Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 402  (Read 88 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 402

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Thenmozhi

  • Full Member
  • *
  • Posts: 119
  • Total likes: 806
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
         ஏழை -பணக்காரன்
     பாகுபாட்டை ஒழிப்போம் !


ஏழையாக பிறந்தது என் குற்றமா?
ஏழை என்னை கருவில் சுமந்தது அன்னையின் குற்றமா?
ஏழை,பணக்காரன் என்று பாகுபாடு வைத்த பொருளாதாரத்தின் மீது குற்றமா?
வளங்கள் சரிவர பகிரப்படாதது
நாட்டின் குற்றமா?

பூவுலகில் ஒரு மனிதஉறவாக!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து
கொண்டிருக்கும் நிலையில்...
எங்கள் வாழ்வில் இடி விழுந்தது!
அப்பா அம்மாவுக்கு இடையில் பிரிவினை!
நான் அம்மாவுடன் வளர
வேண்டிய நிர்ப்பந்தம்!

அம்மா, நான், இரு தங்கைகள்
சாப்பிட கூட வழி இன்றி தள்ளாடி
தளர்ந்து நின்ற காலம் அது!
பசி யாரைத்தான் விட்டு வைத்தது?

பசி எடுக்கவில்லை என்று மருத்துவரிடம் மாத்திரை கேட்கும் பணக்கார கும்பல்!
பசி என்ற ஒன்று இந்த உலகில்
இல்லாமல் இருந்திருக்கலாமே என்று
பட்டினியில் வாடும் ஏழை குடும்பங்கள்!

அம்மா தான் கூலி வேலை செய்து மூவரையும் காப்பாற்றி  வருகின்ற நிலை!
கூட இருந்த உறவு எல்லாம் விலகிச் சென்றன பணம் இல்லாமல் போனதும்!

எங்கள் மூவரையும் கற்பித்து
அரசாங்க வேலை பண்ண வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அம்மா மனதில்!
தொடர்ந்து வேலை செய்வதற்கு
அம்மாவின் உடல் ஈடு கொடுக்கவில்லை!

அம்மாவையும் என் சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற மன தைரியம்!
கல்லூரி செல்வதற்கு முன்பும் ,
கல்லூரி முடிந்த பின்பும் வேலைக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு
கவனம் செலுத்தினேன் என் படிப்பின் மீதும்!

மெலிந்த தோற்றமும் ,உள்குழிந்த கன்னங்களும் ,கறைபடிந்த என்னுடைய உடையும் ,கருமையான என் நிறமும்
கிழிந்த என் புத்தகப்பை தோளில் தொங்க
ஒரு வாட்டி கண்ணாடி பார்த்துட்டு
போகலாம் என்று பார்க்கும்போது
கண்ணாடி போல் ஒரு நிமிடத்தில்
நொறுங்கி நிற்கும் என் மனசு!

என் தோற்றம் கண்டு எனக்கென்று
யாரும் இல்லை நண்பர்கள்!
இதுவும் கடந்து போகும் என்று
என் மனதில் பல எண்ணங்கள்!

சூரிய வெளிச்சத்தில் பகலிலும்
நிலா ஒளியில் இரவிலும்
விடாது கல்வி கற்று, பரீட்சையில்
முதலிடம் பெற்று , இலவச
புலமைப் பரிசில் எனக்கு கிடைத்தது
இனிதே முடித்தேன் என் பட்டப்படிப்பை !
சிறந்த மருத்துவர் ஆனேன் நம்ம ஊரிலேயே!

வேலை செல்வதற்கு தயாராகி
இன்னொரு முறை கண்ணாடி பார்க்கலாம் என்று பார்த்தபோது  என் உருவம்
மாறினது மட்டுமல்லாமல் என் முகத்தில்
ஒரு ஆனந்த புன்னகை 😊

அம்மாவின் முகத்தில் புன் சிரிப்பு
சகோதரிகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம்
அழகான அடுக்கு மாடி வீடு
குடும்பமாக பயணிப்பதற்கு அழகான கார்
அம்மாக்கு உதவியாக ஒரு வேலையாள்
நாங்கள் எந்த வாழ்க்கைக்காக ஏங்கினோமோ அந்த வாழ்க்கை!

ஏழையாகப் பிறந்தவன்
ஏழையாகத்தான் வாழனும்னு இல்லை ஏழையாகத்தான் சாகணும்னு இல்லை
கல்வியும் ,கடின உழைப்பும்
ஏழையைக்கூட பணக்காரனாக்கும்!
வந்த வழி மறக்க கூடாது !

பசி என்று வந்தவனுக்கு
பகிர்ந்து உண்போம்!
உணவை வீண்விரயம்
செய்யாதிருப்போம் !
ஏழை -பணக்காரன் என்ற
பாகுபாட்டை ஒழிப்போம் !



Offline Rahmathulla



விதியை ஒருநாள் வெல்வேன் ...

விதியே... 
என்னை பார்த்து சிரிக்கிறியா..

நீ ஏழை, உன்னால முடியாதுனு 
நெற்றியில் எழுதி வச்சிருக்கியா...

 
இந்த  School boy சொல்றேன், 
விதியை ஒருநாள் என் மதியால் வெல்வேன்..
 
இன்றைக்கு
 என் வயிறு பட்டினி 
அம்மாவிடம்  கேட்டேன் பசி ரொம்பமா னு..

அம்மா பழைய சோற்றை தண்ணி ஊத்தி இந்தா நீ சாப்பிடு தங்கம். நான் சாப்பிட்டேன் என்று பொய் சொல்லி என்னை சாப்பிட வைக்கும் அம்மா..
 
தன் வயிற்றை பட்னி போட்டு என் வயிற்றை வளர்த்த என் தெய்வம் என் அம்மா..

வீட்டு கூரை மழை பெய்தால் ஒழுகும்..

 நோட்டு புத்தகம்
 நனையும்
பரீட்சைக்கு போனால் கூட  பேனாவில் மை இல்லை..

 தினந்தோறும் காலையில் எழுந்து புறப்பட்டு என் வீட்டில் உள்ள சிறு கீரளுடன் இருக்கும் கண்ணாடியை உன்னை பார்ப்பேன்..

 என் கஷ்டத்தை இறைவனிடம் சொன்னால்
புரிய போவதில்லை..

கண்ணாடி உன் முன்னாடி நின்று பேசுகிறேன்..
எப்போ என் வாழ்க்கை மாறும் என்று தெரியாது..
ஆனால் கண்டிப்பாக மாறும்..
இன்று என் நிஜ வாழ்க்கையில்  நான் ஏழை தான்..
கண்ணாடி உன்னிடம் பேசும் போது எனக்குள் இருக்கிற  மண சுமை குறைகிறது..
 இப்போ உடுத்தி இருக்கும். இந்த ஆடை கிழிந்தள் தான்.ஆனால்
கண்ணாடி உன்னை பார்க்கும் போது மட்டும் மனதில் ஒரு புது உணர்வு..


நல்ல உடை அணிந்து ஒரு கம்பீரமான தோரணையில் school ku செல்வது போல் ஓர் ஆனந்தம்..

நல்லா படித்து.. பெரிய அதிகாரியா
வருவேன் என்று  என்னும் போது மிக்க மகிழ்ச்சி..
 திடிரென்று என்னை பார்க்கும் போது
இதுதான் உன் விதி
என்று என்று என் மனசாட்சி
 சிரிச்சுக்கிட்டே இருக்கிறான்..

இருக்கட்டும்... விதியை ஒருநாள் வெல்வேன். 

டீச்சர் அடிக்கிறாங்க  ஏன்டா மார்க் கம்மியா எடுத்திருக்க??
நான் என்ன சொல்ல முடியும்.. என் வீட்டில் light வசதி இல்லை என்று..
அப்படி சொன்னால் சக மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சிரிப்பார்கள்

ராத்திரி கரண்ட் இல்லாம படிக்க முடியலனா..
 
இல்லை பசி.
காத அடைக்குதுனா??
 
சொன்னா... காரணம் சொல்லாத னு 
இன்னும் ரெண்டு அடி சேர்த்து விழும்..

ஆனா அந்த அடி ஒவ்வொண்ணும் 
என் முதுகில் விழவில்லை..
என் மனதில் பதிந்தது..

ஒவ்வொரு அடிக்கும் சத்தியம் பண்றேன்: 
விதியை ஒருநாள் வெல்வேன். 
 
வழியெல்லாம் அழுதுட்டே வந்தேன்.
வானத்த பாத்து கத்தினேன்..

ஏன் டா எனக்கு மட்டும் இப்படி  நிலைமை என்று வானத்தை பார்த்து கேட்டேன்..

வானம்::
 பதில் சொல்லவில்லை
ஆனால் என் மனசு சொல்லுச்சு..
அழு... இன்னைக்கு அழு..
நாளைக்கு உலகம் உலகம் உன்னை பார்த்து வியந்து போகணும்..

ஆனால் ஒன்று மட்டும் இல்லை  பயம்..

ஏழைக்கு பயம் மட்டும் இருக்க கூடாது..

ஏன் என்றால் எனக்கு தெரியும்
விதி என்ன பின்னாடி இழுத்தா 
நான் முன்னாடி பத்து அடி போவேன் என்று..

அதுவரைக்கும் விழுவேன். எழுவேன்.
தோற்ப்பேன். ஜெயிப்பேன். அழுவேன். சிரிப்பேன்...

கேட்டுக்கோ விதியே, 
நீ பெரிய ஆளா இருக்கலாம், 
ஆனால் இந்த School boy
உன்னை விட பிடிவாதக்காரன். 
நீ என்ன கீழ இழுத்தாலும் 
நான் மேல மேல போவேன். 
நீ என்னை அழ வச்சாலும் 
நான் சிரிச்சுக்கிட்டே ஜெயிப்பேன். 

இது வெறும் வார்த்தை அல்ல
என் வேர்வை துளினால் எழுதின வாக்கியம்..

ஒரு நாள் என் வாழ்க்கை மாறும் அப்பொழுது நான் மிக பெரிய தொழில் அதிபரா இருப்பேன்..

அப்போ வரும் கண்ணீர் கஷ்டத்தில் வரும் கண்ணீர் அல்ல..
ஆனந்த கண்ணீர்..

உண்மையா உழைதால் உலகமே  வியர்ந்து பார்க்கும்..

அதுவரைக்கும் தூக்கம் இல்லை சோம்பல் இல்லை..

விதியே, உனக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்..
 நீ பேனாவால எழுதுன விதி..
 நான் என் வேர்வையால் எழுதின வரலாறு..
என் வேர்வை ஒவ்வொரு சொட்டும் சத்தியம் பண்ணும்..
 நான் தோற்க மாட்டேன்.
உழைப்பாள் உயர் வேன் என்று..

கனவு காண்பது கண்களின் வேலை...
அதை நினைவாக்குவது நெஞ்சத்தின் துணிச்சல்...

வானம் வசப்பட பறவைகளுக்கு சிறகுகள் மட்டும் போதாது... துணிச்சலும் வேணும்..

கடின உழைப்பு இருந்தால்...
நாளை உலகம் சொல்லும்..
அவன் சாதனையாளன் என்று...

வெற்றி பெற திறமை மட்டும் போதாது..
தோல்வியை தாங்கும் மண தைரியமும் வேண்டும்...

 விதியே ::
 உழைப்பால் வெல்வேன். மதியால் வெல்வேன். வென்றே தீருவேன்...

       TQ
Priyamudan
School boy
« Last Edit: May 19, 2026, 12:27:59 AM by Rahmathulla »

Offline Kavii

நம்பிக்கை கண்ணாடி

காலம் தீட்டிய கருப்பு ஓவியம் - இவன்
கந்தை சுமக்கும் வறுமை காவியம்!
கிழிந்த சட்டையின் துவாரங்கள் வழியே
கீறிப் பார்க்கிறது... ஏழ்மையின் வலி!

குப்பை மேட்டில் மலர்ந்த மொட்டு - இவன்
கையில் சுமப்பதோ கந்தல் மூட்டை!
தோள் வலித்தாலும் தூக்கிச் செல்கிறான்
தொலைந்து போன தன் வசந்த காலத்தை!

வெறித்த பார்வை... முன்னொரு கண்ணாடி!
அதிர்ந்து நின்றான் அழுக்குச் சிறுவன்!
பிம்பம் அங்கே புதுக்கதை சொல்ல...
வியந்து நின்றது அவனது இதயம்!

அழுக்கு படிந்த மேனி மறைந்து
அழகிய பள்ளிச் சீருடை மின்ன!
கந்தல் மூட்டை மறைந்து அங்கே
கனமான புத்தகப் பை வந்து அமர!

கண்ணாடியில் தெரிவது வெறும் நிழலா?
இல்லை... சிதைந்து கிடக்கும் சிற்பத்தின் நிஜம்!
ஏழ்மை எனும் சிறையை உடைத்து - இவன்
எழுந்து வரத் துடிக்கும் அறிவுப் பிரவாகம்!

"ஓவியம் உயிராகிறது" - ஆம்!
இந்தக் காகிதச் சித்திரம் உயிர் பெறுகிறது!
விழி ஓரம் தேங்கிய கண்ணீர்த் துளி
வெற்றித் தாகமாய் அங்கே மாறுகிறது!

"நானும் மனிதன் தானா?" என்ற கேள்விக்கு
கண்ணாடி சொன்னது... "நீ ஒரு சரித்திரம்!"
சாம்பலில் பிறக்கும் ஒரு பீனிக்ஸ் பறவையாய்
சரித்திரப் பக்கத்தில் உன் பெயர் பதியும்!

வறுமை என்பது ஒரு சாபமல்ல
கல்வி எனும் உயிர்நீர் ஊற்றினால்,
நிழலாய் இருக்கும் அந்தச் சிறுவன் - ஒரு
நிச்சயமான நாளைய சரித்திரமாவான்!

விதியே... நீ கரிக்கோட்டால் எழுதினாலும்
அவன் அறிவெனும் வைரம் கொண்டு உன்னை வெல்வான்!
அவனது கனவு நிச்சயம் நிஜமாகும் - நாளை
இந்த உலகையே ஆளப்போகும் ஒரு பேரொளியாக!


Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 348
  • Total likes: 1444
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
வேட்கை 🔥 🔥 🔥

சுற்றியிருக்கும்  கற்குவியலில் எனது
கனவுகளும் ஒளிந்து கிடக்க
என்னை தேடும் படலம்
தொடங்குகிறது புத்தக பையுடன்

முன்னோக்கி செல்ல தான்
எத்தனை தடைக்கற்கள் இடர்பாடுகள்...
தடைக்கற்களை அடுக்கிய படியே
முன்னேறுவேன் படிப்படியாக

கிழிந்து கிடப்பதும் தூசி படிந்து
காணப்படுவதும் என் வெளித்தோற்றமே
எதிர்கால சிந்தனையால் செதுக்கப்படுகிறது
பிறரறியா என் அகத்தோற்றம்...

சோர்ந்து விதியே என்று
கிடப்பதற்கல்ல இவ்வாழ்க்கை...
அறிவை ஆயுதமாக மாற்றி
மாற்றத்தைக் காண

தாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு அடியும்
என்னை உடைப்பதற்கல்ல மாறாக
என்னை செதுக்கும் உளியாக
வலியால் வலிமையாக மாற்ற

இன்று நான் மட்டும்
காணக்கூடிய வலிமையான என்னை
உலகறிய செய்ய ஆயத்தமானேன்
கல்வி என்னும் ஆயுதத்தால்...

ஒரு வண்ணத்துப்பூசியின் உருமாற்றம்
சிலையாகும் ஒரு கல்லில் உருமாற்றம்
சிதைந்த எனது உருமாற்றம்
வெற்றி வேட்கையால் நிகழும் உருமாற்றம்
« Last Edit: May 19, 2026, 01:24:49 AM by Yazhini »

Offline TiNu


சாபமா? இல்லை வரமா ?

அன்று ஓர் நாள்.....
கண்விழித்து பார்த்தேன்..
சூரிய ஒளி, கண்ணை பறித்தது..
மனம் பதறி ...எழுந்தேன்...,
ஐயோ! வெகு நேரம் ஆகிவிட்டதே..
எனைவிட்டு .. எல்லோரும்
விரைந்து.. சென்றிருப்பார்களே..

பல இடங்களில் கிழிந்து.. தைத்த..
ஓட்டை இல்லா என் கைப்பையை
எடுத்துக்கொண்டு..ஓட்டமும்
நடையுமாக ஓடினேன்.. .

அதிகாலையில் தானே..
எல்லா வீட்டின் குப்பைகளும்
குப்பைமேட்டுக்கு வரும்..
நான் தாமதமாக போனால்..
தூக்கியெறியப்பட்ட புத்தகங்கள்..
எழுதாத வெள்ளை காகிதங்களை   
எல்லாம் எரித்து விடுவார்களே..

அப்படி மட்டும் நடந்தால்..
என் படிப்பும்.. என் கனவுகளும்
கலைந்து சுக்குசுக்காக.. சிதறி விடுமோ....
என்ற பயம் கவ்விய முகத்துடனே ..
அதிவேகமாக ஓடினேன்..
மலைபோல் கொட்டி கிடந்த
குப்பைக்கிடங்கு நோக்கி..
 
இன்று....
"என்னங்க.. எழுந்திரிங்க..
அலுவலகம் போகும் நேரமாச்சு"..
அன்புடனே முகம் மலர...
அழைத்தாள். என் மனைவி...
ஆம், இன்றோ நான் ஒரு..
பொறுப்பான வங்கிஅதிகாரி..
கடவுளின் அருளாலும்..
கடின உழைப்பாலும்..
கிடைத்த பலன்.. இது....
என் கனவுகளை சாதித்த.
பெருமையுடன்.. கிளம்பினேன்..
மனம் நிறைந்த மகிழ்வுடனே..

காரின் வெளியே யாரோ.. எனை கைநீட்டி
பேசுவதுபோல்  ஓர் உணர்வு....
நிதானித்து அவர்களை கவனித்தேன்...
"அதோ போறாரே ஒருத்தர்..
அவர்தான் ஒரு காலத்தில்.. இங்கே..
குப்பை பொறுக்கிட்டு இருந்தார்..
இன்று காரில் போகிறார்...
இது அவரின் விடாமுயற்சியும்
கடின உழைப்பின் பலன்.. .
நீயும் அதே போல.. நல்ல படிச்சு..
நல்ல நிலைமைக்கு வரணும்..
புரிஞ்சுதா மகனே...?" என்றாள் அவள்...

அந்த சிறுவனுக்கு நான் ஓர் நல்ல
உதாரணமாக இருந்தாலும்.. என்
மனம் கனத்தது... வலித்தது... என்னை
அறியாமல் கண்கள் வியர்த்தது..

அழுக்கடைந்த.. உடைகளையும்.. கிழிந்த பையுடன்..
குப்பைகளை.. சேகரிக்கும் என் அடையாளங்களை
மாற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இருந்த எனக்கு...
இது சாபமா? இல்லை வரமா ?....

« Last Edit: May 19, 2026, 04:47:32 PM by TiNu »

Offline Ashik

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 58
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கனவொன்று கண்டேன் !!
பள்ளி செல்லும் எனக்கு
என் தாய் உணவு ஊட்டினாள் !! அலங்காரமாய் நான் உடையணிந்து
வாசல் வரை வந்து நின்ற
பேரூந்தில் ஏறி பள்ளி சென்றேன் !!

கனவொன்று கண்டேன் !!
என் அக்கா அவள் மதிவண்டியில்
என்னை அமர வைத்து
ஊர்த்தெருக்களில் வலம் வந்தாள் !!
என் தங்கை என் கரம் பற்றி
நடக்க பயின்றாள் !!

கனவொன்று கண்டேன் !!
பனி முடிந்து திரும்பி வந்த
என் தந்தை எனக்காக வாங்கி வந்த தின்பண்டங்களை அவர் மடியில்
அமர வைத்து ஊட்டி விட்டார் !!
நான் சோர்வாக இருந்த போதெல்லாம் எனக்கு தான் இருக்கிறேன் என்ற
பலத்தை கொடுத்தார் !!

கனவொன்று கண்டேன் !!
விடுமுறை நாட்களில் நண்பர்கள்
என் வீடேறி வந்து மைதானத்திற்கு விளையாட என்னை அழைத்து சென்றனர் !! நீர் நிரம்பிய குளத்தில் எனக்கு
நீந்த சொல்லி கொடுத்தார்கள் !!

கனவொன்று கண்டேன் !!
என்னை சுற்றி என் குடும்பமும் என் நண்பர்களும் எப்பொழுதும் வலம் வந்தனர் !! காண்பவர்களுக்கு அலங்காரமாய் உடையனிந்து மிடுக்காய்
நான் அவர்களை ஈர்க்க செய்தேன் !!

தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
ஆதவற்றோர் இல்லத்தில் ஓரமாய்
நான் படுத்து இருந்தேன் !!
கிழிந்த என் போர்வையால் குளிர் தாங்காமல் எழுந்திருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன்!!

கிழிந்த என் சட்டையணிந்து
மெலிந்த தேகமாய் இளைத்திருந்தேன் !! தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
தாயும் இன்றி தந்தையுமின்றி ஆதரவற்ற ஒருவனாய் இந்த விடுதியில்
என்னை இணைத்து கொண்டேன் !!

தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
மீண்டும் தூங்கி கனவால் வரும்
அந்த சிறு சந்தோஷத்தை எண்ணி
ஏங்கி இருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!மற்றவர்களுக்கு நிதர்சனம் உருவமாய் கனவுகள் நிழலாய் இருக்க !!
எனக்கோ கனவு என் உருவுமாய் மாறி நிதர்சனம் என் நிழலாய் மாற பிராத்தனையுடன் நான் !! 💔🚶‍♂️