நண்பன் எனும் போர்வையில்
கொம்பு சீவும் குண நலனுடன்
பலரும் உள்ளதனால் தானோ ?
அன்பு, அன்பு, அன்பு, என்ற
ஒன்றை தவிர வேறு ஒன்றும்
தெரியாத, புரியாத ஜீவனிடம்
இதயம் அதை பரிசாய் கேட்கிறாய் ?
மணக்கும் மனம் ,மயக்கும் குணமுடன்
பனியாய், கனியாய் ,மணியாய்
மிளிரும் கனிவான உன் இதயம்
தனியாய் தவிப்பதை தவிர்க்கவே
துணையாய் அதற்கு இணையாய்
அதையும்,இதையும் ,எதையும்
தர தயாராய் இருப்பவன்
இதயத்தையா தரமறுப்பேன் ?
ஒன்றில் மட்டும் உடன்பாடில்லை
அந்த முத்தம் என்பதில் தான்
எனக்கும் உடன்பாட்டிற்கும் முரண்பாடு
சத்தம் கேட்குமே என்பதால் இல்லை
உன் சுத்தம் என் மனதில் உச்சம்
சரி, அதில் என்ன அச்சம் ?
அதில் ஏன் பட வேண்டும் என் எச்சம்
என் எண்ணத்தின் மிச்சம்
சொச்சமின்றி புரிந்திருக்கும்
என எதிர்பார்கின்றேன் !
அடுத்த தலைப்பு - எதிர்பார்கின்றேன்