Author Topic: ஆணவப் படுகொலை  (Read 191 times)

Offline Thenmozhi

ஆணவப் படுகொலை
« on: July 03, 2026, 05:57:59 PM »
     ஆணவப் படுகொலை

காதல் இரு உயிர்களின் மொழி !
காதலை கட்ட முடியாது
சாதியின் சங்கிலியால்..
ஆணவம் கண்களை மூடும்போது, இரத்தமாகின்றன அன்பின் இதயங்கள் !

"குடும்ப மரியாதை" என்ற பெயரில்
கொல்லப்படுகிறது மனிதம் தினமும் !
மண்ணில் புதைகின்றன
மலர வேண்டிய கனவுகள் !

அம்மாவின் கண்ணீர் ஆறாக ஓடுகிறது...
இரு உயிர்களை அழித்தாலும்,
யாராலும் அழிக்க முடியாது
உண்மையான காதலை...
சாதியை விட மனிதநேயம் உயர்ந்தது !
அன்பே வாழ்வின் அடையாளம்,
ஆணவம் அல்ல !

ஆணவப் படுகொலையை ஒழிப்போம்!




Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 172
  • Total likes: 510
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Re: ஆணவப் படுகொலை
« Reply #1 on: July 05, 2026, 07:09:02 PM »
சாதி உயிரை விட உயர்ந்ததல்ல...
மனிதநேயம் தான் உயர்ந்தது.
அன்பை கொன்றால் வெற்றி இல்லை,
மனிதத்தை இழந்த தோல்விதான்.
ஆணவப் படுகொலைகள் முற்றிலும் ஒழியட்டும்.