Author Topic: சிறு தொழில் தொடங்கலாமா?  (Read 5471 times)

Offline Global Angel


சிறுதொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்குவதற்கான உகந்த நேரமா இது?

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்:

புதுத் தொழில் தொடங்குபவர்கள் தொடங்கலாம். வரும் மே மாதத்திலிருந்தே தொடங்கலாம். குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு பார்வையில் குரு வருகிறது. கடக ராசிக்காரர்களும் புதுத் தொழில், முதலீடு செய்யலாம். கன்னி ராசிக்கு ஏழரை சனி இருந்தாலும், குரு 7வது வீட்டிற்கு மே மாதத்தில் இருந்து வருகிறார். அப்பொழுது அவர்களுக்கும் முடங்கிக் கிடப்பது எல்லாம் வர ஆரம்பிக்கும்.

விருட்சிக ராசிக்காரர்கள் படுமோசமான நிலையில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் இழந்து, நம்பிக்கையையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த மே மாதத்தில் இருந்து புதுத் தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

கும்ப ராசிக்காரர்கள் ஏற்கனவே அஷ்டமத்துச் சனியால் மிகவும் உடைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த குரு மாற்றத்தால் புதுத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்களெல்லாம் இந்த மே மாதம் 2ஆம் தேதியிலிருந்து புதிய முதலீடுகள் செய்து கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்.