Author Topic: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~  (Read 15799 times)

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #60 on: November 18, 2012, 06:57:57 AM »


உண்மையான நட்புக்கும
உறுதிமொழி தேவை இல்லை,
மௌன மொழி புரிந்தால் போதும்,
ஊமை விழிகள் கூட,
உரையாடிக்கொள்ளும்

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #61 on: November 18, 2012, 06:58:55 AM »


உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்-ஆனால்
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே ......

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #62 on: November 18, 2012, 07:01:56 AM »


இதயம் திறந்து உள்ளம் மகிழ்ந்து

உன்னை காதலித்தவன்

அவன். . !

ஒரு வேளை மரணம் அவனை

தழுவினாலும்

உன் பெயரையே சொல்லி

கல்லறை செல்லும் அவன் உடல். . !

அன்பே நீ சிந்தாதே கண்ணீர்

மண்ணை தழுவும்

பூ ஒன்று உன் கை பட்டு அவனை

தழுவட்டும் கல்லறையில். . !

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #63 on: November 25, 2012, 02:14:22 PM »

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #64 on: November 28, 2012, 10:05:24 PM »


இறுதி யாத்திரை..

காலையில் தினமும்
பூக்கும் மலரே!
அந்தி மாலை சாயமுன்
அந்தரத்தில் உன் உயிர்
காத்தாடி போல
பறந்தது ஏன்!!

தெருவோரம் நீ நடக்க!
பூத்து குலுங்கிய
ரோஜா எல்லாம்
மௌனமொழி பேசியது.
உன் கருங்கூந்தலை
வருடிய காலம் மறந்து..
உன் பஞ்சு உடலை.
சுமக்கத்தான்
காவல் காக்கிறோம் என்று !

பத்திரமாய் எழுதிவச்ச
பௌர்ணமி போல
என் கண்.
பத்திரமாய் ஒளி
வீச வேணும் என்று
பொசுங்கி தான் போனது
பௌர்ணமி போல
உன் கண்ணும்.

நட்பு என்னும்
ஒரு சொல்லை
உன் இரு கூந்தல் போல்
வளர்த்தாயே!
முக பாவம் இல்லாத
பாவை போல்
உன் முகம் இன்று
புகைப்படமானது
என் ஆருயிர் நட்பே!

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #65 on: November 28, 2012, 10:13:41 PM »


இரு கண் நோக்கி
உன் நெற்றியில
பௌர்ணமி போல்
திலகம் ஒன்று இட்டேன்..

தேய்பிறையும்
வளர்பிறையும்
நாம் வாழ்வு
என்று உணர்த்த..

அக்கினியத்தான்
சுத்திவந்தேன்
உன்னோடு
நீ என்னவள்
என்று சொல்லி.

வாழ்வெல்லாம்
நீ வசந்தம்
போல் ஜொலிக்க
மணவறையில்
உனக்கு இட்டேன்
ஒரு மாலை.

பத்திரமாய்
உன் பாதச்சுவடு
என்னோடு தொடரத்தான்
உன் காலில்
மெட்டியாய்
இட்டேன்
நீ என்னவள்
என்று சொல்லி,,

அன்பென்னும்..
ஒரு வடிவத்தில்
உன்னை கண்டேன்.
என்னுயிர்
நீ என்று சொல்லி
ஊரறிய வலம் வந்தேன்
என் அன்பே,,

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #66 on: November 28, 2012, 10:26:27 PM »


நட்பு என்னும்
இலக்கணம்
நாவுறிப்போனதடி
நான்கு திசை
எட்டு பக்கம்
ஆனபோதும்..

சுடுசொல் கேட்ட போதும்
தன்மானம் இழக்காத.
என் உதிரம்!
நட்பே!
உன் பிரிவின்
சொல் கேட்டு.
நாதியற்று போனது..

நல்ல இனம்
நல்ல ஜாதி
எனக்கு தெரியவில்லை.
நட்பு என்னும்
ஜாதியை
நான் உன்னால்
உணர்ந்தேன்.

கூடிப்பேசி
குதூகலமும்
நான் கண்டேன்.
உன்னை போல்
ஒரு ஜீவன்
எனக்கு நட்பாய்
கிடைத்த போது..

சோகச்சுமையை
தூக்கிவைத்தேன்.
உதட்டோரம்
புன்னகையை
பூக்க வைத்தேன்..
காதலால் இதயம்
வாடிய போது
நட்பால் மீண்டும்
பூத்துகுலுங்கினேன்
மாரிகால. பூப்போல!

ஆயிரம் உறவுகளில்
நீ மட்டும் எனக்குப் போதும்.
கோடி உறவுக்கு
உன் நட்பு ஈடாகுமா!
என் உயிரில் உறைந்த நட்பே!
நீ என் நட்பு!
நீ என் புன்னகை.!!!!!.