Author Topic: கற்றலில் தொய்வா? நிவர்த்தி செய்ய என்ன வழி? உளவியலாளர்களின் ஆலோசனை என்ன?  (Read 6 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227052
  • Total likes: 29033
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


கற்றல் குறைபாடு உள்ள குழந்தை:

ஒவ்வொரு குழந்தைக்கும் கற்கும் திறன் ஒரே அளவாக அமைவதில்லை. தன் வயதொத்த குழந்தைகளின் சராசரி கற்கும் திறனை விட அளவில் குறைவான கற்றல் திறன் உள்ள குழந்தையை கற்றல் குறைபாடு உள்ள குழந்தையாக கருதுகிறோம்.
..
கற்றல் குறைபாடு:

பொதுவாக முறை சார்ந்த கல்வி முறையில் எழுத்துக்களையும் சொற்களையும் எண்களையும் வாசிப்பதிலும், எழுதுவதிலும், புரிந்துகொள்வதிலும், புரிந்துகொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும் சராசரி குழந்தையை விட சிரமப் படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்
..
கற்றல் குறைபாட்டிற்கான காரணங்கள்:

குறைப்பிரசவம் மற்றும் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களினால் பிறந்த குழந்தையின் எடை குறைந்து இருப்பதினாலும், கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்து மற்றும் மது வகைகளினாலும், பெற்றோர்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தினாலும் குழந்தை வந்த பரம்பரையில் அந்தக் குறைபாடுகள் இருப்பதினாலும், குழந்தை வளரும் சுற்றுச்சூழலினாலும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன
..
கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள்:

படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனச்சிதறல், மோசமான கையெழுத்து, சரளமாக வாசிப்பதில் சிரமம், ஒரே மாதிரியான உச்சரிப்பில் வரும் வார்த்தைகளை மாற்றி வாசிப்பது, இட வலது புறங்களில் வரும் எழுத்துக்களில் தடுமாற்றம் ஏற்படுவது, சொற்களில் எழுத்துக்களை மாற்றி எழுதுவது போன்றவை கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்
..
அறிவுக்கூர்மையும் ஆற்றலும்:

கற்றலுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நம்மில் பலரும் புரிந்து கொள்வதில்லை. இத்தகைய குழந்தைகள் சராசரிக்கும் சற்று அதிக அளவு புத்திக்கூர்மை உள்ளவர்கள் என்பது இவர்களது பிளஸ் பாயிண்ட். எனவே இத்தகைய குழந்தைகள் மற்ற துறைகளில் ஈடுபடும் சிறந்த அறிவும் ஆற்றலும் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
..
தொடர் பயிற்சிகள்:

கற்றல் குறைபாடுகளை களைய தொடர் பயிற்சிகள் மட்டுமே அருமருந்தாக அமையும். இதனை எளிதில் சரிசெய்ய முடியும் என உணர்ந்து குழந்தையின் குறையின் அளவைப் பொறுத்து பயிற்சியின் கால அளவையும் பயிற்சி முறைகளையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதற்கென பயிற்சி பெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படி பயிற்சிகளை அளித்தல் நலம் பயக்கும்.
..
சலுகைகள்:

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகளை வழங்கும்.
..
சிறப்பு பள்ளிகள்:

பெற்றோர் கற்பதில் சிரமம் உள்ள குழந்தைகளை கண்டறிந்த பின் இவர்களுக்கு என இயங்கும் சிறப்பு பள்ளியில் அனுமதித்து அவர்களை கற்றலில் மேம்பாடு அடையச் செய்யலாம். சாதாரண பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கும் அனுப்பலாம். பெற்றோர்கள் குழந்தைகளை குற்றம் குறை சொல்லாமல் மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் அவர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
..
சாதிக்கக்கூடிய துறைகள்:

இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் விளையாட்டு, நாடகம்,ஆடை அணிகலன் வடிவமைப்பு, ஓவியம், அறிவியல் கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல்கலை, வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர். எனவே அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களை அந்தந்த துறைகளில் மேன்மை அடையச் செய்வது நம் கடமை.

குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டு அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து, அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்ச நிலையை அடையச் செய்ய முடியும்.

பெற்றோரின் புரிதலினாலும் அவர்களின் எளிமையான அணுகுமுறையினாலும், அன்பான வார்த்தைகளினாலும், ஆதரவினாலும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மை அடையச் செய்து வாழ்வில் மிளிரச் செய்ய முடியும் என்பது உறுதி.