Author Topic: ட்ரை முட்டை மசாலா  (Read 1097 times)

Offline kanmani

ட்ரை முட்டை மசாலா
« on: May 29, 2012, 05:09:39 PM »
ட்ரை முட்டை மசாலா

    1. முட்டை - 8
    2. வெங்காயம் - 2
    3. கறிவேப்பிலை, கொத்தமல்லி
    4. பச்சை மிளகாய் - 2
    5. இஞ்சி - 1 துண்டு
    6. பூண்டு - 2 பல்
    7. மிளகாய் வற்றல் - 2
    8. பிரியாணி மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
    9. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
    10. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    11. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    12. கடுகு, சீரகம் - தாளிக்க
    13. உப்பு
    14. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
    15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.

    எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கவும், மிளகாய் வற்றல் சேர்க்கவும்.

    இதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
    பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

    மசாலா வாசம் அடங்கியதும் முட்டையை சேர்த்து நன்றாக பிரட்டி 5 நிமிடம் வரை வைத்திருந்து எடுக்கவும்.

    சுவையான ட்ரை முட்டை மசாலா தயார்.