Author Topic: ~ சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு !!! ~  (Read 845 times)

Offline MysteRy

சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு !!!




சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் சி'யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

Offline Anu

 useful article dear..
ottagathuku enga poradhu
ungaloda next padhivula adhaiyum sollidunga mystery dear :)


Offline MysteRy





Athei Kurithu - Article Iruntha -Sure Podduvaen