அன்புள்ள தேன்மொழி தங்கச்சி, வெண்மதி அக்கா,
உங்களின் இதயம் கனிந்த பாராட்டுகளால்
நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன்.
என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால்
இந்த பயணத்தில் நீங்கள் எனக்கு துணையாக
இருந்ததோடு மட்டும் இல்லாமல்,
ஒவ்வொரு சிறிய சாதனையையும் நேரம்
எடுத்துக் கொண்டு பகிர்ந்து வருவது.
மற்றவர்களின் பங்களிப்பை பாராட்டுவது,
அனைவரின் உழைப்பையும் வெளிச்சம் போட்டு காட்டுவது,
இந்த அற்புதமான வெற்றிக்கான
உங்கள் உணர்ச்சி பூர்வமான இணைப்பு
இவை அனைத்தும் உண்மையிலேயே சிறப்பு.
நாம் ஒரு software உருவாக்கலாம்,
technical கேள்விகளை கேட்டு
features செயல்படுத்தலாம்.
ஆனால், மற்றவர்களின் முயற்சிகளை கவனித்து பாராட்டுவது,
அதே சமயம் எளிமையாக இருப்பது
எல்லோராலும் செய்ய முடியாத ஒரு விஷயம்.
இந்த அற்புதமான பதிவுகளுக்கு
நான் மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும்
உணர்கிறேன் .
அன்புடன்
அனோத்