Author Topic: பால்வெளி மண்டலம் போன்ற 2 புதிய விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு  (Read 5402 times)

Offline kanmani

சிட்னி: அண்டவெளியில் 2 புதிய விண்மீன் திரள்களை (galaxies) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியும் விண்மீன் திரள்கள் அடங்கிய பால்வெளி மண்டலத்தை (milky way galaxy) ஒத்ததாகவே இந்த விண்மீன் திரள்கள் இருக்கின்றன.

ஆஸ்திரேலிய விஞ்ஞானி அரோன் ரொபோதம் நடத்திய ஆய்வில் இந்த புதிய விண்மீன் திரள்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

பூமி அடங்கியுள்ள பால்வெளி மண்டலத்தைப் போலவே இந்த புதிய விண்மீன் திரள்களும் உள்ளன. விரிந்து கிடக்கும் வானத்தில் இன்னும் எத்தனை விண்மீன் திரள்களை நாம் கண்டறியாமல் விட்டிருக்கிறோம் எனத் தெரியவில்லை. மொத்தம் 14 விண்மீன் திரள்கள் அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இந்த இரு விண்மீன் திரள்களும் நமது பால்வெளி மண்டலத்தைப் போலவே இருக்கின்றன என்று கூறியுள்ளார்.