"என் முதல் ஹீரோ"
அன்பின் உருவம் அப்பா!
அர்ப்பணிப்பின் மறுவடிவம் அப்பா!
தன் கனவுகளை மறந்து
என் கனவுகளை
நனவாக்கியவர் அப்பா !
சொல்லாமல் பல தியாகங்கள்!
எண்ணாமல் பல உதவிகள்!
என் சிரிப்பில் மகிழ்ச்சி காணும்
அன்பு உறவு அப்பா !
விழுந்த போதெல்லாம்
கைதூக்கி நிறுத்தியவர் அப்பா!
வென்ற போதெல்லாம் அமைதியாக மகிழ்ந்தவர் அப்பா!
அன்பின் அர்த்தம் கேட்டால்
"அப்பா" என்று உன்
பெயர் சொல்வேன்!
ஆசையின் உயரம் கேட்டால்
உன் மனமே என்று சொல்வேன் !
என்னுயிர் அப்பா !
உன் அன்புக்கு ஈடாக இந்த உலகமே வந்தாலும் போதாது !
நீ என் தந்தை மட்டுமல்ல,
பெருமையாக சொல்கிறேன்
என் வாழ்வின் "முதல் ஹீரோ" என்றும் நீ தான் அப்பா !