Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 405  (Read 247 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 405

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Rahmathulla



        திருமண பந்தம்



திருமணம் ஆகி என் மனைவியுடன் நனையும் முதல் மழையே...

உன்னை என் பெற்றோர் பார்க்கும் முன் நான் உன்னை பார்த்திருந்தாள்
அன்றே உன்னை மனம் முடித்திருப்பேன்.
எந்த நேரமும் உன் சிரித்த முகத்தை பார்த்து கொண்டிருக்க இந்த கணவனுக்கு வேறு என்ன ஆசை இருக்க போகுது..
ஊரே சொல்லும் அவள் அழகு என்று..
நான் மட்டும் சொல்வேன்..
இல்லை இல்லை அவள் பேரழகி என்று....

ஏனென்றால் அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை. குணத்திலும் நீ சிறந்தவள். என் பெற்றோருக்கு கண்ணியம் குடுப்பவள்..ஆக சிறந்த பேரழகி என் மனைவி என்பேன்...

உறவினரின் திருமணம் நடந்து முடிந்த பிறகு.

வாங்க நம்ம வெளியே சுற்றி பார்க்க போலாம் என்று கூப்பிட உடனே.மழை வர தொடங்கியது.. அப்போ தான் உன் முகத்தில் பெரும் சந்தோசம். iiiii jolly மழை வருது போலாம் போலாம் என்று சொல்லி...

இந்த தருணம் இப்படியே நீளட்டும்..

மழையை ரசிப்பேன் அவளுக்கும் எனக்கும் பிடித்த மழையை ரசிப்போம்...

மழையில் நனைகின்ற போது அவளுடைய முகத்தை பார்த்தால் உன்னை விட பேரழகி வேறு யாரு இருக்க முடியும்..
நீ தான் என்றும் என் வசந்த காலமே...

தூறல் ஒவ்வொன்றும் உன் நெற்றியில் விழுந்து முத்து முத்தாய் சிதறிய போது.

நான் துடைக்க கை நீட்டினால் வேண்டாம் மழை துளி என் முகத்தை  வருடி செல்கிறது. என் முகம் இன்னும் பிரதிபலிக்கும் என்றாய்..

அப்போ தான் புரிந்தது
மழை கூட உன்னை அலங்காரம்
பண்ண வந்திருக்கும் என்று..

எனக்கு மட்டும் தெரியும் ரகசியம் நீ மழையில் நனைந்தால் வானம் கூட பொறாமைப்படும். உன் அழகை கண்டு..

மழையில் நனைந்தோம்.
அந்த சாலையோரம் நானும் அவளும் விரல் கோர்த்து நடக்கின்றோம்..

எத்தனை சந்தோசம் என்னில் அடங்கா மகிழ்ச்சி. மழையே நிற்கக்காமல் தொடர்ந்து பெய்து விடு.. அவளுக்கு என்னையும் உன்னையும் தான் பிடித்திருக்கிறது..
 
 என் துணையாக வந்தவள் சந்தோசம் தானே என் சந்தோசம்.
இன்றைய தினம் முழுதும் அவளும் நானும் மழையில் நனைவோம்.
 
சாலையில் நடந்து சென்று பல ஸ்வரஷ்ய கதைகள் பேசி மகிழ்வோம்..
அவளுக்கு எனக்கும் இந்த நாள் தான் இனிய நாள்...
 
அவள் என்னை நம்பி வந்தவள் பெற்ற தாய் தந்தை மேல் வைத்த பாசத்தை விட  இப்பொழுது என் கணவன் தான் எல்லாம் என்று என்னிடம் தஞ்சாமானவள்.. என் மனைவிக்கு என்ன பரிசு பொருள் குடுத்தாலும் மழை உனக்கு ஈடு  எந்த பரிசும் நிகர் இல்லையே...

இனி தான் நம் வாழ்க்கை ஆரம்பமாக போகிறது ... நீ என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்... உன்னோடு நான் வாழும் காலமெல்லாம்  என் வாழ்வில் அர்த்தம் புரிய போகிறது..   இந்த ஜென்மம் மட்டும் நீ எனக்கு போதாது இன்னும் ஏழு ஜென்மம்..

உன்னுடன் வாழ   அந்த வானத்து மழை துளிகளும் அந்த  வானவர் தேவதைகளும் மற்றும் எல்லாம் வல்ல இறைவன் நம் இருவரையும்  ஆசிர்வாதம் செய்யட்டும்...

வாழ்வோம் இந்த மன்னிலும்.. நம் திருமண பந்ததை ஊர் மெய்சிலிர்த்து  பார்க்கட்டும்.. நம் கனவுகள் அனைத்தும் வெற்றி கிடைக்கட்டும்.

     TQ
Priyamudan
Rahmathulla
« Last Edit: June 08, 2026, 11:32:32 PM by Rahmathulla »

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1301
  • Total likes: 1156
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
கார்மேகங்கள் ஒன்று கூட 
காற்றில் மரங்கள் அசைந்தாட 
வந்தது மழை அடைமழையாய்

அடைமழையில் நனைந்து, 
அவள் கரம் பிடித்து, 
மழையில் நனைவது பிடிக்கும் எங்களுக்கு

நம் மனம் சேர்ந்தது போல் 
வானத்தில் கருமேகங்கள் 
ஒன்று கூடி அடைமழையாய் பெய்கிறது 
நம் இதயம் ஒன்று சேர்ந்ததால் 
நமக்குள் வந்தது காதல் மழை

இருண்ட மேகங்களுக்குள் 
ஒளிந்திருக்கும் அடைமழையைப் போல
நம் காதலும் நமக்குள் 
ஒளிந்திருக்கிறது அன்பாய் 
நீ என் மேல் காட்டும் 
அன்பு மழையைப் போல

மழையின் போது வானத்தில் 
வரும் மின்னலை 
உன்னுடன் மழையில் நனையும் போது 
நீ என்னை பார்க்கும் போது காண்கிறோம்
அந்த மின்னலை உன் கண்களில்

எல்லோரையும் நனைத்து விட்டு செல்லும்
இந்த மழை எங்களை மட்டும் ரசித்து விட்டு செல்கிறது

மழைத்துளி எங்கள் மேல் விழும் போது
எங்களை அறியாமல் 
உனக்காக ஏங்குகிறது என் மனம் 
உன் அணைப்பிற்காக 
துடிக்கிறது நம் இதயம்

மழையில் நனையும் போது நீ விடும்
மூச்சுக்காற்று அரிய பொக்கிஷமாய் தோன்றுகிறது
நம் நெஞ்சுக்குள் 

உன் உதடுகள், பனி விழும் காலைப்
பொழுதில் பூத்திருந்த மலர் போலவும்
மழைத்துளிகள் அந்த பனிபோலவும்
தெரிந்தன எங்களுக்கு

மழையில் நனைந்த பாதையில் 
நடக்கும் போது 
உன் காலடி ஓசை 
இசையாய் மாறுகிறது எங்களுக்கு

அடைமழையில் ஆனந்தமாய் 
காதல் வெள்ளத்தில் மூழ்கினோம் நாங்கள் 
எங்களையே மறந்தோம் 
மண்ணின் மனம் எங்களை 
ஆனந்த நடனம் செய்ய வைத்தது



Offline Sethu

  "மழையில் என் மகாராணி"

சிந்தும் மழைத்துளியை போல்
நீ செல்ல உன் நினைவுகள் மட்டும் குளம் போல் என்னுள் தங்கியது அன்று என் எண்ணம் அனைத்தும் முன்னாள் காதலியை நினைத்து வருத்தத்தில் இருந்தது...

மனதிற்குள் ஒரு சின்ன ஏக்கம்
நம் வாழ்வில் இனி சூரியன் வராதா என்று ...
வெளிச்சம் வராதா என்று..
ஏங்கி  வாடியது என் மனம் !
 
அன்று எனக்கு வார விடுமுறை பொழுது சாயும் நேரம்
திடீரென்று இடி மின்னலுடன் கூடிய மழை வர
சொட்டு  வைக்க
ஆரம்பித்தது மழைத்துளி !

செல்லமே மொட்டை மாடிக்கு சென்று நான் துவைத்து வைத்திருக்கும் துணியை
எடுத்து வா என கேட்டது
அங்க அம்மாவின் குரல் !

நானும்  மழையில் நனைந்து கொண்டு  எடுக்க சென்றேன் துணிகளை...
எதிர் வீட்டில்  என்னை போல துணிகளை எடுக்க
வந்தாள் என்னவள் !

இருவரும் மழையில் நனைந்து கொண்டே துணிகளை எடுத்தோம் மழை நேரத்தில் நிலாவின் ஒளியைப் போல அவளது பார்வை என்மீதுபட்ட போதும்
என் மனம் அறியவில்லை
இவள் தான் எனது
மகாராணி என்று !

அவள் பார்த்து விட்டு
சென்று விட்டாள்
மழையும் கொட்டி தீர்த்தது
ஆனால் என் நெஞ்சில்  ஆரம்பமானது அடை மழை ! அவளை நினைத்து இருண்டுபோன எனது வாழ்வில் சந்தோஷத் தென்றல்
அடிக்க ஆரம்பித்தது !

வானத்தில் மழை நீராக
இருக்கும் போது மழை நீருக்கு
ஒரு இலட்சியம் கிடையாது ! வானில் இருந்து பூமிக்கு
வந்த பின்னரே மழை நீரின்
சேவை தொடங்குகிறது ..
அது போல என்னவள்
என்னுடன் சேர்ந்த  பின்னே
எனது வாழ்வில் இருள்  நீங்கி இன்பத்தில் என் உலகம்
இயங்க ஆரம்பித்தது !

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 324
  • Total likes: 708
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Mellisaithooralgal
இந்த மழை இன்னும் கொஞ்ச நேரம் நிக்காம பெய்யட்டும்...

ஏன்னா, இப்போ நான் வாழ்ந்துட்டு இருக்கிற இந்த நொடி,
என் வாழ்க்கையிலேயே ரொம்ப அழகான நொடி...

இத்தனை நாளா மனசுக்குள்ள இருந்த எல்லா பயங்களும், எல்லா காயங்களும், எல்லா காத்திருப்புகளும்...

இந்த மழையோட சேர்ந்து மெல்ல மெல்ல கரைஞ்சு போற மாதிரி இருக்கு...

உன் பக்கத்துல நடக்கிறப்போ, உலகமே எங்கயோ தூரமா இருக்கு...
இப்போ எனக்கு கேட்குறது மழை சத்தம் மட்டும் இல்ல...

'இனிமேல் நீ தனியா இல்ல...' ன்னு சொல்லுற ஒரு நிம்மதி....

நான் எவ்வளவு நாளா இந்த ஒரு  நோடிக்கு எதிர்பாத்தேனு தெரியுமா...?

எதுவும் பேசாம, உன் பக்கத்துல நின்னுட்டு, நீ இருக்கிர இந்த
உணர்வை மட்டும் மனசு முழுக்க சேமிச்சு வைக்கணும் போல இருக்கு...

இனிமேல் எதுவும் வேண்டாம்...
உன் கூட காலையில விழிக்கணும்...
உன் கூட சண்டை போடணும்...
உன் கூட சிரிக்கணும்...
உன் கூட வயசாகணும்...
அவ்வளவுதான்...

இந்த உலகம் எனக்கு என்ன கொடுக்துச்சு தெரியல...

ஆனா, உன்ன மட்டும் கொடுத்ததுக்காக, உலகத்துக்கு நன்றி சொல்லணும் போல இருக்கு...

அதனால...

இந்த நொடி மட்டும் கடந்து போயிடக் கூடாது...

நீ என்னை பார்த்துக்கிட்டு இருக்குற இந்த பார்வை, நான் உன் கையை பிடிச்சிருக்குற இந்த உணர்வு, நம்மை சுற்றி பெய்யுற இந்த மழை...
இதெல்லாம் இப்படியே நின்னு போயிடணும்..

ஏன்னா...

இத்தனை நாள் நான் வாழ்ந்த வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கலாம்...

ஆனா...

இப்போ இந்த மழையில,

உன் பக்கத்துல நிக்கிற இந்த நொடி தான்,

நான் உண்மையாவே 'வீடு' சேர்ந்த மாதிரி இருக்கு...


Offline Thenmozhi


   "ஏழைகளுக்கு மழை போராட்டம்"

மழை பலருக்குக் கொண்டாட்டம்
எங்களுக்கோ திண்டாட்டம்
மழையை  இரசிப்பதைவிட
வாழ்க்கைப் போராட்டம் தான்
நம் கண்முன் வந்து நிற்கும்
ஏழையாகப் பிறந்த எங்களுக்கு !

வசந்த காலத்தின் வரவே மழை !
எங்களுக்கோ பெரும் சவால் !
கருமுகங்கள் சூழ்ந்து மழை
வரும் அறிகுறி தென்பட
ஏழை எங்களின் மனதில்
தோன்றும் வாழ்க்கைப் போராட்டம்!

குடிசை ஒழுகாத இடம்
எதுவும் இல்லை !
முளைக்கவிட்ட பயிர்கள் எல்லாம்
மிதக்கப் போகின்றனவே
மழை வெள்ளத்தில்..
வாழ்வாதாரத்துக்கு என்ன பண்ணுவது...

மழையில் நனைந்து விட்டன
உடைகளும் ,புத்தகப் பைகளும்
நாளை எப்படி அனுப்புவேன்
பாடசாலைக்கு என் பிள்ளைகளை!
வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள்
எல்லாம் மழையில் நனைந்து விட்டனவே
எவ்வாறு உணவு கொடுப்பேன்
என் பிஞ்சு பாலகர்களுக்கு...
குட்டிக் குழந்தைகளை எங்கே
நான் தூங்க வைப்பேன்
ஈரமின்றி  இடம்
எதுவும் இல்லையே !

பக்கத்து வீட்டில் படுத்துறங்க
இடம் கேட்டால்..
பஞ்சப்பட்ட உங்களுக்கு
பங்களா கேட்குதா என்று
பலகதை பேசுவது எங்கள்
செவிகளில் விழ..
இவ் வன்சொற்களை விட
மழையில் நனைவது மேல் என்று
ஏழை எங்களின் மனம்
அமைதி கொள்ளும் !

பச்சிளம் குழந்தைகளின்
பசி போக்க பாத்திரம் ஏந்தி நிற்க
பட்டினியாய் இருக்கும் ஏழை
எங்களுக்கு உணவு போடாமல்
தெருவோரங்களில் வீசுகின்றனர்
மீதமுள்ள உணவுகளை...

மழை என்று கடை ஓரங்களில்
ஒதுங்கி நிற்க என் குழந்தைகள்
திருட்டு பசங்க ஓரமாய் போய்
நில்லுங்க வியாபாரம்
நடக்கணும் என்று
கடை முதலாளிகள் !

என்னடா உலகம் இது?
காதலர்கள் குடை இருந்தும்
மழையில் நனைய ஆசைப்பட..
ஏழைகள் நாங்கள் மழையில்
நனையாமல் எப்படி
தூங்குவது என்று சிந்திக்க..

பணக்காரனுக்கு மழை
என்பது குதூகலம் !
ஏழைகள் எங்களுக்கு
மழை என்பது போராட்டம் !



















« Last Edit: June 09, 2026, 01:09:56 AM by Thenmozhi »

Offline Madhurangi

  • Sr. Member
  • *
  • Posts: 257
  • Total likes: 898
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
மழை வரும்போதெல்லாம் — அது
கூடவே உன் நினைவுகளையும்
அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறது!

மண்வாசனையினை மிஞ்சிய உன் வாசனை..
சிலிர்த்த குளிருக்கு இதமான உன் அணைப்பின் கதகதப்பு..
வெட்கமூட்டும்  உன் காதல் மொழிகள்..
நினைத்த நொடியில் புலனைந்தும் உன் அருகாமையினை
அருகழைத்து வருகின்றது..

கையிலிருந்த குடை துறந்து,
நம்  நிலை மறந்து,
சிறு பிள்ளையாய் உன்னுடன் சேர்ந்து
நான் குதூகலித்த அந்தத் தருணங்கள்...

கண்ணியத்துடன் கனிவையும் காட்டிய
உன் பேராண்மையுடன் கூடிய
காதல் பார்வைகள்...

"மழை வரும் தருணங்களிலெல்லாம்
இனி வாழ்நாள் முழுதும் சேர்ந்தே நனைவோம்" என்று
நீ எனக்குள் தந்துபோன அந்த உறுதிமொழிகள்...

அன்று,
மழையின் சாரலிலும் உன் ஸ்பரிசத்திலும்,
கையிலிருந்த குடையோடு சேர்த்து,
நம் வசத்தையும் நாம் சேர்ந்திழந்த அந்தத் தருணங்கள்...

என் அருகாமையில் நீயிருந்தும்,
என்னை விடவும் நீ மழையினை அதிகம் ரசிக்கிறாய் என,
சின்னதாய் பொறாமை கொண்டு
நான் உன்னோடு சண்டை போட்ட நினைவுகள்...

"இப்பொழுதே மீண்டும் வேண்டும்...
உன்னோடனான அந்த மழைத் தருணம்!" என
குழந்தையாய் அடம் பிடிக்கும் என் மனதிற்கு
நான் என்னவென்று சொல்லி புரிய வைக்க?

என் கையில் இன்று எஞ்சியிருப்பதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும்தான்...
நிஜமான நீ இல்லை என்பதை


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1285
  • Total likes: 4454
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மெல்ல மெல்ல வானம்
கருமேகங்களின் கவிதையை
பூமியின் மீது எழுதத் தொடங்கிய மாலை அது...

முதல் துளி விழுந்தபோது,
மண்ணின் மணம்
காதலின் முதல் கடிதமாய்
காற்றில் கரைந்தது.

அந்த மழையின் நடுவே,
ஒரே குடையின் கீழ்
இரண்டு இதயங்கள்
சாலையோரம் நடந்தன
உடல்கள் இரண்டு என்றாலும்,
உள்ளங்கள் ஒன்றாய்

குடையின் விளிம்பில்
சரிந்து வந்த துளிகள்,
அவளின் கன்னத்தில் விழ,
அவன் விரல்கள்
அதை துடைக்கத் துடித்தன

ஆனால்,
தொட்டுவிடாமல் தடுத்தது
நாணம் என்ற இனிய காவலன்

சாலையோர மரங்கள் எல்லாம்
அவர்களைப் பார்த்து
மெல்லச் சிரித்தன...
பூக்கள் கூட
மழையில் நனைந்தபடி
அவர்களின் காதலுக்கு
ஆசீர்வாதம் தூவின.

அவன் பேசாத வார்த்தைகளை
அவள் கண்கள் வாசித்தன...
அவள் சொல்லாத உணர்வுகளை
அவன் இதயம் மொழிபெயர்த்தது.

மழை அதிகரித்தது.
குடை சிறியதாகியது
ஆனால்
அவர்களின் உலகத்தில்
காதல் விரிந்தது

பிடித்திருந்த குடையை  கூட
காற்று, சற்று அவர்களை விட்டு
விலகி செல்ல வைத்தது
கூடவே அவர்களின் நாணமும்

அவன் அருகில் நடந்த ஒவ்வொரு நொடியும்
அவளுக்கு ஒரு வசந்தம்...
அவள் அருகில் இருந்த ஒவ்வொரு மூச்சும்
அவனின் சொர்கம்

பாதைகள் நீண்டிருந்தன
ஆனால்
அவர்களுக்கு அவசரம் இல்லை...
ஏனெனில்,
அந்த மழை நின்றுவிடக் கூடாது என்பதே
இருவரின் ரகசிய பிரார்த்தனை.

ஒரே பார்வையின் கீழ்
ஆயிரம் காதல் கதைகள் பிறந்தன.
மழை நின்ற பிறகும்,
அக் காதல்
தொடர்ந்துகொண்டு தானிருந்தது

இன்றும்
மழை பெய்யும் போதெல்லாம்,
இதயங்களில் பொழிந்துகொண்டே இருக்கிறது
அந்நிமிடங்கள்
ஒரு அழகிய கவிதையாய் !!


***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
   "மழையில் மலரும் 
       காதல் நினைவுகள் "

காலையில் கண் முழித்ததும்
இன்று கல்லூரி செல்ல வேண்டுமா?
என்று ஒரு குழப்பமான மனநிலை!
டெலிபோன் மணி
ஒரு முறை"டிரிங் " என
ஒலியெழுப்பிவிட்டு
அணைந்து,
மீண்டும் ஒலியெழுப்ப
ஓடிப் போய் எடுத்தேன்
துள்ளிக் குதித்து
குதூகலத்துடன்...

மாலை  வருகிறேன்
கல்லூரி வாசலில்
காத்திரு என்று ஒரு
குரல்...  கிளம்பினேன்
கல்லூரிக்கு உற்சாகமாக...
கல்லூரியின் மணி
அடித்து முடிந்து நான்
காத்திருந்த மாலை நேரம்....

வானம் மேகங்களை
போர்த்திக் கொண்டு 
பூமிக்கு பரிசாக
அனுப்பி கொண்டிருந்தது
மழை துளிகளை ....
கல்லூரி வாசலில் நின்றாலும்
என் விழிகள் சாலையின்
முடிவில்!

மழை பெய்தாலும்
ஒருவனின் வருகைக்காக
காத்திருந்தது என் மனம் !
தொலைவிலிருந்து  என்னை
காண வந்தான்
கண்ணில் காதலுடன்
அவன் !

அவன் மேல் விழுந்தன
மழைத்துளிகள்...
ஆனால் அவன் கண்கள்
தேடிக் கொண்டிருந்தது
என்னை மட்டுமே...

என்னைக் கண்ட
அந்த நொடி மழையின்
குளிரையும் மறந்து
ஆயிரம் சூரியன்கள் மலர்ந்தன
அவன் முகத்தில் ....
இவ்வளவு மழையில்
ஏன் வந்தாய்? என்று கேட்டேன்
மழை வருவது பூமியை பார்க்க
நான் வருவது
உன்னை பார்க்க என்று 
சொன்னான் புன்னகையுடன்...
அவ்வார்த்தைகளில்
நனைந்தது என் மனம்....

மழை கொட்டோ கொட்டோ
என்று கொட்டிக் கொண்டிருக்க
சாலையோரம் தண்ணீர்
பெருக்கெடுத்து  ஓட ...
எங்களுக்காக மட்டும்
நின்றது போல் இருந்தது
அந்த உலகமே!

என் கையிலிருந்த
குடையை அவன்
வாங்கி பிடித்தான்
இருவருக்குமாக...
குடை இருந்தும் நனைந்தோம்
ஒவ்வொரு துளியும்
எங்களின் காதல் கதையை
மெல்ல எழுதிக் கொண்டிருந்தது....

கல்லூரி சாலையில் நடந்த
அந்த சில நிமிடங்கள்
எங்கள் வாழ்வின்
மறக்க முடியாத
நினைவுகளாக மாறின....
இன்றும் மழை பெய்யும்
போதெல்லாம்
அந்த கல்லூரி வாசலும்
அந்த சாலையும்
அந்த நனைந்த மாலையும்
எங்கள் மனதில் மீண்டும்
உயிர் பெறுகிறது....

ஏனெனில் அந்த மழை
வெறும் மழை அல்ல...
இரண்டு இதயங்களை
ஒன்றாக இணைத்த
காதலின் இனிய நினைவு...

அந்த மழைநாள்
முடிந்து இருக்கலாம்
நனைந்த உடைகள்
காய்ந்து இருக்கலாம்
சாலையில் தேங்கிய
நீரும் வற்றியிருக்கலாம்
ஆனால் அன்று
உன் கண்களில்
நான் கண்ட காதலும்
மழைத்துளிகளுக்குள்
நாம் பகிர்ந்த புன்னகைகளும்
உன் கைகோர்த்த நொடிகளும்
இன்றும் நனைந்தபடியே
இருக்கின்றன
என் இதயத்தில் !

காலங்கள் கடந்தாலும்
சில மழைகள் தான்
நினைவுகளை நனைக்கும்..
அதுபோல தான்
அந்த மழை நாள்!
நாம் இருவரும்
என் கல்லூரியை
கடக்கும் போதெல்லாம்
நனைத்து கொண்டே
இருக்கும்
நினைவுகளால்....
« Last Edit: June 09, 2026, 04:41:18 PM by Oonjal »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1484
  • Total likes: 3226
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen


என்னங்க ஆசை !
சின்னதா ஒரு ஆசை!


நன்னாளில் அன்று நீ
தந்த சேலை உடுத்தி
உன்னை காண ஆசை !

கண்ணாடி முன் நின்று
வெட்கத்தோடு சிரித்து  - உனக்காக
என்னை அலங்கரிக்க ஆசை!

வருவதற்கு முன் வந்து
சாலையோரம் நின்று - உனக்காக
நான் காத்திருக்க  ஆசை!

காத்திருக்கும் நேரம் அன்பே
நமக்கு பிடித்த பாடலை - என்
 இதழோரம் முணுமுணுக்க ஆசை!

தொலைவில் உன் உருவம்  தெரிய
குழந்தையாய்  என் மனம் தானே
 துள்ளிக் குதிக்க ஆசை!

நீ அருகில் வரும்  அந்நொடி
வானம் மழையாய் பொழிய -என்
இதயமும் மெல்ல குளிர்ந்து போக ஆசை!

முதல் துளி மண்ணில் விழும் நேரம் 
அடுத்த முத்த  துளி - என்
கன்னத்தில் மேல்  விழ கொஞ்சம் ஆசை!

காற்றில் பறக்கும் என் கூந்தலை,
எவ்வித சலனம் இன்றி - உன்
விரல்கள் அடக்க ஆசை!

பட்டென்று  குடையை நான் விரிக்க,
அதை குறும்பாக  நீ  விலக்க
 நாணத்தோடு  சிரித்து வைக்க ஆசை!

கண்களிலே கைது செய்து
கனவோடு உறவாடி - உன்
பார்வைக்குள் சிக்குற  ஆசை !

என் குளிர்ந்த கரங்களை,
உன் கரங்களில் ஆயுள் வரை
இனி நான் சிறை வைக்க ஆசை!

உன் கை கோர்த்து நடக்கும் போது,
உலகமே நம்மைத் தவிர
மறைந்து போக  ஆசை!

பாதை எங்கே செல்கிறது
யாருக்கு தெரியும்  - உன்னோடு
மட்டும் நடக்க வேண்டுமென்ற ஆசை!

உன் சிந்தனைகளில்
தொலைந்து போக ஆசை !
உன் அன்பில்
வியந்து போக ஆசை !
வேறென்ன ஆசை !
நீயே  என்றென்றும் பேராசை !

ABC 😍



Offline Kavii

  • Jr. Member
  • *
  • Posts: 51
  • Total likes: 269
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மேகங்கள் திரண்டுவந்து ராகங்கள் கோர்க்க,

பூமியின் தாகத்தை காதலே தீர்க்க!

மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்,

நெஞ்சில் எழும் உன்னுடைய நினைவல்லவோ!

குடை விரித்து நாம் நடந்த சாலையோரங்கள்,

குளிர் காற்றில் கரைகின்ற நம் தூரங்கள்!

உன் தோள் நனையக் கூடாதென்ற என் ஏக்கம்,

மழைநீரையும் விட இங்கே வெம்மையாக்கும்!

நனைந்த உன் கூந்தலின் வாசத்திலே,

என் ஆயுள் கரையுது இந்த சுவாசத்திலே!

சேலை நனையும் நொடிகள் எல்லாம்,

காலம் நமக்குத் தந்த வரமல்லவா!

விழியோடு விழி பேசும் மௌனச் சாரல்,

இவ்வுலகில் வேறெங்கும் இல்லாத் தேடல்!

பெய்யும் மழையும் உன்னழகைப் பார்த்து,

பெய்யத் தயங்கி நிற்குதோ தடம் மாற்றி!

பச்சை இலைகளின் மேல் பனிமுத்து ஆட்டம்,

நெஞ்சுக்குள் நீ தந்த சுகமான வாட்டம்!

உன் கரம் கோர்த்து நான் நடக்கும் போதெல்லாம்,

கால் நனையும் நீர்கூட அமுதாக மாறுதடி!

வார்த்தைகள் தேவையில்லை இந்த மழைக் காலத்தில்,

நம் சுவாசம் கலந்திருக்கு இயற்கையின் தாளத்தில்!

வானம் பூமிக்கு எழுதும் காதல் கடிதம்,

நாம் வாசிக்கும் இந்த அழகிய நிமிடம்!

பிரபஞ்சத்தின் பேரழகே உன் புன்னகைதான்,

இந்த மழைக் காவியத்தின் முதல் வரியே நீதான்!

உலகத்தின் சத்தங்கள் எல்லாம் அடங்கிப் போக,

உன் இதயத் துடிப்பு மட்டும் காதில் கேட்க!

காலங்கள் மாறினாலும் அழியாத காதலிது,

கடவுள் நமக்காகவே வரைந்த சித்திரமிது!

மழைநீரில் நனைந்தபடி நாம் தொலைவோம்,

மறக்க முடியாத நினைவுகளில் என்றும் நிலைப்போம்!

நெஞ்சக்கூட்டில் வாழ்கின்ற அன்பின் சுடரே,

என் ஆயுள் முழுக்க வருகின்ற உயிரின் நிழலே!

துளிகளின் ஓசையில் உன் குரலே கேட்க,

துணையவன் மார்பில் என் உலகம் சிறக்க!

இமை மூடி ரசித்திடும் தூரிகைத் திருவிழா,

வானும் பூமியும் வாழ்த்தும் பேரன்பின் சாட்சியாய்...

இதோ இங்கே, "காதல் காவியம் தொடர்கிறது!"

Offline Bunny

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
   ❤️ BUNNY ❤️

மழைத் துளிகள் மெதுவாக மண்ணைத் தழுவும் அந்த நேரத்தில்,
உன் கையைப் பிடித்து நடக்கும் இந்தப் பாதை என் வாழ்வின் அழகான கவிதை.
குடை காற்றில் பறந்தாலும் பரவாயில்லை,
உன் அருகாமை எனக்கு ஆயிரம் பாதுகாப்புகளைத் தருகிறது.

மரங்களின் நிழலில் மழை இசை பாட,
நம் இதயங்கள் ஒரே தாளத்தில் துடிக்கின்றன.
நனைந்த உடைகளில் குளிர் இருந்தாலும்,
உன் பார்வையில் என் உயிருக்கு வெப்பம் கிடைக்கிறது.

இந்த மழை நின்றுவிடலாம்,
இந்த சாலை முடிந்துவிடலாம்,
ஆனால் உன்னோடு நடந்த இந்த நிமிடங்கள்
என் நினைவுகளில் என்றும் அழியாத ஓவியமாகவே இருக்கும்.

ஒவ்வொரு மழைத்துளியும் உன் பெயரைச் சொல்ல,
ஒவ்வொரு காற்றும் உன் அன்பைத் தொட்டுச் செல்ல,
உன் தோளில் சாய்ந்த இந்தச் சிறு உலகமே
என் வாழ்வின் மிகப் பெரிய சொர்க்கம்.

உலகம் முழுவதும் மழை பெய்தாலும்,
என் மனதில் என்றும் மலர்வது உன் காதல்தான்.
என் பயணத்தின் முடிவுவரை,
உன் கையை விடாமல் பிடித்துக் கொண்டு
இந்த வாழ்க்கைப் பாதையில் நடக்க வேண்டும் என்பதே
என் இதயத்தின் இனிய ஆசை. ❤️🌧️🥰

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 1504
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
கரு மேகங்கள் வானில் உலா போக
உன் கருவிழிகளுக்குள் மையல் கொண்டேன்.
இதமான ஓர் இடம் தேடி
உன் இதயக்கூட்டில் புகுந்துக்கொண்டேன்

காற்றில் பரவும் மண்வாசனையில்
காதல் மணமும் பரவ
உனதன்பில் திக்குமுக்காடி தான் போனேன்
உன் கைகளில் அடங்கும்
சிறு குழந்தையாகி குதுக்களிக்கிறேன்

மழையில் நனைந்து உடல் சிலிர்க்க
உன் அருகாமையில் உயிரும் சிலிர்க்க
மழையின் சங்கீத கச்சேரிக்கு
இதய துடிப்பு மெட்டு அமைக்க
உன் தீண்டலில் உலகை மறக்கிறேன்

காற்றோடு பறக்கும் குடையில்
நமது எல்லைகளும் பறக்க
உன் ஸ்பரிசத்தில் பூரித்து போகிறேன்
எல்லைகளற்ற உறவாய் மாற கண்டேன்....

ஒவ்வொரு முறையும் நம் உறவிற்கு
நான் முற்றுப்புள்ளி வைக்க...
முற்றுப்புள்ளிக்கு பின்னால் மீண்டும் மீண்டும்
இட்ட புள்ளிகளால் முடிவிலி
உறவாய் மாற வியந்தேன்
உன்னில் சரணடைந்தேன் ❤️ 💜❤️
« Last Edit: Today at 02:09:24 AM by Yazhini »