Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-009 (சொல்லாமல் போன காதல்/அன்பு)  (Read 138 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-008

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

'சொல்லாமல் போன காதல்/அன்பு'

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 32
  • Total likes: 128
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
"சொல்லாமலே போன அன்பு"

ஊரையே சுற்றி சுற்றி விளையாடும் சிறு பிள்ளைகள் நாங்கள் யாரும் டிவி பக்கமே போறது இல்லை. அப்படி ஒரு நாள் நான் சைக்கிள் ஓட்டி முடித்து வீட்டுக்குள் வரும்போது டிவியில் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் கடைசி scene போறதை பார்த்தேன். என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. அந்த படம் முழுவதும் பார்க்க ஆசைபட்டு cable அண்ணா கிட்ட விஜய் படம் போடுங்க அண்ணா என்று கெஞ்சி போட வைத்து படம் பார்த்து முடித்தேன். அன்றில் இருந்து விஜய் படம் தேடி தேடி பார்க்க தொடங்கினேன்.

ஏன் என்னனு தெரியாமல் விஜய் டிவியில் வந்தாலே ரசிக்க ஆரம்பித்தேன். விஜய் பாடலை கேட்டால் கூட சேர்ந்து ஹம்மிங் பண்ணுவேன். நான் வளர வளர விஜய் மேலே இருந்த crush என் கூடவே வளர்ந்தது. ஒரு ரசிகையாய் நான் பண்ணும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பார்த்து என் தோழிகள் கிண்டல் பண்ணுவர். இப்படி ஒரு ரசிகை இருப்பது உன் விஜய்க்கு தெரியவா போகுது என்று கூட கலாய்ப்பர்.

யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் எனக்கு விஜயை பிடிக்கும் நான் இப்படிதான் இருப்பேன். விஜய்க்கு தெரியனும் என்று அவசியம் இல்லை என்பேன். நான் சொல்வதை விஜயை ரசிக்கும் ஒரு ரசிகையால் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும்.

அப்பா கிட்ட படத்துக்கு போகனும் என்று கேட்க முடியாது. ஒரு function போயிட்டு வரும் வழியில் அத்தை குடும்பத்தோடு கத்தி படம் போனோம். மறக்க முடியாத படமாய் என் நெஞ்சில் இன்றுவரை இருக்கிறது. எல்லா‌ பாடல்களுக்கும் கத்தி கத்தி என் தொண்டை புண்ணாகி போச்சு. அவ்ளோ ஆட்டம் போட்டேன்.

திருமணத்திற்கு பின் என் கணவர் என்ன சொல்லுவாரோ என்று கொஞ்சம் பயம் இருந்தது. அவரோடு விஜய் படம் பார்க்க போனேன். கொஞ்ச நேரம்தான் அமைதியாக இருக்க முடிந்தது. எல்லோரும் கத்தி கூச்சல் போடுவதை பார்த்ததும் நானும் கத்தி கூச்சல் போட்டேன். அவர் சிரித்து கொண்டே என்ன இப்படி ஆட்டம் போடுற என்று கேட்டார். Hehe விஜயை பார்த்த மட்டும் எனக்குள்ள இருந்து இன்னொருத்தி வெளியே வருவா என்றேன். அவர் திட்டவோ இப்படி பண்ணாதே என்றோ சொல்லிருந்தா என் மனம் உடைந்திருக்கும். அன்றில் இருந்து விஜய் படம் வந்தால் முதல்நாள் படம் பார்க்க அழைத்து செல்லுவார்.

தியேட்டரில் படம் பார்ப்பதே கனவாக இருந்த எனக்கு முதல் நாள் படம் பார்ப்பது எவ்ளோ சந்தோசம் தரும் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. News channel பக்கமே போகாத நான் டிவியில் "ஜோசப் விஜய் என்கிற நான்" விஜய் CMஆ பொறுப்பு ஏற்ற அந்த நொடியை கண்டு மெய்சிலிர்த்தேன். நான் எப்பவுமே விஜயை ஒருமையில் தான் பேசுவேன் என் மனதில் இப்படி நெருங்கிய இடத்தை வேறு யாரும் பிடித்தது இல்லை.

எங்க வீட்டில் ஒருத்தராக பார்க்கும் விஜயை தள்ளி வைத்து மரியாதை கொடுத்து பேச எனக்கு வராது. என்னை யார் என்றே தெரியாத விஜய் மேலே எனக்கு வந்த இந்த அன்பு என் வாழ்வின் இறுதி வரை தொடரும்.

Online Rahmathulla



காத்திருந்த காதல்!!!


எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் என்ற பந்தம் இருக்க  தான் செய்யும்...
அதை மறுப்பவன்
இந்த உலகில் யாரும் இல்லை...

என் வாழ்க்கையிலும்..
காதல் என்னும் பந்தததை சந்தித்தேன்...

என்னவள் அறிமுகம் கிடைத்தது. சிறிது காலம் நன்றாக பேசினோம்..
இன்பம் துன்பம் மகிழ்ச்சி அனைத்தையும் பகிர்ந்தேம்..

 எனக்கோ அளவில்லாத மகிழ்ச்சி...
என்னவளிடம் பேசும் போது அவ்ளோ ஆனந்தம்..எனக்குள் என்னற்ற மகிழ்ச்சி..

 ஏதோ போன ஜென்மத்துல இருந்து   தொடர்ந்து வர சொந்தம் போல் என் மனதில் தோன்றும்..

சந்தோசமாக தான் இருவரும் நாட்களை கடந்தோம்..

என் அன்பானவள் மீது காதல் எப்படி வந்தது என்று நினைக்கும் தருணம்..

என் குடும்பத்தில் முக்கியமான function..
எல்லா சொந்தமும் என் கூட இருக்கப்போ..
என் மனது ஏதோ இழந்தது போல்  எனக்குள் மிக பெரிய வேதனை..
என் சொந்தம் பந்ததிடம் பேசும் போது மிகவும் மண வேதனை..

 அன்றைய தினம் function முடிந்தது .. என் தேடல் தொடங்கியது...
என் அன்பானவளே நினைத்து..

உடனே குறுஞ்செய்தியில் என்னவளுக்கு hi சொன்னனேன்..
அந்த hi வெறும் hi இல்லை.. புதிதாக - - -செல்ல பெயர் வைத்து hi - -  - nu சொன்னேன்..

என் அன்பானவள் பதில்...என்ன sir புதுசா பேரு வச்சு கூப்பிடுரிங்க  சொல்ல..

நான் சொன்னேன் இல்ல ஒரே நியாபகம் அதான் அப்படி கூப்பிட்டேன்னு..
என் அன்பானவளிடம் எத்தனை  முறை பேசினாலும்..

 எனக்கோ ஒரு பொழுதும் அழுத்து போவதில்லை..
அப்படி பேசி மகிழ்ந்த நாட்களை எப்படி மறக்க முடியும்..
என் அன்பானவளை எப்படி மறப்பேன்..

மறந்திடுவேன் என்று.. சொல்வது மிக சுலபமான விஷயம் கிடையாது..

ஒவ்வொரு நொடியும் என்  அன்பானவளுக்காக
காத்திருந்து காத்திருந்து பேசியவன் நான்..

என் அன்பானவளுக்கு
நிகர் யாரும் இல்லை
இந்த உலகினிலே..

அவள் வருகைக்காக தினம் தினம்  காத்திருந்து பேசிய நாட்களை..
என்று என்னும் போது மிக பெருமையாக தான் இருக்கும்..

இருப்பினும் ஒரு தலை காதல் என்றும் சேராது....என்று என் மனதை மிக வருந்தி கொண்டு.. என் உள் மனம் என்னை கொள்ளாமல் கொன்று குவிக்கும்..

என் அன்பானவளுடையை  நியாபகதை என்னால் மறக்கவும் முடியாமல்..
காதலை சொல்ல தைரியமும் இல்லாமல் என் மனம் தவிக்கும் பாடு இருக்கே..
மிக பெரிய பாடு..

அந்த மனம் தவிக்கும் வலி..

எந்த எதிரிக்கும் அந்த நிலைமை வர கூடாது.. என்று தான் நினைப்பேன்..

காதல் என்பது ஒரு பெண்ணே கேட்டு வர்ரதில்லை..
 அப்படி வந்த காதலை...
யாராலும் மறக்க முடியாது..

என் கண்கள் எப்பொழுதும் என் அன்பானவள் தான் தேடும்..

அப்படி தேடும் போதே..
 சில சந்தர்ப்ப சூழ்நிலையில்

என் அன்பானவளே
பிரிய நேரிட்டது..

அந்த பிரிவு  நாட்கள் எனக்கு இன்னும் என் அன்பானவள் மேல் அதிக பாசம் வர தோன்றியது...

மனதில்  பல குழப்பம். இனி என் அன்பானவள்..

என்னிடம் பேச மறுபாளோ  என்று என் மனம் தவித்த  தவிப்பு இருக்கே இருக்கே!

அதை எழுத்தாலும் வார்த்தையாலும்
சொல்ல முடியாது..
அந்த அளவுக்கு என் மனதில்  நீங்கா பாரம். பாரம்

என் அன்பானவளே நினைத்து நினைத்து..  இன்னும்  நினைப்பு அதிகமாக   என் மனதில் ஓட தொடங்கியது..

ஒவ்வொரு நாளும் என் அன்பானவளிடம் பேசிய நாட்ககளை  நினைத்து
வாழ்ந்த நாட்கள் எனக்கு சோகம் கூட சுகமாய் தெரிந்தது.

மனதில் ஓர் அச்சம் வர தொடங்கியது..

என் அன்பானவள் இனி என்னிடம் பேச போவதில்லை என்று நினைக்கும் போது.
மனதில் நீங்கா வேதனை..

என் காதலே  என் அன்பானவளிடம் சொல்ல எனக்கு மனம் தைரியமும் இல்லை..

என் அன்பானவளே  பிரிந்து இவ்வுலகில் வாழவும் பிடிக்கவில்லை..

காதல் யாரை கேட்டும் வரவும் வில்லை..
அப்படி வந்த காதல் விடவும் என் மனது இடம் கொடுக்கவில்லை..

என் அன்பானவளே!!!

 நான்  உன்னை நினைக்காத நாள்
எது என்றால்..

 என் உயிர் என்னை விட்டு பிரியும் போது.. 2முழக்கத்துடன் என் உயிர் பிரியும்..1.என் அன்பானவள் பெயர் சொல்லி.. 2.என் இறைவனை துதித்து... "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் "

என்று சொல்லி இவ் வுலகை  விட்டு உயிர் பிரிவேன்...

TQ
« Last Edit: May 22, 2026, 12:14:04 AM by Rahmathulla »

Offline Luminous

  • Jr. Member
  • *
  • Posts: 51
  • Total likes: 317
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
சொல்லாமல் போன அன்பு…

சொல்லாமல் போன அன்பு…
பல நேரம் நம்ம மனசுல மட்டும் அழகா இருக்கும்.
ஆனா அதை சொல்லாம விட்டதற்கான வருத்தம் மட்டும், காலம் கடந்தாலும் மனசை விட்டு போகாது


சமீபத்தில்தான் என்னோட higher studies complete பண்ணேன். அந்த last day வரைக்கும் எல்லா department-க்கும் போவேன், seniors juniors எல்லாருடனும் பேசுவேன், birthday treat, functions, culturals, dance practice, photo sessions, சாப்பாடு, சிரிப்பு — இப்படி தினமும் ஒரு family மாதிரி தான் இருந்தோம்.
எனக்கு எல்லாரும் பிடிக்கும்… ஆனா யாருடனும் நான் அவ்வளவு close இல்லைன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.

Last day வந்தப்போ நான் casual-ah என் department-la மட்டும் bye சொல்லிட்டு போயிரலாம் நினைச்சேன்.
ஆனா unexpected-ah வேறு departments-la இருந்த friends எல்லாரும் வந்து gifts கொடுத்து, கட்டிப்பிடிச்சு அழுதப்போதான், நான் அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான இடம் பிடிச்சிருந்தேன்னு புரிஞ்சது.

Daily உன்னைப் பார்க்காம எப்படி இருக்கும்…?
Functionனா first உன் பெயர்தான் நினைவுக்கு வரும்…
Class alteration கேட்டா உடனே ok சொல்வ…
Women’s day celebration மறக்கவே முடியாது…
Last cultural-la dance practice பண்ண அந்த atrocities எல்லாம் lifetime memory…

இப்படி சொல்லிக்கிட்டு அவர்கள் அழுதது, honestly என் மனசை ரொம்ப பாதிச்சது.
அந்த momentல தான் ஒரு விஷயம் புரிஞ்சது
நம்ம presence, நம்ம care, நம்ம help… silent-ah இருந்தாலும் சில பேருக்கு அது பெரிய happiness ஆக இருக்கும்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு guilt என்னை ரொம்ப வதைத்தது.
எனக்கும் சில anna, akka மாதிரி seniors ரொம்ப பிடிக்கும். என்னோட bad phaseல support பண்ணவங்க, motivate பண்ணவங்க.

ஆனா last day அவர்களிடம் போய்,
நீங்க எனக்கு ரொம்ப special…
Thanks for being there…
ன்னு சொல்லவே இல்ல.

அந்த நாள் அவர்கள் என்னை send off பண்ணும்போது தான்,
Cha… சொல்லியிருக்கணும்…
ன்னு உள்ளுக்குள் உடைந்து அழுதேன்.

அதனால்தான் இந்த message…

Friends,
சில நேரம் நம்ம மனசுல இருக்குற அன்பை சொல்ல தயங்கிடாதீங்க.
Scene ஆகிடுமோ…?
அவர்கள் வேற மாதிரி நினைப்பாங்களோ…?
ன்னு யோசிச்சு feelings-ah உள்ளே வைத்துக்காதீங்க.

நம்மள sincere-ah care பண்ணுறவர்கள், நம்ம கிட்ட இருந்து பெரிய விஷயம் எதிர்பார்க்க மாட்டாங்க.
ஆனா ஒரு உண்மையான வார்த்தை, ஒரு appreciation, ஒரு “நீங்க இருந்தது எனக்கு ரொம்ப முக்கியம்…”ன்னு சொல்வது ,அது அவர்களுடைய மனசுல வாழ்நாள் முழுக்க இருக்கும்.

நான் miss பண்ணிட்டேன்.
நீங்க அந்த mistake பண்ணாதீங்க.

அன்பை மனசுல மட்டும் வைத்துக்காமல் share பண்ணுங்க.
சொல்லப்படாத பாசத்துக்கு பதிலா, சொல்லப்பட்ட ஒரு வார்த்தை நிறைய உறவுகளை இன்னும் அழகாக்கும்.

சில memories photos-la மட்டும் இல்ல…
நம்மை உண்மையா நினைச்ச மனசுகள்ல தான் forever-ah இருக்கும்.
Luminous 🧡💛💚💙💜😇💕💯✌

Online ShyNiKhaa

  • Newbie
  • *
  • Posts: 17
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ~ ᴵˢᴬᴵ ᴿᴬˢᴵᴳᴬᴵ🎵
ஏக்கம் ❤️‍🩹 !

"ஏக்கம்" - அந்த உணர்வு !! ரொம்ப அழகானது. ஒருத்தர்காக ஏங்கும் பொழுது

உலகம் மறந்து ஒருத்தரோட சிந்தனை'ல
அவர்களோட பழக்க வழக்கங்கள்'ல 
அந்த நபரோட "அ" ல இருந்து " ஃ " வர
எல்லாவற்றிலும்  மூழ்குவோம் .

வாழ்க்கையில  நிறைய விஷயங்கள்  temporary nu தெரிஞ்சும் 
கடைசி வரைக்கும் நம்ப கூடவே இருக்காத'nu
ஏங்கி'tu இருப்போம்.

ஆனா சில விஷயங்கள் நம்மளோட நல்லதுகாக
கூர்மையாவும் கசபாவும் இருக்கும்
ஆனா நம்ப'லோ மனசாட்சியே இல்லாம avoid பண்ணுவோம் !!
Avoid பண்றப்போ நம்ப மனசுல துளி அளவு sad feeling இருந்திருக்காது....
Haha Disturbance oh !!

ஆனால்,
நம்பளோட bottom hit  phase'ல தான்
நமக்கு புரிய வந்துருக்கும் எல்லாம்.

ஏன் சில முறை,
யாருமில்லாத நடு இரவில இருள் மட்டு துணையா இருந்து  நம்ம காதுல " Ipo aluthuko " nu சொல்லும்மானு தெரியல ,
எந்த சூழ்நிலையிலு கரையாத அந்த கல் நெஞ்சு அப்போ உடஞ்சு இறுக்கமா நமக்கு நாமே அணைத்து கொண்டு கண்ணீர் விடுவோ .

அந்த மாறி நிறைய time'ல தான்
எனக்கு என்னுடைய தாத்தா ஞாபகம் வருவாரு !! .
அப்போ தான் அந்த ஏக்கமும் வரும் .என்னன்ன

" அய்யா , இப்போ நீங்க என்னோட இருந்திருந்த , என் life கொஞ்சம் மாறி இருக்குமோ ?"...........💔

"சின்ன வயசுல சிரிக்க வைக்க கோமாளிதானம் பண்ணுவீங்க , பார்த்தாலே பயம் வர அளவிற்கு கண்டிப்பா இருப்பீங்க !!

உங்க'லால தான் கடவுள் மேல நம்பிக்க வந்திச்சு . தினமு " ஓம் நம சிவாய சொல்லு அம்மு கடவுள் நம்பல பார்த்துபார் " அப்டி சொல்லும் போது விளையாட்ட மந்திரம் சொல்லி'கிட்டு  இருந்தே .
ஆனா அப்போ தெரியல அந்த மந்திரம் தான் இப்போ இந்த நேரத்துல துணையா இருக்கும் nu.

இவளோ நாள்'ல நிறைய மனுஷங்கள கடந்தும் உங்கள போல நேர்மையா யாரையும் பார்க்கல . ஏன் அந்த நேர்மை என்'ட இல்ல? நீங்க இல்லாத நால நான் ஒழுங்கா வளர்லயோ ? இருந்திருந்த இன்னும் நல்ல  இருந்திருக்குமோ ? நானும் ரொம்ப தைரியமா இருந்திருப்பேனோ ? 

உங்க கடைசி நாள் அப்போ நா சின்ன புள்ளையா  இருந்தே அப்போ கூட கண்கள்'ல ஈரம் இல்ல. ஆனா இப்போ என் கண்கள் எப்போலாம்  ஈரம்  ஆகுதோ நீங்க தான் நினைவுக்கு வரீங்க...

ஆனா ரொம்ப கஷ்டமான விஷயம் என்னன்ன நீங்க இருக்குற வர இந்த உலகம் அழகா தெரிஞ்சுது இப்போ ஏன் பயமா இருக்குது அய்யா ??...💔....நெஜமாவே நீங்க இருந்திருக்கலாம் இப்போ .... Haha இருக்கும்போது அருமை தெரியல 💔 "

என் தாத்தா இருக்கும் போது நான் ரொம்ப அமைதியா இருந்து'டேன் . தாத்தா nu ஓடி போய் கட்டி பிடிச்சது கூட இல்ல . ஆனா இப்போ தோணுது  !! ..But....Haha நீங்க இருந்திருக்கலாம் யா❤️‍🩹 .

உண்மையாவே சொல்லாமல் போன அன்பா ஆகிருச்சு !! 😊....

நம்ப  காண்ட மிருகம் size ku வளர்ந்தாலும் 😂😂 நம்ப அப்பா அம்மா தாத்தா பாட்டி ya நினைக்கும் போது நம்ப குழந்தை ஆகிட்றோம். ஒரு குழந்தையோட ஏக்கம் போல மேல வாசிச்சது 😊.

வாய்பிற்கு நன்றி  FTC TEAM  !!
✨ShyNiKhaa.....🪶



Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 321
  • Total likes: 679
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Mellisaithooralgal
சொல்லாமல் போன காதல் இல்ல அன்பு ..

என்னோடது women's college .. பக்கத்துலயே mens college ..
என் காலேஜ் ல இருந்து பார்த்த பக்கத்து காலேஜ் ground நல்லாவே தெரியும்.. அங்க பசங்க படிக்குறாங்களோ இல்லையோ எப்பவும் கிரிக்கெட் , வாலிபால் னு வெளயாடிட்டே இருப்பாங்க..
நா most ஆஹ் புடிக்காத கிளாஸ் எதுவும் இருந்து அங்க கிரௌண்ட் ல விளையாடுறத தான் கவனிச்சுட்டு இருப்பேன்.. அந்த மாதிரி கவனிக்கும்போது தான் ஒரு பையன பாத்தேன் .. அவனோட ஸ்டைல் of playing எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு ..  புதுசா இருந்துச்சு அவனோட சேர்விங், பாசிங் , டார்கெட்ஸ் எல்லாமே .. சொல்ல மறந்துட்டேன் நானும் ஒரு வாலிபால் பிளேயர் .. நெறய இன்டெர் காலேஜ் match  la win pani iruken.

சோ நா யாராச்சும் வாலிபால் பிலே பண்ணா அதுல பல நுணுக்கங்களை கவனிக்குறதுண்டு .. அதுபோல தான் நானும் அவனை கவனிக்க ஆரம்பிச்சேன்..

ஒரு நாள் பஸ் ஸ்டாப் ல என் friend யார் கூடவோ பேசிட்டு இருந்தா.. ஹே வா டி போலாம் பஸ் வரபோகுது அப்பறம் உன்ன விட்டு நா போய்டுவேன்னு மிரட்டினேன்.. அவளும் இதோ வரேன் இருடி னு வந்தா அப்போ தான் கவனிச்சேன் அவ பேசிட்டு இருந்தது நா ரொம்ப நாளா admire பண்ண அந்த பையன் தான் னு .  யாருக்கும் தெரியாம அவன பாக்க நெனச்சேன் ஆனா அதுக்கு முன்ன அவன் என்ன பாக்க சட்டுன்னு திரும்பி பஸ் ல ஏறிட்டேன்..

அடுத்த நாள் எப்பவும் போல கிரௌண்ட் ல வெறும் விளையாட்டை பாக்காம அவனை தேட ஆரம்பிச்சேன்.. அவன் அவங்க பிரிஎண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தான் .. என்னையும் அறியாமை எனக்குள்ள ஒரு சந்தோஷம் .

ஒரு நாள் என்னோட பிரின்ட் வரல....  பஸ் ஸ்டாப் ல அந்த பையன் என்கிட்ட வந்து உங்க பிரின்ட் வரலையா ??

இல்லங்க வரல ..

நைஸ் டு மீட் யு தூரிகா .. மை நமே இஸ் கார்த்திக்..

நானும் நைஸ் டு மீட் யு னு சொல்லிட்டு சரி பஸ் வந்துச்சு நா கெளம்புறேன் னு சொல்லிட்டு நா போய்ட்டேன் ..

அடுத்த நாள் என் பிரண்ட் என் கிட்ட ஹே நேத்து கார்த்திக் உன் கிட்ட பேசணும்னு வந்தாங்க நீ ஏன் டி பேசாம போய்ட்டா ..

நீ எங்கன்னு கேட்டாங்க வரலன்னு சொன்னேன்.. அப்பறம் பஸ் வந்துச்சு கிளம்பிட்டேன்..

அவர் உன் கிட்ட பேச தான் டி வந்தாங்க.. நா வர மாட்டேன்னு முன்னவே சொல்லிட்டேன் .

இரு இரு இரு என் கிட்ட பேச என்ன இருக்கு.. infact அவர எனக்கு தெரியவே தெரியாது..

நடிக்காத தூரி .. உனக்கு தெரியுமா கார்த்திக் உன்ன ஒரு வருஷமா லவ் பன்னிட்டு இருக்காரு .. வாலிபால் மேட்ச் ல உன்ன பாத்து இருகாங்க அப்போ ல  இருந்து நீ யாரு என்ன னு எல்லாமே தேடி விசாரிச்சுட்டாங்க .. என் கிட்ட கூட சொன்னாங்க... நீ தான் லவ் னு சொன்னாலே டெவில் மூட் கு போய்டுற அதான் பாத்து பக்குவமா சொல்லலாம் னு இருந்தேன்.. 

நீயும் கார்த்திக் ஆஹ் ரொம்ப நாளா admire பண்றன்னு எனக்கு தெரியும் அதான் நேத்து பிளான் போட்டேன் அதுவும் சொதப்பிடுச்சு ..

இங்க பாரு மீரா நீ நெனைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணுமே இல்ல நா அவங்களோட playing ஸ்டைல் தான் கவனிச்சேன்னே தவிர அவர இல்ல .. அண்ட் எனக்கு இந்த காதல் மேல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்ல ..பாத்ததும் வரத்து எல்லாம் லவ் கெடையாது பீல் பண்ணனும் எனக்கு அந்த பீல் வரல .. சோ நீயே சொல்லிடு இதெல்லாம் வேண்டாம்னு ..
 அவளும் அதுக்கு அப்பறம் அத பத்தி பேசுறத நிறுத்திட்டா .. நா தப்பி தவறி கூட ground பக்கம் பாக்குறத்தையும் நிறுத்திட்டேன்.

ஆனா எனக்குள்ள அவனை ரொம்ப புடிச்சு இருந்துச்சு அது லவ் தானா னு சாத்தியமா தெரியல .. படிக்குற வயசுல காதல் னு சொல்லி வாழ்க்கையை கெடுத்துக்க வேண்டாம் னு நானும் எனக்குள்ள தோணின அந்த உணர்வுகளை மறச்சு  படிப்பை முடிச்சு வெளிய வந்துட்டேன்..
« Last Edit: May 22, 2026, 07:07:22 PM by Thooriga »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 350
  • Total likes: 1453
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
வார்த்தையில மட்டும் சொல்லி செயல்ல சொல்ல மறந்த அன்பு.... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச என் மஞ்சு மேல நா வச்ச அன்பு...

Friends ன்னு ஆகிட்டாலே பல நேரங்கள நம்ம friend நம்மள தாண்டி யார்கிட்டேயும் பேசிட கூடாதுன்னு தோணுது... ஆனா நாம அடுத்தவங்க கிட்ட பேசாம இருப்போமா... ன்னு கேட்டா அது ஒரு பெரிய கேள்விக்குறி ?

என்னடா தத்துவம் மாதிரி சொல்றேன்னு நினைக்கிறீங்களா... என் வாழ்க்கையில நா ரொம்ப நேசிச்ச இழக்கவே கூடாதுன்னு நினைச்ச நட்பு என் மஞ்சு. செயல்ல சொல்லாமல் போன என் அன்பால அவள நா இழந்துட்டேன்.

அஞ்சாவது வகுப்பு படிக்கும் போது புது பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுடாங்க. புது school புது இடம் புதுசு புதுசா சக மாணவர்கள்... ரொம்ப தயக்கமா தனியா என்னோட முதல் நாள் தொடங்க... நானும் அங்க தனியா இல்லன்னு நட்புகரம் கொடுத்தவ என்னோட மஞ்சு...

எப்பவும் ஒன்னாவே தான் இருப்போம். ரொம்ப அன்பான பொண்ணு அவ. Sharing caring ன்னு perfect friend material.  ஆனா நா கொஞ்சம் இல்ல ரொம்ப rude தான். அன்ப அன்பா சொல்ல வெளிப்படுத்த தெரியவே தெரியாது... உள்ளுக்குள்ள அன்பு இருந்தும் வெளிய செயல்ல சொல்லாத அன்பு toxic ன்னு அப்போ புரியவே இல்ல. வேற யார் கிட்டயாவது அதிகம் பேசுனா சண்ட போட்டது மாறி பேசினாலே சண்ட ன்னு மாறிச்சு... அது நட்பு ன்னு ரொம்ப அழகான உறவ அழிச்சுடும் ன்னு உணரத்துக்குள்ள, அவள ரொம்ப caring a பாத்துகிட்ட set of people கூட அவ சேர்ந்துட்டா

புது இடத்துல கிடைக்கும் முதல் நட்பு எப்பவும் special தான் இல்லையா... அப்படி special ஆ கிடைச்ச நட்பு... என்ன... Special ஆ ஒருத்தர் நமக்கு மாறும் போதே கொஞ்சம் சுயநலமும் கூடவே வந்து ஒட்டிக்குது... அது possessiveness ஆ இல்ல selfishness ஆ ன்னு புரிஞ்சு சரி பண்றதுக்குள்ள அந்த அழகான உறவே முறிஞ்சு போயிடுது...

அன்ப அன்பா தானே வெளிப்படுத்தனும் ன்னு புரிஞ்சுக்க சில பிரிவு தேவைப்படும் போல... வார்த்தையில மட்டும் சொல்றது அன்பு இல்ல... அது செயல்ல சொல்லப்படனும் உணரப்படனும் ❤️❤️❤️
« Last Edit: May 22, 2026, 06:25:19 PM by Yazhini »