சர்ச்சைக்குரிய சிரிப்பு ,சிலிர்ப்பு ,முக்கல்,முனகல்களே
சராசரி சப்தங்களாய் செவிமடுக்கும் பொழுது
சர்வ சாதாரணமாய் வெளிப்படும் உன் சின்னஞ்சிறு
குலுக் சிரிப்பு ,தும்மல்,முக்கல்,முனகல்,மட்டுமின்றி
ஆசுவாசபடுகையில் சிறு புயலாய் வெளிப்படும் சுவாசமும்
உன் கெஞ்சல்களின் முடிவிடபட்ட முடிவுரையும்
என் கொஞ்சல்களின் முத்தாய்ப்பு முன்னுரையுமான
உன் வெள்ளி விசும்பல்கள் என சப்தங்கள்
அத்தனையும் எனக்கு ,மோகக்கூவல்களாய்
மாறி தோன்றிடும் மாயம் எங்கனம்
- மாயம் -