Author Topic: காதல்  (Read 1195 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
காதல்
« on: September 17, 2012, 06:29:24 PM »
பல வண்ணம் தோய்ந்து
ஒரு பூ மலரும்.


கனக்கும் கால வெளி
கடந்து
ஐந்தாவது காலத்தில்
ஒரு உலகம் விரியும்.


தனிமை நறுமணக்கும்
நிமிடத்தை வட்டமிடும்
அந்நிய தேவதைகள்..


நினைவின் புள்ளிகள் வளர்ந்து
நிலவாய் பிரகாசிக்கும்.


விரும்பிய பாதையில்
விழுவது
பூக்களோ ?
சருகுகளோ?
பெருகும் ஞாபகங்கள் கொண்டு
நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து
வாழும்....
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல்
« Reply #1 on: September 17, 2012, 07:42:55 PM »
வாவ் ... காதல்னா இப்டிதான்ல .... என்ன அருமையான எடுத்து காட்டுகள் பூகளோ சருகுகளோ பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து வாழும்.... சூப்பர் ... லூசு தனமா இருந்தாலும் இதெல்லாம் வரும்யா.. ஹிஹி
                    

Offline Anu

Re: காதல்
« Reply #2 on: September 18, 2012, 06:09:17 AM »
superb aadhi..
நினைவின் புள்ளிகள் வளர்ந்து
நிலவாய் பிரகாசிக்கும்.



விரும்பிய பாதையில்
விழுவது
பூக்களோ ?
சருகுகளோ?
பெருகும் ஞாபகங்கள் கொண்டு
நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து
வாழும்....

romba romba nalla iruku..




Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல்
« Reply #3 on: September 18, 2012, 03:30:09 PM »
/வாவ் ... காதல்னா இப்டிதான்ல .... என்ன அருமையான எடுத்து காட்டுகள் பூகளோ சருகுகளோ பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து வாழும்.... சூப்பர் ... லூசு தனமா இருந்தாலும் இதெல்லாம் வரும்யா.. ஹிஹி //

உண்மைதாங்க, எதற்கு முன் ஏதோ ஒரு கவிதையில்

மதுவில் கரையும்
ஐஸ் கட்டியென‌

என்று ஒரு படிமம் கையாண்டிருப்பேன், காத‌லுக்காக‌

ம‌து காத‌ல்

ஐஸ் க‌ட்டி காத‌லில் விழுந்த‌வ‌ர்

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ க‌ரைந்து ஐஸ்க‌ட்டி ம‌துவில் க‌ல‌க்கும், முழுமையாக‌ க‌ரைந்த‌ பிற‌கு ஐஸ் எது ம‌து எது என்று தெரியாத‌ வ‌கையில் ஒன்றாகிவிடும்

காத‌லும் அப்ப‌டித்தான் இல்லையா ?

அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல்
« Reply #4 on: September 18, 2012, 03:32:31 PM »
//superb aadhi..
நினைவின் புள்ளிகள் வளர்ந்து
நிலவாய் பிரகாசிக்கும்.



விரும்பிய பாதையில்
விழுவது
பூக்களோ ?
சருகுகளோ?
பெருகும் ஞாபகங்கள் கொண்டு
நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து
வாழும்....

romba romba nalla iruku..

//

ரொம்ப நன்றிங்க அக்கா, எனக்கு மிக பிடித்த வரிகள்

சென்னையில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த ஒரு காலை ரயில் பயணத்தில் எழுதிய கவிதைங்கக்கா இது

கிட்டத்தட்ட இந்த கவிதை எழுதி ஒரு 7 வருடமிருக்கும்
அன்புடன் ஆதி

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: காதல்
« Reply #5 on: September 19, 2012, 02:08:55 AM »
aadhi kalakuringa innum niraya visayam ethir parkiren unakita therinchuka vendiyathu niraya iruku pola
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..