மனிதனும் தெய்வமாகலாம்
வானத்திலிருந்து பார்க்கும் போது பூமியில் தெரியும் நட்சத்திரங்கள் போல பல வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலிக்கும் நகரம் அது... அதன் ஒரு பகுதியில் மட்டும் நீல நிற வர்ணம் தந்திருந்தால் நம் கடல் அன்னை. சிற்றெரும்புகளை போல வரிசை வரிசையாய் வாகனங்கள்... காற்று கூட உள்புக முடியாத அளவு நெருக்கி கட்டப்பட்டிருந்த வீடுகள்... சிங்கார சென்னையின் ரூல்ஸ் மறந்து உருவாக்கியிருந்த மாதிரி சற்று விசாலமா இடம்... அங்கே செங்கல் சிமிண்டோடு அன்பையும் கலந்து கட்டிய ஒரு கோவில் (ஆதரவற்றோர் இல்லம்).
அங்கே படித்து வளர்ந்து வாழ்வில் முன்னேறி ஒரு கம்பெனியின் உரிமையாளராக இருக்கிறான் நம் கதையின் ஹீரோ அமுதன். களங்கமற்ற கண்கள், கோபம் வராத மூக்கு, அமுதம் போன்ற மொழிகளை பேசும் இதழ்கள், கொடுத்து கொடுத்தே சிவந்த கைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம், பேரழகன் இல்லையென்றாலும் அவன் அவளுக்கு ஆணழகனே... அவள்? அதாங்க நம்ம ஹீரோயின் அஞ்சலி. சுமாரான அழகு என்றாலும் பெண்மைக்கு உதாரணம் இவள் என்றே தோன்றும்.
உதவியாளராக அமுதனின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள் அஞ்சலி... ஆண்மை என்றால் வீரம் என்று நினைத்த அஞ்சலிக்கு அவன் பொறுமையும் மென்மையும் ஈர்த்தன. அமுதனும் அஞ்சலியின் சிம்ப்ளிசிடியும், அன்பான மொழிகளையும் கண்டு மயங்கி தான் போனான். அஞ்சலி வீட்டிற்கு ஒரே பெண், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். வயதான தந்தையையும் குடும்ப சுமையையும் சுமக்க வேண்டிய பொறுப்பு இவள் தலையில் வந்தாகிவிட்டது.
வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே கண்கள் கண்கள் மோதி காதல் இலை துளிர்விட ஆரம்பித்தது. காதல் என்பது ஒரு வார்த்தை அல்ல அது வாழ்க்கை என்பதை பல பேருக்கு புரியவைத்ததே இவர்கள் காதல் தான்... காதலின் புனிதத்தை காப்பாற்றியவர்கள் இவர்களே என அவார்டு கூட கொடுக்கலாம்... அப்படி ஒரு தெய்வீக காதல். அவர்கள் ஸ்பரிசங்கள் உரசிக்கொண்டதில்லை, ஆனால் டூவீலரில் பின்னல் உட்கார்ந்திருக்கும்போது அவள் சுவாசகாற்று அவன் முதுகில் படும் அந்த நிமிடம் அவன் சொர்கத்திற்கே சென்று வருவான். ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ் பரிமாற்றம் இல்லை, தினம் ஒரு காதல் கொஞ்சும் கவிதை மட்டுமே. பீச், பார்க், சினிமா இல்லை, கடவுளின் சன்னிதானம் மட்டுமே. இதிலிந்தே இவர்களின் காதலின் ஆழத்தை உணர முடியும். இந்த காதல் இலை செடியென வளர்ந்து மரமென நிமிந்து நிச்சயதார்த்தமும் முடிந்திருந்தது.
அப்பொழுது நிகழ்ந்ததே அந்த சம்பவம்...
விதி ஒருவர் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடும் என்பதை அமுதன் அஞ்சலியின் கதை நினைவூட்டியது..
அன்றொரு நாள் இரவு மணி எட்டை தாண்டியிருக்கும். வழக்கம் போல் அமுதனும் அஞ்சலியும் மனம் விட்டு பேச கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அந்த அமாவாசை இருளில் திடீரென வழியில் பவர் கட், தெருவிளக்கும் எரியவில்லை. வண்டி நிலைதடுமாரியபோது கீச்சென ஒரு சத்தம், எதிரில் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த செல்வாவின் மீது பைக் இடித்ததில் அவன் தூக்கி எரியப்பட்டு மயங்கி இருந்தான். செல்போன் டார்ச் லைட்டின் வெளிச்சச்சத்தில் செல்வாவை கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். உடம்பில் காயங்கள் இல்லையென்றாலும் தலையில் படாத இடத்தில் அடிபட்டதால் அவன் மூளை செயலிழந்து கோமாவில் இருந்தான். விஷயம் அறிந்த அவன் மனைவி அலறியடித்து ஓடி வந்தாள். செல்வாவின் மனைவி மீனாட்சி பெயரில் மட்டுமே அவள் மீனாட்சி குணத்தில் அவள் ராட்சசி. "அய்யோ என்னை இப்படி தவிக்க விட்டுடீங்களே... எந்த சண்டாளன் உங்களை இப்படி படுக்க வச்சானோ அவன் விளங்கவே மாட்டான்... நீ சம்பாதிச்சு தானே கால் வயிறு நிறையுது... இந்த கண்ணு தெரியாத புள்ளைய வச்சி வயித்துபொழப்புக்கு நான் என்ன பண்ண போறேனோ... இனி கண்டவன் கண்ணெல்லாம் வேற என்மேல படுமே... கடவுளே உனக்கு கருணையே இல்லையா..." என்று அழுது தீர்த்தாள். அமுதன் தனக்குள் குற்றவுணர்ச்சியால் துடி துடித்தான். பணம் கொடுத்தா மட்டும் மீனாட்சியின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? சிந்தித்தான், முடிவு செய்தான். அக்கா என்னை உங்க கூட பிறந்த தம்பியா நினைச்சிக்கோங்க, செல்வா அண்ணனுக்கு குணம் ஆகிற வரை உங்களுக்கு பாதுகாவலனா, உங்க குடும்ப சுமையையும் நான் தாங்கிக்கறேன்னு அமுதன் சொன்ன பின் தான் மீனாவின் அழுகை நின்றது. ஆனால் அஞ்சலியின் கண்களில் பொங்கி வழிவதற்கு தயாராக இருந்தது கண்ணீர், தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு ஆட்டோ பிடித்து கிளம்பிவிட்டாள்.
நாட்கள் ஓடியது... பஞ்சு மெத்தையில் படுத்தவன் வீட்டின் திண்ணையில் படுக்கும் நிலைமை. அமுதனை அஞ்சலிகிட்ட பேச கூட விடாமல் அன்பெனும் பேரில் சிறையில் அடைத்திருந்தால் மீனா... அப்படியே ஒன்றரை வருடம் கழிந்தது...
திடீரென ஒரு நாள் செல்வாவிற்கு நினைவு வந்திட்ட செய்தி கேட்டு மீனா, அமுதன், அஞ்சலி மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தார்கள்... தன் கணவனை சுயநினைவில் பார்த்த சந்தோஷத்தில் மீனா, தன் காதலன் திரும்ப தனக்கே கிடைக்கபோகும் மகிழ்ச்சியில் அஞ்சலி, தன் குற்றஉணர்வை துறந்து நிம்மதியில் அமுதன். அனைவரும் பேசி விடைபெறும் சமயத்தில் மீனாவை காணவில்லை. திரும்பவும் தலை சுற்ற ஆரம்பித்தது அமுதனுக்கும் அஞ்சலிக்கும், ஆனால் அடுத்த சில நொடிகளில் கையில் இனிப்புடன் வந்தால் மீனா தன் நன்றியை தெரிவிக்க. ஆம் பாறாங்கல்லாய் இருந்த மீனாவின் மனது இப்பொழுது மென்மையான பூவாய் மாறி இருந்தது. வார்த்தையின்றி கண்ணீரால் நன்றி தெரிவித்தான் செல்வா. அஞ்சலியோ ஆற்றாமல் தன்னவனின் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள். இன்று அவள் கண்ணீர் துளியில் வருத்தம் இல்லை, ஆனந்தம் மட்டுமே இருந்தது.
அடுத்த சில வாரங்களில் அமுதன் அஞ்சலியின் திருமணம் எளிமையாக நடந்தது. புதுமண தம்பதிகள் இனிய இல்லறத்தில் அடி எடுத்து வைத்தார்கள். அவர்கள் தனக்கென ஒரு குழந்தையை உருவாக்கவில்லை. ஆனால் பல நூறு குழந்தைகளுக்கு தாய் தந்தை ஆனார்கள். அமுதனின் முயற்சியால் செல்வாவின் மகனுக்கும் கண் கிடைத்தது.
வாழ்வில் ஒரு மனிதன் தனக்கென மட்டும் வாழாமல் பிறருக்காக வாழ்வதே ஒரு தனி சுகம் தானே !!!
note:
intha kathai naan padithathu
