ஹெல்தி ஜூஸ்
தர்பூசணி - கால் பாகம்
ப்ளூ பெரி - ஒரு கப்
ஆப்பிள் - ஒன்று
வாழைப்பழம் - பாதி
எலுமிச்சை - பாதி
ஆப்பிள் வினிகர் - ஒரு தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
சாலட் தக்காளி - பாதி
அன்னாசி - ஒரு கப்
இஞ்சி - பூண்டின் அளவு
ஏலக்காய் பொடி - ஒரு கிள்ளு
புதினா - 5 இதழ்
மல்லித் தலை - 2 செடி
உப்பு - ஒரு கிள்ளு
முதலில் பழங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியும், புதினா மல்லித் தழைகளும் ப்ரஷாக இருப்பது அவசியம்.
எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
நன்கு அரைத்ததும், வடிக்கட்டிக் கொள்ளவும்.
மணமான, சுவையான ஜுஸ் ரெடி. ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும். வெயிலுக்கும், செரிமானத்திற்கும் ஏற்றது.