Author Topic: இந்தப் பழம் உங்கள் ஊரில் கிடைக்கிறதா?  (Read 11 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227366
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதுதான். மேலும் உடலை குளிர்ச்சியாகவும் போதுமான தண்ணீர் சத்து இருக்கும்படியும் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களை வெயிலிலிருந்து பாதுகாத்து உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல உணவுகள் உள்ளன அதில் ஒன்றுதான் லிச்சி பழங்கள் (litchi fruit). உங்கள் டயட்டுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது

நீங்கள் இந்த பழத்தை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்...

* இந்த லிச்சி பழத்தில் நார்சத்து அதிகமாக உள்ளது இது உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பழம் சாப்பிட மிகவும் ருசியாக இருந்தாலும் இதில் குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. எனவே எப்போதாவது உங்களுக்கு தண்ணீர் சத்து மிகுந்த இனிப்பான எதையாவது சாப்பிட வேண்டும் போன்று தோன்றினால் இந்த பழத்தை ஒரு கடி கடிக்கலாம்.
* நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்துக்கு நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் தடை மலச்சிக்கல். லிச்சி பழங்கள் இந்த பிரச்சனையை பார்த்துக் கொள்ளும். இது குடல் இயக்கத்தை எளிதாக்கி உடலில் தேவையான ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக் கொள்ள உதவும்.
* இந்த பழத்தில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ள ஒரு உடல் ஆரோக்கியமாக இயங்கும் இதனால் உடல் எடையும் அரோக்கியமாக இருக்கும்.

* இறுதியாக லிச்சி பழங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. இதில் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சமப்படுத்த நீங்கள் முயற்சிக்கும் போது சிறப்பாக செயல்படும். நீங்கள் மிகவும் ஆற்றலுடன் இருப்பதாக உங்களை உணரவைத்து பல உடல் வேலைகளை செய்ய உதவும் இதன் மூலம் உடல் எடை குறையும்.
உங்கள் உடல் எடையை சரியாக வைக்க நீங்கள் நன்றாக சாப்பிடுவதோடு, உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

சிறுவர்களுக்கு இந்தப் பழம் வழங்குவது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இருக்கின்றன. எனவே அந்த விஷயத்தில் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று செயல்படவும்.