Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-010 (வெயிலோடு விளையாடி - நாம் மறந்த விளையாட்டுகள்)  (Read 156 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-010

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

'வெயிலோடு விளையாடி - நாம் மறந்த விளையாட்டுகள்'

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Rahmathulla


கிரிக்கெட் 🏏🏏



எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் தான்.  சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் தான் ஆர்வம். அதுவும் அண்ணாவும்  இருப்பான் அவன் frnds  கூட தான் நானும் விளையாடுவேன்.
எல்லாம் ஒரே ground la தான்  விளையாடுவோம்..

 வீட்ல அப்பொழுதே அண்ணாவுக்கும்  எனக்கும் சண்டைகள் வரும்..  அவன் என் 🏏 bat ta தான் தூக்கிட்டு  ground ku first ye போயிருவான்.  நான் சீக்கிரமா காலையில் எழ மாட்டேன்... அது எங்க அண்ணாக்கு +point..நான் late ah எழுந்து tea biscuit lam சாப்பிட்டு.. என் 🏏 bat இருக்காது.. அச்சச்சோ இவன் என் 🏏 bat a தான் தூக்கிட்டு போயிட்டான்னு. அம்மாவிடம் அழுவேன் ஏன் இவன் என் 🏏bat a எப்படி எடுத்துட்டு போலாம்.. வேகமா அம்மா நல்லா பார்க்காமல் அவனை சொல்லகூடாது. இந்தா உன் 🏏 bat அம்மா சொல்வாங்க . இது உடைஞ்ச 🏏bat. என்னது புது 🏏 bat மா. நான் சொன்னேன்...

அப்படியே அழுது புழம்பி    அம்மாவிடம்  எனக்கு வேற 🏏bat வேணும் சொல்லி உடனே வாங்கி...new 🏏 bat  oda ground க்கு போனேன்..

அங்க போனா என் நண்பர்கள்  ரெடியா இருந்தார்கள்

எங்க அண்ணா என்ன பார்த்து வீட்டுக்கு போ. நானும் நீயும் விளையாடலாம்.. Opposite street la. யாரும் இருக்க மாட்டாங்க நம்ம மட்டும் தான் நைட் வரைக்கும் விளையாடலாம் சொல்வான் ..

எனக்கு எங்க அண்ணாவ பத்தி தெரியாதா. சும்மா என்னை ஏமாத்துறான்னு..
நான் சொன்னேன். இல்லை எனக்கு இங்க தான் விளையாட பிடிக்கும். நீ போடா நான் என்னமோ பண்றேன்.. எனக்கு இஷ்ட்டம் இருந்தா விளையாடுவேன்  இல்லைனா  வீட்டுக்கு போவேன்.. போ போ உன் நண்பன் உன்னை கூப்பிடுறான் பாரு. சொல்லி அவனை அனுப்பிட்டு பார்த்தா. வெயில் கொள்ளுத்த ஆரம்பிக்கும்..
இவனிடம்  பேசி முடிகிறக்குள்ள வெயிலே அதிகமாயிருச்சு..
 
ம் ம் ம் னு யோசித்து.. அண்ணா நண்பனிடம் நாங்க 4பேரு இருக்கோம். நாங்களும் match ku  வரோம் சொல்லி.

அண்ணா நண்பன் சொல்லறான் இல்ல வேணாம் உங்க அண்ணா  match விளையாட மாட்டான்.  நான் சொன்னேன்  என் அண்ணனிடம்   நான் கேட்கிறேன். சொல்லிட்டு டேய் டேய்  அண்ணா match ku நாங்களும் வரோம். அவன் வேகமா என்  🏏 bat ta பார்த்து இது எப்போ வாங்கின..
நீ தான் என் 🏏 bat ta எடுத்துட்டு வந்துட்ட..

 இப்போ தான் அம்மா பணம் குடுத்தாங்க. வாங்கினேன்..
 எங்க team ku players correct ah இருக்காங்க opposite team ta சொல்லறேன் சொல்லி..

சின்ன சின்ன சண்டைகளுடன் match நல்லா விளையாடுவோம்...
  வெயில்  மயக்கம் வர ஆரம்பிக்கும்.. தண்ணீர்  எவ்ளோ குடித்தாலும் தாகம் அடங்காது.

எல்லாரும் பணம் போட்டு ஐஸ்கிரீம் வாங்கி  சாப்பிட்டு
சந்தோசமாக வாழ்ந்த நாட்கள்  எல்லாம் இனி திரும்பி கிடைக்காது..
 
அவ்ளோ மகிழ்ச்சியான தருணங்கள். வீடு திருபும் போது  நான் நண்பர்கள் எல்லாம்  பேசி சிரிச்சுகிட்டே வீடு வந்து சேருவோம்..

காலசூழ்நிலை மாறுபட மாறுபட நான் தொழிலுக்கு  முக்கியதுவம் கொடுக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது..

நான் நண்பர் களோட விளையாண்டதை இன்றும் நினைத்து பார்ப்பேன் அது ஒரு பொற்காலம்.. வாழ்க்கையில திரும்பி கிடைக்காத சந்தோசம்..

இந்த summer time la எனக்கு cricket தான் நியாபகம் வரும் இப்போ அடிக்கிற வெயிலுக்கு வெளிய எங்கயும் போகாமல் வீடும். கடையும் மட்டும் தான்  life la போகுது  என்று நினைத்து.
அந்த பொற்காலத்தையும்   நினைத்து. மனதில் மிக பெரிய சந்தோசத்தை இழந்துவிட்டேன் என்று என் மனம் வேதனை அளிக்கிறது..

TQ
Priyamudan

Offline Thenmozhi



காலநிலைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வெயில் காலம்.இந்த வெயில் காலத்துக்காக நாங்கள் ஆறு மாதமாக காத்திருப்போம்.எப்போ வரும் இந்த வெயில்? எப்போ நாங்கள் அந்த சூரியனை பார்ப்போம்? என்று. அது வந்ததுமே என் மனதில் மிகவும் குதூகலமாக இருக்கும்.ஸ்கூல் விட்டு வீடு வந்ததும் நானும் அண்ணாவும் garden போய் play பண்ணுவோம்.
நண்பர்களும் நம்முடன் இணைந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு நாள் ஒரு வீடு என்று சொல்லி விளையாடப் போவோம்.
கண்ணாமூச்சி விளையாடுவோம்.

ஒருநாள் அண்ணாவின் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடினோம்.புது இடம் என்பதால் அண்ணாவின் பின்னாடியே சென்றேன்.அண்ணா ஒரு பூச்செடியின் பின் ஒளிந்துகொள்ள சொன்னாங்க.ரொம்ப நேரமாக  ஏன் என்னைத் தேடவில்லை யாரும் அப்படின்னு பார்த்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.கண்விழித்த போது இரவு ஆகிவிட்டது.அண்ணா தேடி வந்தாங்க.உன்னை மறந்துவிட்டோம்.cricket play பண்ண போய்விட்டோம்.அம்மா கேட்கத் தான் நியாபகம் வந்தது அப்படின்னு அண்ணா சொல்ல,நான் அழுதுகிட்டே போய் அண்ணாக்கு அப்பாகிட்ட அடி வாங்கி கொடுத்ததும் தான் நிம்மதி.இது மறக்க முடியாத நினைவு.

park போய் barbeque family friends கூட சாப்பிட்டு basket ball,cricket,football னு play பண்ணுவோம்.வெயில் நேரத்தில் இர‌வு 9மணி வரை கூட play பண்ணுவோம்.
friends கூட சந்தோசமாக cyclying போவோம்.

தாத்தா சொல்லி கொடுத்த கிளித்தட்டு,பல்லாங்குழி,கபடி ,கோலிக்குண்டு,கிட்டிப்புள் விளையாட்டுகள் அப்பா,மாமா,அண்ணா,உறவினர்கள் கூட play பண்ண தருணங்கள் மறக்க முடியாது.என‌க்கு கிளித்தட்டு ரொம்ப பிடிக்கும்.நான் அப்பா teamக்குத் தான் போவேன்.கிளி அடிக்கும் னு box லேயே நிற்பேன்.அப்பா தான் என்னை தூக்கி next boxல விடுவாங்க.

swimming pool ல water fill பண்ணி romba நேரம் swimming பண்ணுவோம்.pool a vittu veliya வரவே மனம் இருக்காது.அம்மா போதும் வாங்கனு சொன்னதும் ஒரு 2hrs after தான் போவோம்.

summer timeல தான் ஒடியல் கூழ் பண்ணுவாங்க அம்மா.family friends கூட சேர்ந்து சாப்பிட super a இருக்கும்.சாப்பிட்டு fun game play பண்ணுவோம்.

வெயில் time beach போவோம்.அங்க மண‌ல் வீடு கட்டி விளையாடுவோம்.யாரோட building உயரமா இருக்கோ அதை மற்றவங்க உடைத்திடுவோம்.துரத்துவாங்க அடிக்க.அப்படியே கட‌லில் போய் குதிப்போம்.friends எல்லோரும் சேர்ந்து கடலில்  ஒவ்வொருத்தங்க மேலே ஏறி கோபுரம் make பண்ணுவோம்  .காற்று வ‌ந்து எங்களை தள்ளிவிடும்.நாங்கள் அலையில் மிதப்போம்.beach la fish &chip சுட சுட சாப்பிடுவோம்.sema fun a irukkum.

வெயில் start பண்ணாலே யூஸ், ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டுகிட்டே இருப்போம்.

வெயிலோடு விளையாடும் போது எங்களது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.mobile,tv பாவனை இருக்காது.

குழந்தை பருவம் ,பாடசாலை பருவம் தான் வெயிலோடு விளையாடுவதற்கு உகந்த பருவம்.இப்போ எல்லாரும் work  போறதால சந்திக்கிற time குறைவு.leave daysல தான் அப்பப்போ வெயிலோடு விளையாட முடிகிறது.

இப்போ வெயில் work பண்ணும் போது  எங்க உடலில் சூடாகவும்,பயணங்களின் போது தலைகளிலும் தான் வெயில் விழுகிறது.அந்த வெப்பத்தை குறைக்க நாங்கள் fan or ac  பயன்படுத்துகிறோம். முன்னர் வெயிலில் விளையாடி திரிந்த நாங்கள் இப்படி பண்றதுக்கு reason Already work tensionஇல் தலை heat a  இருக்கும்.so வெயில பார்த்ததும் விளையாட தோணாது ஒரே வெக்கையா  இருக்குன்னு சொல்லுவோம்.

வெயிலோடு விளையாடிய தருணங்கள் என்றும் பசுமையானவை.

Thanks நெஞ்சம் மறப்பதில்லை teamக்கு இப்படி ஒரு topic தந்து என்னோட வெயில் ஓடு விளையாடிய நினைவுகளை என் மனக்கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியமைக்கு.




Offline Sethu

ஹாய் நண்பர்களே! இந்த தலைப்பை பார்த்ததும் என்னோட கிராமத்து வாழ்க்கை அந்த பொக்கிஷம் என் மனசுக்குள்ள வந்துச்சு. அதுமட்டும் இல்லாமல் மறந்து போன கிராமத்து வாழ்க்கையை மீட்டெடுக்கும் ஒரு அற்புதமான தலைப்பாய் இருக்கு. நான் சிறுவயதாய் இருக்கிறப்போ இப்போ இருக்கிற சிறுவர்களைப் போல மொபைல் கம்ப்யூட்டர்ல எங்க விளையாட்டு அடங்கிராது. வெயில் தூசி பாராமல் ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுகளை அதிகமா விளையாண்டோம்.

இதுமாதிரி விளையாடுவதினால் உடல் ஆரோக்கியமும் ,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கள் சிறுவயதில் நிறைய இருந்துச்சு. வெயிலோடு விளையாடி மறந்த விளையாட்டுனு பார்த்தா என் நினைவுக்கு வருவது ,அந்த 12 மணி வெயிலில் எங்களோட கிராமத்து கிணற்றில் நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாண்ட விளையாட்டு தான். நான் பயின்ற ஸ்கூல் பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கு. விடுமுறை நாள் ஃபுல்லா அந்த கிணற்றில போய் தான் முங்கி,நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாடுவோம்.

அந்த விளையாட்டோட விதிமுறை என்னவென்றால் பிடிக்க வரும் நபர் தண்ணியில மூழ்கி இருக்கப்ப தலையை தொடக்கூடாது. தண்ணீரில் வெளியே வந்தவுடன் தலையை தொட்டால் தொட்ட நபர் அவுட். பள்ளி நேரங்களில் உணவு இடைவெளியின் போது நானும், எனது நண்பர்களும் ஆசிரியருக்கு தெரியாமல் அந்த கிணற்றுக்கு போய் விளையாடிட்டு வருவோம்.

ஒரு நாள் ஆசிரியர் எங்களை கவனிச்சு என்னடா எல்லோருடைய தலையும் ஈரமா இருக்கு எங்க போயிட்டு வாரீங்க? என்று கேட்க, நாங்க வெயில் தாங்க முடியல பக்கத்து கிணற்றில குளிச்சிட்டு வாரோம் என்று, உண்மை அறிந்த ஆசிரியர் என்னடா சொல்றீங்க என எங்கள் அஞ்சு பேரையும் தண்டித்தார். அந்த அடி வாங்குன நிகழ்வு இன்னும் என் மனசுல பதிந்திருக்கு.

இந்த காலத்துல எங்க கிராமத்துல எந்த கிணத்துலயும் தண்ணியும் இல்ல. இந்த மாதிரி விளையாட்டை யாரும் விளையாடுவதும் இல்லை என்பது ரொம்ப வேதனைக்குரிய விடயமாக இருக்கு. இது மட்டும் இல்ல இன்னும் நிறைய விளையாட்டுகள் இருக்கு.

கில்லி விளையாட்டை நாங்க எங்க கிராமத்துல கிட்டினு சொல்லுவோம். ஒரு மரக்கட்டை குச்சையை செதுக்கி குறி பார்த்து  அடிக்கிறது. பின்பு ஓடி பிடிப்பது அப்புறம் பச்சை குதிரை தாண்டுவது. ஒருவர் குனிந்து கொள்ள மற்றொருவர் முதுகின் மேல தாண்டுவது அப்புறம் நொண்டி ஆடுவது  கட்டங்களை  போட்டுக்கொண்டு ஒரு காலை மடக்கிக் கொண்டு ஆடுவது, அப்புறம் கோலி குண்டு ஆடுவது தரையில் பள்ளத்தை தோண்டி கோலி குண்டு அதில் போட்டு ஒரு குண்டை குறி பார்த்து அடிப்பது இந்த மாதிரி விளையாட்டுகள் விளையாடுவதற்கு பெரிய உபகாரணங்கள் தேவையில்லை.

மர நிழல் குளங்கள் இந்த மாதிரி இடத்துல மழை ,வெயில் பார்க்காமல் விளையாண்டு மகிழ்ந்தோம். அப்புறம் பார்த்தீங்கன்னா பனை மரத்தின் மரத்தில் கிடைக்கும் நுங்கை சாப்பிட்டுவிட்டு நுங்கு வண்டி செய்து வெயில் என்று கூட பாராமல் தெருத்தெருவாக ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த காலமும் அதுவே. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் வீடியோ கேம்கள் தொலைக்காட்சி போன்றவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டோம். நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து தொலைபேசி கேம்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். கம்ப்யூட்டர் மயமாக இருக்கிற இந்த காலகட்டத்தில் நான் மறந்த பாரம்பரிய விளையாட்டுகளை வியர்வையும் ,புன்னகையும் நிறைந்த நம் சிறுவயது விளையாட்டுகளை மீண்டும் விளையாட வேண்டியது அவசியமாகி உள்ளது.

நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அந்த கிராமத்து விளையாட்டுகளை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி வணக்கம் நண்பர்களே....
« Last Edit: June 05, 2026, 03:43:31 AM by Sethu »

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 317
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இப்போதைய அவசர உலகத்துல நம்ம கொஞ்சம் மறந்த, ஆனா நினைத்தாலே மனசுக்குள்ள குதூகலத்தை தர்ற பல அருமையான விளையாட்டுகள் உண்டு. வீட்டுக்கு வந்ததும் எவ்வளவு நேரம் ஓடிப் பிடிச்சு விளையாடுறோம்னே தெரியாது... பக்கத்துல உள்ள நண்பர்கள், அண்ணா, அக்கா எல்லாம் சேர்ந்து விளையாடுவோம்.

​பள்ளிக்கூடத்துல விளையாட்டு விழா(sports day) வந்தா போதும், கோ-கோ வெறித்தனமா விளையாடுவோம்.. மைதானத்தைப் பிடிக்க அவ்வளவு வேகமா ஓடிப் போய், மைதானத்துல இடம் பிடிச்சு, எதிர்த்தரப்பு அணியோட மாலை 6 மணி வரைக்கும் விளையாடுவோம்.

​வெளியில ஓடி விளையாடிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து, அந்த மண் பானைத் தண்ணியைக் குடிக்கும்போது தொண்டையில இறங்குமே ஒரு குளுமை... அதுக்கு முன்னாடி இப்போ இருக்கிற பிரிட்ஜ் தண்ணியெல்லாம் தோத்துப்போகும். சில நாள்ல அம்மா செஞ்சு வைக்கிற கம்மங்கூழும், நன்னாரி சர்பத்தும், பழைய சோத்துத் தண்ணியும் தான் நம்ம எனர்ஜி ட்ரிங்க்ஸ்

ஊருக்குப் போனா சொல்லவே வேண்டாம். குளத்துல அந்த வெயில்ல குளிக்கிறது ஒரு அலாதி இன்பம் தான். நொண்டி விளையாட்டு, கபடி, 'ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரே பூ பூத்தாச்சோ' விளையாட்டு, பனங்காயில குச்சி வச்சுத் தட்டிட்டு அதை வச்சு யாரு முதல்ல போறாங்கன்னு ஓடுவோம்.

​பல்லாங்குழி,பம்பரம், கோலி, தாயபாஸ்லாம் இப்போ கைபேசி விளையாட்டுகளா மாறிடுச்சு, அதெல்லாம் நேரம் காலம் பார்க்காம விளையாடி இருக்கோம்.. கண்ணாமூச்சி விளையாட்டு இன்னமும் குட்டீஸ் விளையாடுறாங்க.

​தோட்டத்துக்கு அந்த வெயில்ல தாத்தாவுக்குச் சாப்பாடு எடுத்துட்டுப் போவோம்.. அங்கேயே நல்ல இளநீர் வெட்டிக் கொடுப்பாங்க.. அதையும் வயிறு முட்டக் குடிச்சுட்டு மாம்பழம் பறிச்சுச் சாப்பிட்டுட்டுச் சாயங்காலம் தான் வருவோம்.

அப்படியே தாத்தா சொல்ற கதையைக் கேட்டுட்டே, அந்த வெட்ட வெளியில காத்து வாங்கிக்கிட்டு விண்மீன்களை எண்ணித் தூங்குன அந்த நாட்களை இப்போ ஏசி (AC) அறையில தேடினாலும் கிடைக்காது.

​தட்டாம்பூச்சி, அதுவும் ரொம்ப பிடிச்ச விளையாட்டு. வெயில் காலத்துல ஓடி ஆடி விளையாடி, உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்து, அம்மாகிட்ட திட்டு வாங்கின ஞாபகங்கள் எல்லாம் இப்போ நினைச்சாலும் ஒரு தனி சந்தோஷம் தான்.

ஆனால், இன்றைய குழந்தைகளோ கணினித் திரையிலும், கைபேசியிலும் தங்களின் உலகை சுருக்கிக் கொள்கிறார்கள். நான்கு சுவற்றுக்குள் அடங்கிப்போகும் இந்த கேட்ஜெட் உலகத்திலிருந்து நம் பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டும். மண்ணின் வாசனையையும், மனிதர்களின் நேசத்தையும் கற்றுத் தந்த நம் பாரம்பரிய விளையாட்டுகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து விளையாட வைப்பது, நம் காலத்தின் கட்டாயக் கடமையாகும்.

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 160
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
"வெயிலில் போகாதே, கருப்பாகிடுவே!" என்று இன்று குழந்தைகளிடம் சொல்லப்படும் வார்த்தைகள், ஒரு காலத்தில் நான் கேட்டே அறியாத வார்த்தைகள். அந்தக் காலத்தில் வெயில் என்பது வெளியே ஓடி விளையாட அழைக்கும் நண்பன். கோடை விடுமுறை வந்தாலே தெருவெங்கும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் நிறைந்திருக்கும்.

அப்போது கைப்பேசி, இணையம் என்று எதுவும் எங்கள் ஊரில் இல்லை. வெயிலோடு சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளே எங்கள் உலகமாக இருந்தன. நண்பர்களின் சிரிப்பும் ஓட்டமும் எங்கள் தெருவையே கலகலப்பாக்கும். பெரியவர்கள் எல்லாம் வீட்டுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, எங்களுக்கு கிட்டிப்புள், கோலி, நொண்டி, கண்ணாமூச்சி, பாண்டி, கபடி என்று ஒவ்வொரு விளையாட்டும் ஒரு தனி உலகமாக இருந்தது.

வெயில் உச்சத்தில் இருந்தாலும், "இன்னும் ஒரு ரவுண்டு மட்டும்!" என்று விளையாட்டை நீட்டித்த நாட்கள் அவை. எவ்வளவு நேரம் விளையாடினாலும் சோர்வு என்பதே தெரியாது. கண்ணாமூச்சி விளையாடும் போது மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த தருணங்கள், கபடி விளையாட அழைக்கும் போது "ஐயோ, நான் வரலை!" என்று ஓடுவதும், நொண்டி விளையாடும் போது ஒரு காலில் துள்ளி வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும்—எல்லாமே இன்று நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கின்றன.

காலையில் சூரியன் உதித்தவுடன் தெருவின் முனையிலிருந்த பெரிய வேப்பமரத்தின் கீழ் எல்லோரும் கூடுவோம். முதலில்  கண்ணாமூச்சி  விளையாட்டு. ஒருவன் கண்களை மூடி எண்ணிக்கொண்டிருக்க, மற்றவர்கள் வீடுகளின் பின்னாலும் மரங்களின் அருகிலும் ஒளிந்துகொள்வோம். யார் முதலில் பிடிபடுகிறார்களோ, அவர்களே அடுத்த முறை கண்களை மூட வேண்டும். அந்தப் பதட்டமும் சிரிப்பும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

மதிய வெயில் கொளுத்தினாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இருந்ததில்லை. நொண்டி விளையாட ஒரு காலை மடக்கிக்கொண்டு தாவித் தாவி ஓடுவோம். சில நேரங்களில் தவறி கீழே விழுந்தாலும், சிரித்துக்கொண்டே மீண்டும் எழுந்து விளையாடத் தொடங்கிவிடுவோம்.

மாலையில் கோலி, பம்பரம்,கபடி போன்ற விளையாட்டுகள் தொடங்கும். பம்பரத்தை சாட்டையால் சுற்றி சுழற்றுவதில் யார் திறமையானவர் என்று போட்டி நடக்கும். அந்த உற்சாகத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்த பிறகும் விளையாட்டு முடியாது. அம்மா கூப்பிடும் சத்தம் கேட்ட பிறகுதான், "நாளையும் இதே நேரம் விளையாடுவோம்!" என்று சொல்லிக்கொண்டு அனைவரும் வீடு திரும்புவோம். உடல் முழுவதும் வியர்வை, கால்களில் மண், முகத்தில் சோர்வு இருந்தாலும், மனம் மட்டும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.

வெயிலோடு ஓடி விளையாடிய அந்த நாட்களின் மகிழ்ச்சியே வேறு. நண்பர்களின் சிரிப்பு, மண்ணின் வாசனை, தோல்வியிலும் வெற்றியிலும் பகிர்ந்த சந்தோஷம்—இவை அனைத்தும் எங்கள் குழந்தைப் பருவத்தின் பொக்கிஷங்கள்.

இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கைப்பேசி திரைகளுக்குள் பல விளையாட்டுகள் வந்துவிட்டன. ஆனால் அவை தரும் மகிழ்ச்சி, நண்பர்களோடு சேர்ந்து மண்ணில் விழுந்து எழுந்து விளையாடிய அந்த உணர்வுக்கு ஈடாகுமா?

வெயில் இன்னும் அதே வெயில்தான். தெருக்களும் அதே தெருக்கள்தான். ஆனால் மாறியது நம் வாழ்க்கைமுறை. நாம் மறந்துபோன அந்தப் பழைய விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; நட்பு, ஒற்றுமை, தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம், வெற்றியை பகிரும் மகிழ்ச்சி—இவை அனைத்தையும் கற்றுத்தந்த ஆசிரியர்கள்தான் அந்த விளையாட்டுகள்.

இன்றும் எங்கோ ஒரு மூலையில் அந்தப் பழைய விளையாட்டுகள் நம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஒரு முறை கைப்பேசியை ஒதுக்கிவைத்து, வெயிலோடு மீண்டும் விளையாடச் சென்றால், நம் குழந்தைப் பருவம் மீண்டும் நம்மை கட்டியணைக்கும்.

ஏனெனில் சில நினைவுகள் வயதாகாது; அவை வெயிலோடு சேர்ந்து என்றும் நம் மனதில் விளையாடிக்கொண்டே இருக்கும்...