதிப்புகள் யாவும் கீழ் காணும் ஆதாரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்டவை

ஆதாரங்கள் ---அஃகியமஃகான்--- சென்னைப் பேரகரமுதலி + வின்சுலோ அகரமுதலி + அகரமுதலி இணையம் + இவைகளையும் உசாவி,

பகுப்புகள்
    * குறுக்கங்கள்
    * நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
    * பெயர்ச்சொற்கள்
    * தமிழிலக்கணப் பதங்கள்


****************************





'அ' எழுத்தை எழுதும் முறை


'அ' எழுத்துத் தோன்றும் முறை.

அ = 8


8 என்பதன் கைக் குறி


    1) தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து ,
    2) எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு,
    3) அழகு,
    4) அந்த என்னும் சுட்டு) (எ.கா. அப்பறவை, அக்கருவி)
    5) எதிர்மறை முன்னொட்டு, ஆரியமொழிகளிலிருந்து பெற்ற பிற்கால அமைப்பு; ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
    6) ஓர் அசைச்சொல். (எ.கா.)(பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி-494)
    7) ஓர் இரக்கக் குறிப்பு.(எ.கா.) ' அஆ! கீழே கொட்டி விட்டதே. '
    8.) ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று. (எ.கா.) என கைகள்.
    9) அஃகான்.
    10) சிவன், திருமால்.

மொழிபெயர்ப்புகள்

    * ஆங்கிலம்

        1) the first tamil vowel,
        2) eight the letter printed without the loop at the top,
        3) beauty,
        4) pref. to nouns, expressing remoteness.
        5) placing அ before some words, leads to theopposite words.
        6) a euphony.
        7) ah! expressing pity.
        8.) the tamil grammatical term.
        9) a synonym for the first letter.
        10) the (hindu gods) namely siva, vishnu.

    * இந்தி- இதே ஒலியை உடைய இந்தியின் முதலெழுத்து -

விளக்கம்

ஆரிய மொழிகளிலிருந்து பெற்ற அ என்னும் எதிர்மறை முன்னொட்டைச் சொற்களுக்கு முன்னே சேர்த்தால் எதிர்மறைப் பொருள் கிடைக்கும். இது ஏறக்குறைய ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க மட்டுமே வழங்குவது;சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காணலாம்

1நீதி    X    1அநீதி    2சைவம்    X    2அசைவம்    3சுத்தம்    X    3அசுத்தம்    4தர்மம்    X    4அதர்மம்


பயன்பாடு


   1. அ என்பது தமிழின் முதலாம் உயிரெழுத்து ஆகும்.



(இலக்கணப் பயன்பாடு)

   1. அ என்பது, ஒரு பெயர்ச்சொல், அசைச்சொல், மற்றும் குறில் ஆக அமைகிறது.

(இலக்கியப் பயன்பாடு)

   1. அ என்ற சொல்லால் ஆரம்பமாகும் திருக்குறள்கள், மொத்தம் = 156.

        * இது தமிழ் அரிச்சுவடியில் அடங்கும், அடிப்படைக் குறியீடாகும்.





ஆதாரங்கள்
---அ--- சென்னைப் பேரகரமுதலி + வின்சுலோ அகரமுதலி + அகரமுதலி இணையம் + இவைகளையும் உசாவி, விரிவு படுத்துக.

            Nuvola apps bookcase.png கழகத் தமிழ் கையகராதி. + க்ரியாவின் தற்காலத் தமிழகராதி


சொல் வளப்பகுதி

    ஃ - ஆ - अ - மெய்யெழுத்து - உயிர்மெய்யெழுத்து - பலுக்கல்


« Last Edit: October 17, 2012, 05:43:20 PM by Global Angel »
                    

Offline Global Angel

Re: தமிழ் விக்சனரி
« Reply #1 on: October 17, 2012, 05:08:13 PM »
1) அஃகம்

பொருள்-1
தானியம் =அஃகம் சுருக்கேல் - (ஆத்திசூடி)

மொழிபெயர்ப்புகள்
•   ஆங்கிலம் - grain

பொருள்-2

ஊற்று நீர்

 மொழிபெயர்ப்புகள்
•   ஆங்கிலம் - spring water

 பொருள்-3

முறைமை - ஒரு ரிரண்டஃக மாயிற்று (சீவக சிந்தாமணி. 2087)

 மொழிபெயர்ப்புகள்
•   ஆங்கிலம் -course of action

 பொருள்-4

•   புவியின் அட்சரேகை

 மொழிபெயர்ப்புகள்
•   ஆங்கிலம் - latitude

--------------------------------------------------

2) அஃகடி 


* பெயர்ச்சொல்

   1. அலைவு
   2. அலைச்சல்
   3. துன்பம்
   4. அக்கடி

மொழிபெயர்ப்புகள்

    * ஆங்கிலம்

   1. difficulty
   2. trouble

 உசாத்துணை


   1. ↑ 1.0 1.1 தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஃசிகன்)


---------------------------------------------------

3) அஃகப் பானை

பொருள்

        * அஃகம் சேமித்து வைக்கப் பயன்பெறும் பானை.

விளக்கம்

::*(Tamil writing 4 .gifலக்கணக் குறிப்பு)-அஃகப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

            * இவற்றில் சேகரித்து வைப்பதால், அதிக நாட்கள் தானியங்களின் தன்மை மாறாமலிருக்கும்.
            * (இலக்கிய மேற்கோள்) -

மொழிபெயர்ப்புகள்

        * ஆங்கிலம் - a kind of grain clay pot in tamil culture

சொல் வளப்பகுதி


    1)குதிர், 2)குறுக்கை, 3) பானை வகைகள்

--------------------------------------------

4) அஃகான்

பொருள்

    * அஃகான் = அகரம் = அஃகு. 1) அ எனுமெழுத்து, 2)வறுமை(தி.நி.), 3) சிறிதாகை(தி.நி).

மொழிபெயர்ப்புகள்


    * (ஆங்) 1)the first tamil vowel; 2) poverty, destitution; 3) Becoming small, being reduced.

விளக்கம்


:*(வாக்கியப் பயன்பாடு) - அஃகான் பற்றி அதிகம் தெரிந்து கொள்.

        * (இலக்கணக் குறிப்பு) - அஃகான் என்பது பெயர்ச்சொல் என்ற, சொல் வகையினைச் சார்ந்தது.

        * (இலக்கியப் பயன்பாடு) - அஃகா னடைவு மாகும் (நன்னூல் - 212).

----------------------------------------------

5) அஃகரம்


பெயர்ச்சொல்

1. தாவர இனம். வெள்ளெருக்குச்செடி

-------------------------------------------------------

6) அஃகல்

பெயர்ச்சொல்.

   1. சிறிதாகை.- அஃகி அகன்ற அறிவென்னாம் (திருக்குறள்,)175
   2. வறுமை. (திவா.)

மொழிபெயர்ப்புகள்


        * ஆங்கிலம் - 1. Becoming small, being reduced; 2. poverty, destitution


***
« Last Edit: October 17, 2012, 05:26:47 PM by Global Angel »
                    

Offline Global Angel

Re: தமிழ் விக்சனரி
« Reply #2 on: October 17, 2012, 05:36:49 PM »
7) அஃகான்

பொருள்

    * அஃகான் = அகரம் = அஃகு. 1) அ எனுமெழுத்து, 2)வறுமை(தி.நி.), 3) சிறிதாகை(தி.நி).

மொழிபெயர்ப்புகள்


    * (ஆங்) 1)the first tamil vowel; 2) poverty, destitution; 3) Becoming small, being reduced.

விளக்கம்


:*(வாக்கியப் பயன்பாடு) - அஃகான் பற்றி அதிகம் தெரிந்து கொள்.

        * (இலக்கணக் குறிப்பு) - அஃகான் என்பது பெயர்ச்சொல் என்ற, சொல் வகையினைச் சார்ந்தது.
        * (இலக்கியப் பயன்பாடு) - அஃகா னடைவு மாகும் (நன்னூல் - 212).

தகவலாதாரம்}
---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி, வரிசை8, அஃகான்

---------------------------------------------------

8) அஃகாமை


பெயர்ச்சொல்.

   1. குறையாமை - (எ.கா).அஃகாமை செல்வத்திற்கு... குறள்-178
   2. சுருங்காமை .

மொழிபெயர்ப்புகள்


    * ஆங்கிலம் - 1.short, 2.not shrink

ஆதாரங்கள் ---அஃகாமை--- சென்னைப் பேரகரமுதலி + வின்சுலோ அகரமுதலி

----------------------------------------------

9) அஃகியஐ


பொருள்

அஃகியஐ

        * ஐகாரக் குறுக்கம்.
        * ...

விளக்கம்

        * ...

பயன்பாடு

        * ...

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - aḥkiyai (ஒலிப்பு)

சொல் வளப்பகுதி

        * அஃகியமஃகான் - அஃகியஔ - அஃகியதனிநிலை


ஆதாரங்கள் ---அஃகியஐ--- சென்னைப் பேரகரமுதலி + வின்சுலோ அகரமுதலி

----------------------------------------------------

10) அஃகியஔ

பொருள்

அஃகியஔ

        * ஆய்தக் குறுக்கம்.
        * ...

விளக்கம்


        * ...

பயன்பாடு

        * ...

மொழிபெயர்ப்புகள்


ஆங்கிலம் - aḥkiyau (ஒலிப்பு)

சொல் வளப்பகுதி

        * அஃகியமஃகான் - அஃகியஐ - அஃகியதனிநிலை

-----------------------------------------------------

11) அஃகியதனிநிலை

பொருள்


அஃகியதனிநிலை

        * ஆய்தக் குறுக்கம்.
        * ...

விளக்கம்

        * ...

பயன்பாடு

        * ...

மொழிபெயர்ப்புகள்


ஆங்கிலம் - aḥkiyataṉinilai

சொல் வளப்பகுதி

        * அஃகியமஃகான் - அஃகியஔ - அஃகியஐ

-----------------------------------------------

12) அஃகியமஃகான்

பொருள்

அஃகியமஃகான்

        * மகரக் குறுக்கம்
        * ...

விளக்கம்

        * ...

பயன்பாடு

        * ...

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - aḥkiyamḥkāṉ

சொல் வளப்பகுதி

        * அஃகியஔ - அஃகியஐ - அஃகியதனிநிலை

***
                    

Offline Global Angel

Re: தமிழ் விக்சனரி
« Reply #3 on: October 17, 2012, 05:57:26 PM »
13) அஃகு

பொருள்


    * அஃகு (வி)= 1) சுருங்கு, 2)நுண்ணியதாகு,3)ஊறுநீர்

மொழிபெயர்ப்புகள்


    * 1) shrink , 2)become acute, minute, subtle.ஆங்கிலம்

    * சொல்லாட்சி

அஃகி அகன்ற அறிவு - திருக்குறள் 175

{ஆதாரம்} ---> PALS e-dictionary

--------------------------------------------------------


14) அஃகுதல்


பொருள்

அஃகுதல்பெயர்ச்சொல்

        * நுண்ணிதாதல். அஃகி யகன்ற வறிவு (திருக்குறள்,175)
        * கழிந்து போதல். அல்லாயிர மாயிர மஃகினவால் (கம்பராமாயணம் அதி கா. 69).
        * ...

மொழிபெயர்ப்புகள்

   1. .to be acute, refined; to passaway ஆங்கிலம்
   2. ...

-----------------------------------------

15) அஃகுப் பானை

பொருள்

        * வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.

விளக்கம்

::*(Tamil writing 4 .gifலக்கணக் குறிப்பு)-அஃகுப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

            * (இலக்கிய மேற்கோள்) -

மொழிபெயர்ப்புகள்

        * ஆங்கிலம் - one of the variety of the clay pots in tamil culture.


---------------------------------------------------

16) அஃகுப்பெயர்


பெயர்ச்சொல்

அஃகுப்பெயர்

   1. நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்.

விளக்கம்

    * abbreviation என்பது, ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாவது.

    * அஃகுப்பெயர் என்பது, பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாவது.

( எடுத்துக்காட்டு )

news என்பது,

north,

east,

west,

south

என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் இணந்து உருவானது.
 தொடர்புடைய சொற்கள்

abbreviation ,abstract ,acronym

மொழிபெயர்ப்புகள்

    * ஆங்கிலம்

       1. acronym

    * தெலுங்கு

       1. సంక్షిప్తనామము

-------------------------------------------------------------


17) அஃகுல்லி


பொருள்

    * (பெ)- அஃகுல்லி = 1) ஊறுநீர் (திவா), 2) உக்காரி யென்னும் சிற்றுண்டி (பிங்) = பிட்டு.

மொழிபெயர்ப்புகள்

    * ஆங்கிலம் - 1) oozing water, 2) A steamed meal-cake.

சொல் வளப்பகுதி


    அக்குல்லி

----------------------------------------------------

18) அஃகுள்


பொருள்

அஃகுள்(பெ)

        * அக்குள், கக்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

        * The armpit.

விளக்கம்


        * ஆங்கில உச்சரிப்பு - aḥkuḷ

பயன்பாடு

***
                    

Offline Global Angel

Re: தமிழ் விக்சனரி
« Reply #4 on: October 17, 2012, 06:55:27 PM »
19) அஃகேனம்

பொருள்

    * அஃகேனம் (பெ) = ஆய்தெழுத்து.

மொழிபெயர்ப்புகள்

    * (ஆங்கி) -a special letter in thamizh (தமிழ்) language.

விளக்கம்

   1. இதற்கு முப்புள்ளி, தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு,
   2. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
   3. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

( எ.கா ) அஃது - இதில் அ என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

        இஃது - இதில் இ என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

--------------------------------------------------

20) அஃதான்று

அஃதான்று, ( உரி).

        * அஃதன்று.
        * அஃதல்லாமல்.

விளக்கம்

        * பகுப்பதம். அஃது + அன்று = அஃதான்று.

பயன்பாடு

        * இலக்கியம். அஃதான்று. (..மலர்பழிக் கும்மே அஃதான்று..சிவபெருமான் திருமும்மணிக்கோவை)
        * இலக்கியம். அதான்று. (திருவாச. 3, 28.)


அஃதான்று, (பெ).

        * ஆய்த எழுத்து.

விளக்கம்

        * பகுப்பதம். அ + ஃ + ஏனம் = அஃதான்று.

பயன்பாடு

        * இலக்கியம். அதான்று. (திருவாச. 3, 28.)


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - aḥtāṉṟu (ஒலிப்பு)

        * n. besides.
        * adv. The letter ஃ.

----------------------------------------------------

21) அஃதாவது

பொருள்

    * அஃதாவது= அது, அஃது.

மொழிபெயர்ப்புகள்

    * (ஆங்கி) - that

விளக்கம்

        * used before words commencing with a vowel, as in அஃதா வது; அது. (தொல்காப்பியம். எழுத். 423, உரை.)

----------------------------------------------------

22) அஃதி


பொருள்

அஃதி, பெயர்ச்சொல்

        * அஃதை.

விளக்கம்

        * ...

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - aḥti (ஒலிப்பு)

    * the name of king chola's daughter.


சொல் வளப்பகுதி: அஃது - அஃதே - அஃதாவது

-----------------------------------------------------

23) அஃது


பொருள்

    * அஃது= அது, அஃதாவது.

மொழிபெயர்ப்புகள்


    * (ஆங்கி) - that

விளக்கம்

        * used before words commencing with a vowel, as in அஃதா வது; அது. (தொல்காப்பியம். எழுத். 423, உரை.)

அஃதொருவன் - திருக்குறள் 38

-----------------------------------------------------

24) அஃதே

பொருள்

அஃதே,பெயர்ச்சொல்.

        * அப்படியா! அஃதே யடிகளு முளரோ (சீவக சிந்தாமணி. 1884)
        * நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்னூல். 59, மயிலை.)
        * ...

மொழிபெயர்ப்புகள்

   1. .indeed! all right! ஆங்கிலம்
   2. ...
***