Author Topic: தாய்மார்களுக்கான பயண டிப்ஸ்…  (Read 2968 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தாய்மார்களுக்கான பயண டிப்ஸ்…



பொதுவாக பயணங்கள் என்றாலே முறையான திட்டமிடல் இருந்தால்தான் இனிமையானதாக அமையும். அதுவும் சிறு குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் அவசியம். எல்லா விஷயங்களிலும் சிறப்பாக திட்டமிடும் ஆற்றலுடைய பெண்களுக்கு சில சிறிய முன்னெற்பாடுகளை செய்து கொண்டால் குழந்தைகளுடன் மேற்கொள்ளும் பயணமும் குதூகலமானதாக அமையும்.

அதற்கு சில ஆலோசனைகள்…

1. நீங்கள் செல்லவிருக்கும் இடத்தின் காலநிலைக்கு ஏற்றாற்போல், குழந்தைகளுக்கு ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பமான பகுதி என்றால் பருத்தி ஆடைகளையும், குளிர் பகுதி என்றால் அதற்கு ஏற்ற உடைகளும் அவசியம்.

2. கோடை விடுமுறைப் பயணம் என்றால், முன்னதாகவே டாக்டருடன் ஆலோசித்து குழந்தைகளுக்கான தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.

3. டிராவல் ஏஜென்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பயணம் என்றால் குழந்தைகளை அழைத்துச் செல்வது குறித்து அவர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது. இப்போது குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை பல ஏஜென்சிகள் செய்து தருகின்றன.

4. பயணத்தின்போது, குழந்தைகளின் ஆடைகளை எளிதில் எடுக்க வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும். பொம்மைகள், சிறிய விளையாட்டுப் பொருள்களை எடுத்துச் செல்வதும் அவசியம்.

5. எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் திரவ உணவுப் பொருள்களையே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். கூடுதலாக உணவுப் பொருள்களையும், தண்ணீரையும் எப்போதும் வைத்துக் கொள்வது அவசியம். அசைவ உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

6. பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும்போது, ஹோட்டல் அறைகளை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் அறை கிடைக்காமல் அலைவதைத் தவிர்க்கலாம்.

7. சிறிய குழந்தைகளை எப்போதும் தோளிலேயே தூக்கிச் செல்லுங்கள். உங்கள் உடலுடன் குழந்தையின் உடல் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தையின் உடல்நிலையை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

8. கார்களில் பயணிக்கும்போது, குழந்தைகளை காரிலேயே வைத்துவிட்டு இறங்கிச் செல்லக்கூடாது. முக்கியமாக ஏ.சி.யை ஆன் செய்துவைத்து விட்டுச் செல்லக்கூடாது
                    

Offline Anu

Rose kalakuringa...very nice padaipu ma.


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Thanks anuma ;)