Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 400  (Read 165 times)

Offline Forum


ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 400

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Thenmozhi

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 744
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

        என்  உயிர் தோழி
     “ஓவியம் உயிராகிறது”

Ftcஇல் ரொம்ப நேசிப்பது
நான் உன்னை தான்!
Forum இல் என்னை உள் நுழைய
வைத்ததும் நீதான்!
நீ நவரச நாயகி!
ftcஇல் நீ எப்போதும்
ஜொலிப்பாய் வைரமாக!
நீ சாதாரண ஆள் கிடையாது
உன்னை கட்டி எழுப்பியது
பல பேரின் உழைப்பு!

371வது வாரத்தில் இணைந்து
கொண்டேன் கவிதைப்
பயணத்தில் உன்னுடன்..
இப்போ உன் பாசத்தால் பிரிய மனமின்றி
உன்கூட இருக்கின்றேன் ஒவ்வொரு
வாரமும் அன்பு தோழியாய்!
4சதம் நீ கண்ட வெற்றியை கண்டு
மிக்க மகிழ்ச்சி அடைகிறது என்மனம்!

உலகில்  முதன்மையான மொழி
செம்மொழியான தமிழ் மொழி!
தேனிலும் இனிமையான தமிழ் மொழிக்கு
நீ முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு!
அழகியற்கலைகளில் ஒன்றான ஓவியக்கலையை
இரசிக்காதவர் யாருமிலர்!

வரைந்த ஓவியங்கள்  எப்போதும்
எழுப்பி விடும் நம்மமுள் பல
எண்ணங்களை கவிதை எழுதுவதற்கு!
ஒவ்வொரு வாரமும் விதவிதமான
நிழற்படங்கள் வழங்கப்பட...
அழகான கவி வரிகளில்
வெவ்வேறு மொழி நடைகளில்
கவிஞர் ,கவிதாயினிகள் உயிர் கொடுக்க ...
வண்ணமயமாக வரையப்பட்ட கவிதைகளை
அழகாகத் தொகுத்து வழங்கிடுவர்
பண்பலையில் தொகுப்பாளர்கள்....

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியை
பண்பலையில் கேட்பதற்கு
காத்திருப்பார்கள் பல இரசிகர்கள்!
இந்நிகழ்ச்சியை கேட்கும் போது
கவிதை எழுதும் ஆசையை
எல்லோர்க்கும் தூண்டும் சக்தி
உன்னிடம் உண்டு தோழியே!

உன்னை பார்ப்பதற்கு ஒவ்வொரு
வாரமும் ஒரே நண்பர்கள் வருகிறார்கள்
என்பதற்காக கொண்டு வந்தனர்
விதிமுறைகளை....
புதிய நண்பர்கள் கூட இணைகிறார்கள்
இப்போ உன்னுடன்...
400 வாரங்களாக நீ பெற்ற
நண்பர்கள் ஏராளம்!

ஒரு வாரம் நீ வரவில்லை என்றால்
ஏனோ என் மனம் துடிக்கின்றது
எப்போ வருவாய் என்று...
உன் ஓவியத்தை பார்த்தவுடன்
என் மனதில் எழும் பல எண்ணங்கள்!
பத்தே நிமிடத்தில் எழுதிட தோணும்
எனக்குத் தெரிந்த கவி வரிகளில்...

நீ  400 வாரங்களாக வழங்கிய
ஓவியங்கள் அனைத்தும்
வித்தியாசமானவையும் தனித்துவமானவையுமே!
ஒவ்வொரு ஓவியத்துக்கும்
வித்தியாசமான கண்ணோட்டத்தில்
கவிஞர்கள் கவி வரைந்திடுவார்கள்!

உறவுகள்,காதல்,நீதி,சமத்துவம்,
கல்வி,கலைகள் என்று பல்வேறு
ஓவியங்களை வழங்குவதும்
பலபேர் உழைப்பே!
அந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுப்பது
கவிஞர்களோடு உழைப்பு!
கவிதைகள் எழுதவில்லை என்றாலும்
கவிஞர்களை ஊக்கப்படுத்துபவர்கள்
கொடுப்பதும் உழைப்பு!
கவிதைகளை தொகுத்து வழங்கும்
தொகுப்பாளர்கள் கொடுப்பதும் உழைப்பு!
பண்பலையில் தொகுத்து வழங்குவதற்கு
எடிட்டிங் செய்பவர் கொடுப்பதும் உழைப்பு!

எல்லோரும் கொடுத்த உழைப்பினால்
என்னுயிர் தோழி இன்று
400 வது வார வெற்றியை
சிகரம் தொட்டுவிட்டாள்!
இது தோழிக்கு மட்டுமல்ல
தமிழுக்கும் கிடைத்த வெற்றியே!
அழகிய கலையான ஓவியத்துக்கும்
கிடைத்த வெற்றி இது!

இந்த நிகழ்ச்சியை என் மனதை
மட்டும் அல்ல
பல நண்பர்களின் மனதுக்கு
ஆறுதலும் ,விருந்தும் அளிக்கின்ற
ஒரு நிகழ்வு!
கவிஞர்கள் அவர்களின் எண்ணங்கள் ,
உள்ளக் கிடக்கைகளை
அழகாக வெளிக் கொண்டு வர உதவும்
ஒரு நிகழ்வு "ஓவியம் உயிராகிறது"

உழைப்பே உயர்க! தமிழ் வாழ்க!
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
வெற்றி நடை போடுக!


குறிப்பு:-இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றிகளும் பாராட்டுக்களும்.
இன்னும் நீ பல வெற்றி காண என்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!







« Last Edit: Today at 04:16:39 AM by Thenmozhi »

Offline Kavii

“ஓவியம் உயிராகிறது” – வெற்றி பயணம் – 400!
இது பல இதயங்களின் உணர்வுகள் உயிர் பெற்ற பயணம்!

கவிதை என்பது…
மனித உணர்வுகள், அனுபவங்கள், சிந்தனைகள்…
அழகியல் நயத்துடனும், சந்த நயத்துடனும்
செறிந்த சொற்களாய் மலரும் ஒரு கலை!

கவிஞனின் மனதில் பிறக்கும் காட்சி
அனுபவங்களின் நிசப்தம்,
வார்த்தைகள் கோர்த்து,
உணர்ச்சிகள் சேர்த்து,
எழுத்தாய் மலர்ந்து,
இதயத்தில் நிலைக்கும்…
தமிழ் பேசும் கவிதை!

ஆனால் இங்கு…
ஒரு கவிஞன் மட்டும் இல்லை…
ஒரு மனம் மட்டும் இல்லை…

ஒரு ஓவியம்…
அதைப் பார்க்கும் நூறு கண்கள்…
அதில் துடிக்கும் நூறு இதயங்கள்…
அதில் பிறக்கும் நூறு கவிதைகள்!

ஒரே படம்…
ஆனால் ஆயிரம் உணர்வுகள்…
ஒவ்வொருவரின் மனதில்,
ஒவ்வொரு உலகம் உருவாகிறது!

யாரோ அதை காதலாக எழுதுகிறார்!
யாரோ வலியாக உரைக்கிறார்!
யாரோ நினைவுகளை கூறுகிறார்
ஆனால் அனைத்திலும் ஓடும் ஒன்று…
தமிழின் உயிரோசை!

பல இதயங்களின் குரல்கள் சேரும் போது,
அவற்றை ஒரே குரலாய் உயிர்ப்பிக்கும் தொகுப்பாளரின் கலை…
ஒரு இசை! ஒரு சங்கீதம்!!
இதயங்கள் இணையும் ஓர் அழகு தருணம்!

அதை ஒரு குரல் வாசிக்கும் போது…
அது ஒருவரின் குரல் இல்லை!
பல இதயங்களின் துடிப்பு…!

அதை இசை தழுவும் போது…
அது பாடல் அல்ல!
உணர்வுகளுக்கு கிடைத்த இறக்கைகள்…
இப்படி உருவான இந்த பயணம் தான் இன்று
400…!!!

400… ஒரு எண்ணிக்கை அல்ல…!
400 முறை இதயம் துடித்தது!
400 முறை தமிழ் உயிர் பெற்றது!
400 முறை பலரின் உள்ளம்
இந்த அரட்டை அரங்கத்தில் பகிரப்பட்டது!

இந்த சாதனையின் பின்னால்,
தெரியாத உழைப்பின் தடங்கள்!
தூங்காத இரவுகளின் நிழல்கள்!
"இன்னும் அழகாக வேண்டும்" என்ற
அன்பான பிடிவாதங்கள்!

குரல் கொடுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உயிரோசை…!
ஒவ்வொரு நொடியையும் செதுக்கும் ஒலி வடிவமைப்பாளர்களின் பொறுமை!
மனதை தொடும் பாடலை தேர்வு செய்யும் திறமையாளர்களின் அந்த நுண்ணுணர்வு…!!
இவை அனைத்தும் சேர்ந்து தான்,
இந்த நிகழ்ச்சியை ஒரு சாதாரண முயற்சியாக இல்லாமல்,
ஒரு ஒரு அருமையான “வெற்றி பயணமாக” மாற்றியிருக்கிறது

இந்த 400…
ஒரு எண்ணிக்கை அல்ல!
ஒரு சாதனை மட்டும் அல்ல!
இது உழைப்பின் உயரம்!
அன்பின் ஆழம்!
தமிழின் பெருமை!

இந்த 400 ஒரு நிறைவு அல்ல…
இன்னும் பல நூறு ஓவியங்கள்!
இன்னும் ஆயிரம் கவிதைகள்!
இன்னும் எண்ணற்ற இதயங்கள்!
இங்கே உயிர் பெற காத்திருக்கின்றன!


இந்த அற்புதமான பயணத்திற்கு பின்னால் நிற்கும்
அனைத்து  தொகுப்பாளர்களுக்கும்,
எடிட்டர்களுக்கும்,
இசை தேர்வாளர்களுக்கும்,
எங்கள் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்…!!
இந்த “வெற்றிப் பயணம்” இன்னும்  தொடர
எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்… !!
« Last Edit: Today at 01:23:52 AM by Kavii »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 335
  • Total likes: 1388
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
என்னையும் எழுத வைத்தாய்
சிந்தனை சுனையைப் பெருக்கெடுத்த வைத்தாய்.
பார்க்கும் கோணத்தை வேறுபடுத்தினாய்...
ஓவியத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் உயிர் தந்தாய்...
தமிழை சுவைக்க மீண்டும் கற்று தந்தாய்..

என்றோ நான் வீசிய
கவிதைப் புத்தகத்தை மீண்டும்
உயிர்பெற செய்தாய்...
வீண் சிந்தனையில் கழிந்த இரவுகளை
கவிதையாக உருமாற்றினாய்...
கண்ணில் படும் காட்சிகளை
தமிழைக் கொண்டு மொழிபெயர்க்க செய்தாய்

பல நேரம் குழந்தையாய் மாற்றினாய்...
சில நேரம் குழந்தையை ரசிக்க வைத்தாய்...
தாய் மடியையும் தேட செய்தாய்...
தந்தையின் தியாகத்தையும் நினைவுட்டினாய்...
காதலில் கரைய செய்தாய்...
இயற்கையோடு உறவாட வைத்தாய்..

இசையோடு நடனத்தையும் ரசிக்க வைத்தாய்...
பல நேரம் சமூக பொறுப்பை உணர்த்தினாய்...
சில நேரம் தன்னிலை அறிய செய்தாய்
தனிமையையும் நல்ல துணையாக மாற்றினாய்

கவிதைக்கு குரல் கொடுக்க செய்தாய்...
காற்றிலும் அதனைக் கேட்க வைத்தாய்...
நல்ல தோழியையும் பரிசளித்தாய்...
மதுரமாக நட்பைச் சுவைக்க செய்தாய்...

நவீன மயமான இணையத்தில்
கவிதைகளை அழகுற படைக்க வைத்தாய்...
தமிழால் இணைய செய்தாய்....
தேன் சொட்டும் படைப்புகளையும் கொண்டாய்...
கங்கு போன்ற எண்ணங்களுக்கும் வித்திடுகிறாய்

தமிழால் வளர்ந்தாய்...
பல தடைகளையும் கடந்தாய்...
நண்பர்களால் உருபெற்றாய்...
காலம் பல கடந்து செழித்திருக்கிறாய்...
இன்னும் பல்லாண்டு செழித்திடுவாய்...
புது சரித்திரம் படைத்திடுவாய்.... 🔥 🔥 🔥
« Last Edit: Today at 12:34:49 AM by Yazhini »

Offline Shreya

அகர முதலாய் தொடங்கும் தமிழ்,
சிகரம் தொடவே வழிவகுக்கும்!

தன்னம்பிக்கை என்னும் உளியைக் கொண்டு
தடைகள் யாவும் தகர்க்கப்பட்டதே!!

​ஒற்றைப் பேனா முனையல்ல..இது
உழைப்பால் செதுக்கி, குரலால் கொடுத்த உயிர்!!

எழுதியவர் சிந்தனை ஒன்றென்றால்,
வாசித்தவர் உணர்வோ அதற்கும் மேலாக..
​குரலில் ததும்பிய அந்தத் தமிழ் அழகு,
கேட்டவர் யாவரும் மெய்மறக்க..
கவிதைகள் ஒவ்வொன்றும் ஓவியமானது!!

எத்தனை கவிஞர்கள்..எத்தனை வரிகள்..
அத்தனை பேரின் உழைப்பல்லவா?
மொட்டாக இருந்த கவிதைகள் எல்லாம்
முழுமலராய் மணம் வீசுதல்லவா?

உழைப்பு என்பது எழுதிய விரல்களில் மட்டும் அல்ல,
உயிர் கொடுத்து வாசித்த உங்கள் குரலிலும் உண்டு!!

கல்லில் செதுக்கிய சிலையாக
நம் கவிதை வரிகள் நிலைக்கட்டும்..
குரலால் உயிரூட்டிய கலைஞர்களே
உங்கள் புகழும் என்றும் ஓங்கட்டும்!!


நானூறு வார சாதனைப் பயணமிது!
எழுத்துக்கு உயிர் தந்து தமிழை உயர்த்துவோம்!
குரலால் உணர்வு தந்து வெற்றியைச் சூடுவோம்!
தொடரட்டும் இந்த அழியாத கவிதைச் சரித்திரம்!!!
« Last Edit: Today at 12:36:16 AM by Shreya »

Offline Sadham



வெற்றி விழாவும் கேப்ரியலும்

FTC பல நண்பர்களை சேர்த்த
மிக பெரிய ஆசான்...
வெற்றி விழா என்பது
சாதாரணமாக கிடைத்து விடாது...

ஒரு கையின் ஓசையினால்
சத்தம் வராதது போல
பல கைகள் சேர்ந்து தான் ஓசை வரும்...

அது போல தான் FTC நாயகனே...
தன் சிந்தனையில் நண்பர்களை உருவாக்க
FTC நாயகனே நிறைய
கஷ்டப்பட்டார் என்பது நமக்கு தெரியாத ஒன்று...

ஓவியம் உயிராகிறது 1 முதல் 400 வரை
உயிர் கவிஞர்களை உருவாக்கிய
பெருமை FTC நாயகனையே சேரும்...

தினமும் ஒரு நிகழ்ச்சியை
ஒலிபரப்ப செய்யும் நாயகனே
உன்னை எந்நாளும் மறக்க இயலாது...

FTC நாயகனே உங்களை பாராட்ட
எனக்கொரு வாய்ப்பு என்றால்
ஓவியம் உயிராகிறது 400 ஐ தான் சொல்வேன்...

நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சி
எல்லா நண்பர்களும் கடந்த கால நினைவுகளை
வெளிப்படுத்த நிம்மதியான தருணம்...
பல சுவாரசியங்கள்...
பல பேரின் மனதில் உள்ள ஆசைகளை
எழுத்து வடிவில் நம் எல்லோர் மனதையும்
ஈர்க்க செய்த சொற்கள்...
எப்போதும் மறக்க இயலாது...

ஓவியம் உயிராகிறது வெற்றிக்கு
உறுதுணையாயிருந்த RJ&,DJ மற்றும் நண்பர்கள்
அனைவருக்குமே என் பாராட்டுக்கள்

உங்கள் சாய்ஸ்...
எல்லா நண்பர்களை ஒன்றாக்கி
ஆடலுடன் பாடல்களை நடத்தி கொடுதல்
FTC நாயகனே
என்றும்  எல்லா நண்பர்கள் மனதிலும்
நீங்கா  இடம் பிடித்த
அன்பு தோழன் கேப்ரியல்..

உங்களை மனதார வாழ்த்த
எனக்கு கிடைத்த வாய்ப்பு
ஓவியம் உயிராகிறது 400
வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்....
நன்றி
« Last Edit: Today at 05:34:51 AM by Sadham »

Offline Luminous

ஓவியம் உயிராகிறது – என் உள்ளத்தின் ஓர் பயணம்

FTC-யின்
“ஓவியம் உயிராகிறது” என்ற
கவிதை உலகில் நான் நின்ற நாள்,
அது ஒரு ஆரம்பம் மட்டுமல்ல,
ஒரு அடையாளத்தின் பிறப்பு.

முழு ஒரு ஆண்டு கூட ஆகவில்லை,
ஆனால் என் பெயருக்கு முன்
ஒரு சிறிய ஒளி வந்தது
அது இந்த மேடையால்தான்.

இங்கு எழுத்துகள்
வெறும் வார்த்தைகள் அல்ல,
மதிக்கப்படுகின்றன,
பாராட்டப்படுகின்றன,
அன்போடு செதுக்கப்படுகின்றன.
ஒரு வரி தடுமாறினால்
திருத்தம் சொல்லும் நண்பர்கள்,
ஒரு உணர்வு மலர்ந்தால்
அதை உயர்த்தி நிறுத்தும் இதயங்கள்
இவை அனைத்தும் இங்கே கிடைத்த வரங்கள்.

இந்த நிகழ்ச்சி
ஒரு virtual media மேடையல்ல,
மறைந்திருக்கும் திறமைகளை
உலகிற்கு அறிமுகப்படுத்தும்
ஒரு அழகான வாயில்.
பயந்து நின்ற மனங்களை
பாசமாக இணைத்து,
 “உன்னால் முடியும்” என்று சொல்லி
அவர்களின் திறமையை வெளிக்கொணரும்
ஒரு அருமையான பாலம்.

இங்கே கண்ட கவிதைகள்
என் உள்ளத்தில் பதிந்தன…
அதில் ஒரு கவிதையை நான்
என் கல்லூரியில்
மகளிர் தினத்தன்று வாசித்தேன்
அந்த நொடி…
மெய் சிலிர்த்த பார்வைகள்,
கைத்தட்டல்களின் ஓசை,
இதயமார்ந்த பாராட்டுகள்
அவை எல்லாம் அந்த கவிஞருக்கே சென்றது.
அந்த ஒரு நிமிடம்
இந்த மேடையின் மதிப்பை
இன்னும் உயர்த்தியது.

நான் அதிகம் பேசவில்லை இங்கே,
ஆனால்…
கவிதைகளோடு நான்
நிறைய பேசிக் கொண்டிருக்கிறேன்.
பதிவேற்றும் முன்
“இது இன்னும் அழகாகலாம்” என்று
உரிமையோடு சொல்லும் நண்பர்கள்
அவர்கள் என் எழுத்தின் வழிகாட்டிகள்.

400 வாரங்கள் கவிதைகளை கடந்த இந்த பயணம்
இது ஒரு எண்ணிக்கை அல்ல,
400 இதயங்களின் துடிப்பு.
இன்னும் பல வாரங்கள், நூறுகள் ஆக
இந்த மேடை மலரட்டும்…
மேலும் பல திறமைகள்
அடையாளம் காணப்படட்டும்…
இந்த சமுதாயத்திற்கும்,
அந்த திறமையாளர்களுக்கும்
ஒளி தரும் இந்த நிகழ்ச்சி
என்றும் தொடரட்டும்.

சமூகத்தை நாடிய
என் உள்ளத் தாகத்திற்கு
அடையாளம் கொடுத்தது
இந்த நிகழ்ச்சி.
என்னை நான் கண்டெடுத்த அந்த நிமிடங்களுக்கு…
என் நன்றிகள் அல்ல
என் மரியாதை.

இவ்வளவு அருமையான
ஒரு உலகத்தை உருவாக்கிய
FTC-க்கு
என் காதல்,
என் மரியாதை,
என் மனமார்ந்த நன்றிகள்.

LUMINOUS 😇🧡💛💚💙💜🌹🧚‍♀️
« Last Edit: Today at 01:33:16 PM by Luminous »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1280
  • Total likes: 4416
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
FTC ஓவியம் உயிராகிறது 400 வது நிகழ்ச்சி

இந்த பயணத்தின் பாதை எளிதல்லவே,
ஆனால் நம்மிடம் துணிவு இருந்தது
நம்பிக்கை தீபம் எப்போதும் எரிந்தது
வியர்வைத் துளிகள் எல்லாம் இன்று வைரம் ஆனது,

இணைந்து நடந்தோம் கை கோர்த்து,
இலக்கை அடைந்தோம் மனம் நிறைத்து
400 வாரங்கள் ஒரு சாதனை அல்ல
அது ஒரு அழகான வாழ்வியல்

கவிதை எழுதிட துடித்த உள்ளங்கள் ஏராளம்
இரு கை நீட்டி வரவேற்ற FTC  மனசோ தாராளம்
பிழைகள் இருப்பின் தோள் தட்டி சொல்லி தந்தது 
அழகாய் கவிதை வடிப்பின் கை தட்டி ஆர்ப்பரித்தது

நம்பிக்கை நம் வழிகாட்டி ஆனது,
நேர்மை நம் பலமாக மாறியது.
ஒன்றிணைந்த முயற்சி வெற்றி கண்டது,
ஒவ்வொரு இதயமும் பெருமை கொண்டது.
சிறு முயற்சிகள் சேர்ந்து மலை ஆனது,
அந்த மலைமேல் நம் கொடி பறந்தது.

ஒன்றிணைந்து கொண்டாடும் நாள் இன்று,
உழைப்பின் மணம் வீசும் நினைவுகள் நன்று.
சின்ன தொடக்கம் இன்று பெரிய சாதனை,
எல்லோரின் முயற்சியே அதன் காரணமாய்

இன்னும் பல உச்சிகள் எட்ட வேண்டும்,
இன்னும் பல வெற்றிகள் சேர வேண்டும்.
நம் முயற்சி என்றும் நிற்காது,
நம் சாதனை எப்போதும் தாழாது.

உழைப்பே நம் வாழ்வின் மூச்சு,
வெற்றியே நம் இதயத்தின் ஓசை
இன்றைய கொண்டாட்டம் தொடக்கம் தான்,
காத்திருக்கின்றன வெற்றிகள் பல நமக்காய்
வீறுநடை போட்டு நடப்போம்


***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "