Author Topic: மனிதனின் உறுதிப்பாட்டை மனதின் ஆசை வென்று விடுகிறதே? இது ஏன்?  (Read 5439 times)

Offline Global Angel


கேள்வி: ஆசை, உறுதிப்பாடு என இருவேறு விடயங்கள் எதிரெதிராக வேலை செய்யும் நிலை இன்று அரசியல் தலைவர்கள் முதல் சராசரி மனிதன் வரை இருக்கிறது? இந்த மோதல் ஏன்? இதை ஜோதிட ரீதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?


பதில்: ஒரு மனிதனுடைய குணங்கள், நடத்தை ஆகியவற்றை ஜோதிட ரீதியாக கணிக்க உதவுவது லக்னம். ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்தாலும், லக்னத்திற்கு உரியவர் சிறப்பாக இருக்க வேண்டும்.

உதாரணமாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்னங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் லக்னாதிபதி சிறப்பான இடங்களில் இருந்து விட்டால் அந்த ஜாதகருக்கு சபல புத்தி இருக்காது.

அதற்கடுத்தபடியாக 5ஆம் இடம்தான் மனிதனுக்குள் எண்ண அலைகளை உருவாக்கக் கூடியது. ஐந்துக்கு உரியவர் 5இல் இருந்தாலோ அல்லது 9க்கு உரியவர் ஒன்பதில் இருந்தாலோ அல்லது லக்னதிபதி 5ஆம் இடத்தில் இருந்தாலோ அவர் சபலமடையாத குணம் உள்ளவராக இருப்பார்.

ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடம் நடத்தைக்கு உரியது. எனவே 4ஆம் இடத்திற்கு உரிய கிரகம் கெடாமல் இருக்க வேண்டும். சிலர் வெளியில் நன்றாகப் பேசினாலும், உள்ளுக்குள் திரைமறைவு வாழ்க்கை வாழக் கூடியவர்களாக இருப்பர். அதேவேளையில் 4ஆம் இடம் நன்றாக இருந்தால் அவர்கள் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வார்கள்.

ஒருவருடைய ஜாதககத்தில் லக்னாதிபதி, 4ஆம் இடம், 5ஆம் இடம் ஆகியவை வலுவாக இருந்து விட்டாலே, அவர்கள் உன்னதமான நிலையை உடையவர்களாக, மனதைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தவர்களாகவும், புறச்சூழல்களால் பாதிக்கப்படாதவர்களாகவும் இருப்பர்.