Author Topic: மழையின் மடியில்!!  (Read 603 times)

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 356
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மழையின் மடியில்!!
« on: June 28, 2026, 08:10:05 AM »
சிந்தலாய் பெய்யும் தூறலைக் கண்டதும்,
சிறுபிள்ளையாய் மாறி துள்ளிக் குதித்தது மனது!
முழுமையாய் நனைந்து அதில் திளைத்திடவே ஆசை!!

​மேலே பார்த்தால் அந்த கறுத்த மேகங்கள்,
ஒன்றோடு ஒன்று விளையாடி மகிழ்வது போல்!
பூமிக்கு குடை பிடிக்க மெல்ல நகர்ந்து வர,
பச்சைப்பசேல் என்ற புல்வெளியில்,
வண்ண பட்டாம்பூச்சியாய் நான் படுத்து,
இயற்கையின் மடியில் என்னை நானே தொலைத்தேன்!!

​சிறு தூறல் சாரலோடு என்னை தீண்டி,
என்னை வருடிச் செல்வது போல் ஒரு சுகம்!
அம்மாடியோவ்!! அந்த மண் வாசனை தரும் நிறைவு!
மனதில் இருந்த அத்தனை பாரங்களும்,
அந்த மழைத்துளியோடு கரைந்து காணாமல் போனதே!!!

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1296
  • Total likes: 4514
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: மழையின் மடியில்!!
« Reply #1 on: June 30, 2026, 10:50:26 PM »
முதல் மழை துளிகள்
மண்ணை முத்தமிடுகையில்
புறப்படும் மண்வாசனை
அலாதி மகிழ்ச்சி தான்

"அந்த மண் வாசனை தரும் நிறைவு!
மனதில் இருந்த அத்தனை பாரங்களும்,
அந்த மழைத்துளியோடு கரைந்து காணாமல் போனதே!!"

தொடர்ந்து எழுதுங்கள் சகோ  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 356
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: மழையின் மடியில்!!
« Reply #2 on: July 05, 2026, 05:08:01 AM »
Thank you so much😊

Offline Thenmozhi

Re: மழையின் மடியில்!!
« Reply #3 on: July 05, 2026, 02:15:06 PM »
மழையின் மடியில் மனம் நனைந்ததே !
மண்ணின் மணத்தில் நினைவு மலர்ந்ததே !
துளித் துளியாய் நம்பிக்கை பொழிகிறதே !
துயர மேகங்கள் தூரம் விலகுகிறதே !

பசுமை போர்வை பூமி போர்த்துகிறதே !
பறவைக் குரலில் காலை விடிகிறதே !
இயற்கை பாடும் இனிய ராகத்தில்,
இதயம் மலர்கிறதே மழையின் மடியில் !