இது என்னுடைய கன்னி எழுத்து முயற்சி, என்னுடைய எழுத்துலக சாம்ராஜ்யத்தை தொடர்வது நண்பர்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்தே.....
ராஜாவிற்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம்.ராஜா பறவைகளின் மீது அதீத அக்கறை கொண்டு பல பறவைகளும், சிறு சிறு குருவிகளும் வீட்டிலேயே வளர்த்து வந்தான்.அந்த பறவை இனங்களுள் ஒன்றுதான் நம் கதையின் நாயகியான பெண்கிளி. அந்த கிளி கோவை பழம் போல் செவ்வாயுடனும், மிகுந்த வனபுடனும்,பார்ப்பார்கள் மையல் கொள்ளும் அளவிற்கு அழகுடனும் இருந்தது.கிளியையும் மற்ற பறைவைகளை போல் கூண்டுக்குள் அடைத்து சுவையாக உணவிட்டு, சீக்கு வராமலிருக்க மருந்திட்டு போற்றி பாதுகாத்து வந்தான்.
அக்கிளி மேலே பறந்து செல்லும் பறவைகளையும், தன சக இனமான கிளிகளையும் பார்த்து பல நாட்களாய் நாம் சுதந்திரமாக பறப்பது எப்போதென ஏக்கத்திலேயே இருந்தது.அந்த நேரத்தில் வான் வழியாக பறந்து சென்ற கூட்டு கிளிகளில் ஒரு ஆண்கிளி கூண்டு கிளியை நெருங்கி இப்படி அடைபட்டு இருகிறாயே, ஒரே உணவையே உன்கிறாயே, என்னுடன் வா சுதந்திரமாக பறக்கலாம், விதம் விதமாக உணவு உண்ணலாம் என தந்திர வார்த்தை கூறியது.
ஏற்கனவே ஏக்கம் கொண்டிருந்த கூண்டுக்கிளி அந்த மந்திர வார்த்தைக்கு இணங்கியது. தனது எஜமானன் கண் அயர்ந்த வேளையில் ஆண்கிளியின் துணை கொண்டு கூண்டை விட்டு வெளியேறியது. பின் மிக சுதந்திரமாக வானில் உயர உயர சிறகை விரித்து பறந்தது ஆபத்து இருப்பதை உணராமல்.
உயர உயர பரந்த கிளிக்கு வல்லுருகளாலும், கழுகுகளாலும்,பெரும் ஆபத்து வந்ததை கண்ட ஆண்கிளி கூட்டு கிளிகளின் துணை கொண்டு கூண்டு கிளியை காப்பற்றியது.
வனப்புடன் இருந்த பெண்கிளி மீது அந்த ஆண்கிளி மையல் கொண்டது,
தனியாக காலம் கழித்த பெண்கிளி தனக்கு ஒரு ஜோடி கிளி வருவதை எண்ணி மிக சந்தோசம் அடைந்தது. சந்தோசம் நிலைக்க வில்லை அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. கூட்டு கிளியில் ஒன்றான அதன் ஜோடி கிளி அந்த ஆண் கிளியின் செய்கையை கூட்டு கிளிகளிடம் கூறி அகிளிகளின் துணைகொண்டு கூண்டுகிளியை கொத்தி துரத்தியது. காயம்பட்ட பெண்கிளி மதிகெட்டு மானம் மிழந்தோமே, நாம் கூண்டிற்கே சென்றுவிடலாம் என தீர்மானித்து திரும்பியது கூண்டிற்கு. தான் வாழ்த்த கூண்டில் வேறு ஒரு கிளி இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்தது.
தன் கூண்டிற்குள் நுழைய முயற்சி செய்தது அப்பென்கிளி. முயற்சிக்கும் நேரம் ராஜா அந்த பக்கம் வந்தான். ஏற்கனவே கூண்டில் இருந்த கிளியை கவர்ந்து சென்ற கிளிதான் வந்துள்ளதாய் தவறாக எண்ணி அக்கிளியை விரட்டி அடித்தான்.அந்த பெண்கிளி கூண்டுகிளியாகவும் வாழ முடியாமல், கூட்டு கிளிகளோடும் வாழ முடியாமல் பயங்கர விரக்தியுடன் தனிமை படுத்தபட்டது.
நீதி : அவர் அவர் இடத்தில அவர் அவர் வாழ்வதே சிறப்பு..
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால் தீங்கு வந்து சேரும்.