Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 399  (Read 66 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 399

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Sadham

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 75
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


            ரோஜாக்கள் 

மொட்டுக்கள் மலர்ந்து
உண்டாகிறது ரோஜாப்பூ
ஆனால் என் காதல் மலர்ந்து
உண்டாகிறது வேதனை🌹

சிறு வயதில் இருந்ததே உன்னை
நான் பார்க்காத நாள் இல்லை!
வயது அறிந்து உன்னை பார்த்த பின்
என் காதலுக்கு மிக சிறந்த
பரிசு நீ தான் என்று
சந்தோஷம் என் மனதில்

உன்னை என் கையில் வைத்து
இரசித்த போதெல்லாம் ஏதோ
மனதுக்குள் இன்பம் நிறைந்த மகிழ்ச்சி காதல் வையப்பட்டேன் நான் ...

என் தேவதைக்கு 🌹 உன்னை கொடுத்து
என் மனத்தில் உள்ளதை சொல்ல
ஆசை பட்டேன் காதலர் தினத்தன்று
சிறு தயக்கம் நம் இருவருக்குள்
பிளவு வந்திடும் என்று ...

அச்சப்பட்டு உன்னை 🌹
என் கரங்களால் மறைத்து வை‌க்கப்பட்டப்போது தான தெரிந்தது
நீ 🌹 மட்டும் தான் எனக்கு சொந்தம்

என் தேவதை இடம் 🌹
உன்னை கொடுத்தால்,
அவள் போல் யாரும்
இல்லை இனிமேல்....
அவள் என்னிடம் பேசாமல் போய்
விடுவாள் என்று தயக்கம்

எல்லார் வாழ்க்கையிலும்
"காதல்" என்ற சொல் புனிதமானது
எனக்கோ மதம் தடை ஆக நின்றது

என் தேவதை இடம் காதல்
சொல்ல  எவ்ளோ ஆசைப்பட்டேனோ
அதற்கு மாறாக கண் முன்
வந்து சென்றது நமக்குள்
தடையாக நிற்கும் மதப்பாகுபாடு தான்!

காதல் செய்ய தெரிந்த எனக்கு
அதை என் தேவதை இடம் சொல்ல
மனசு வரவில்லை..

பல காதலர்களை சேர்த்து
வைத்தாய் 🌹ஆனால்
என் வாழ்க்கையில் என்னவவோ
தூரத்தில் நின்று பார்க்க வைத்தாய்
வாழ்வில் சோகம் தான் நீடிக்குமா ?
🌹 நீ புதிதாக நடக்கும் நிக்காஹ் (என்னும்) திருமண விழாவில் வலம் வருவாய்

பலபேர் திருமண வாழ்க்கையில் 🌹
நீ பந்தம் உருவாக்கினாய்
அது போல என் வாழ்க்கையிலும் என்னவளுக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்....
🌹 எங்களை ஒன்று சேர்த்து வைப்பாயாக

பிரியமுடன்
Rahmathulla

Offline Luminous

வலியைத் தாண்டி ஒளிர்வாய்
சொற்களில் பெருமை இல்லாமல்,
செயல்களில் மட்டும் உண்மை கொண்டு,
தன் வேலையை
சரியாகச் செய்து கொண்டு
அமைதியாக நடக்கிறான் ஒருவன்.

அவன் சத்தமாக பேச மாட்டான்,
ஆனால்
அவனது செய்கைகள்
மெதுவாகவே
உண்மையை பேசும்.

சிலர் அவனை
“ஏமாளி” என்று சிரிப்பார்கள்,
சிலர் அவன் அமைதியை
பலவீனம் என்று நினைப்பார்கள்,
சிலர் அவன் நேர்மையை
பைத்தியமாகக் கூட கூறுவார்கள்.

ஆனால்
உண்மையின் பாதை
மெல்ல மெல்ல சென்றாலும்
ஒருநாள்
தன் ஒளியை மறைக்காது.

சிகப்பு ரோஜாக்கள்
அனைத்தும் ஒன்றாய் மலர்ந்த
ஒரு பெரிய தோட்டத்தில்
தனித்து தெரியும்
ஒரு வெள்ளை ரோஜா போல,

ஒருநாள்
அவனது நேர்மையான
நடத்தைதான்
அவனை
எல்லோரிடமும்
தனித்துவமாக காட்டும்.

ஏனெனில்
தனியாகத் தெரிவது
சாதாரணம் அல்ல…

அதற்குள்
எத்தனை காயங்கள்,
எத்தனை அவமானங்கள்,
எத்தனை தோல்விகள்,
எத்தனை இரவுகளின்
மௌனக் கண்ணீர்கள்
மறைந்து கிடக்கின்றன.

பலர் திரும்பிப் போகும்
அந்த பாதையில் கூட
சிலர் மட்டும் தான்
தொடர்ந்து நடப்பார்கள்.
அவர்களின்
அமைதியான போராட்டமே
ஒருநாள்
அவர்களை உயர்த்தும்.

அனைவரும் சிகப்பு ரோஜாக்களாக
ஒன்றாய் தெரியும் போது
ஒருவன் மட்டும்
அமைதியாக
தன் நிறத்தில் நிற்பான்.

அவன் தான்
அந்த கூட்டத்தில்
தனித்து தெரியும்
ஒற்றை வெள்ளை ரோஜா.

ஆகவே நண்பனே,
எதிர்காலத்தில்
நீயும் தனித்துவமாக
தெரிய விரும்பினால்,
இன்றே
உன் வேலையில்
உன் கனவில்
உன் நேர்மையில்
முழு மனதுடன்
ஈடுபடு.

ஏனெனில்
ஒருநாள்
உன் உழைப்பும்
உன் பொறுமையும்
உன் நேர்மையும்
அந்த சிகப்பு ரோஜா கூட்டத்தில்
உன்னை
ஒற்றை வெள்ளை ரோஜாவாக
ஒளிரச் செய்யும். 🌹
LUMINOUS 😇💜💙💚💛🧡🧚‍♀️


« Last Edit: March 09, 2026, 11:49:39 PM by Luminous »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 98
  • Total likes: 702
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
   "என்னவன் என்றும் தனித்துவமானவன்"

அந்த ரோஜா தோட்டத்தில்
பல ரோஜாக்கள் இருந்தாலும்
ஒரு ரோஜா மட்டும் வெண்மையாக
என் மனதை பறித்தது !!
அவனும் ஏனோ  அந்த
வெள்ளை ரோஜாவாய்
எனக்குள் இருந்தான் !!

என் ஆசை எல்லாம்
அந்த வெள்ளை ரோஜாவை
என் கூந்தலில் சூடி கொள்வது தான் !!
ஆம்! என்னவனை என் இதயத்தில்
வாழ்நாள் முழுவதும் சுமப்பதை போல !!
அவனை சுமக்கும் என் இதயத்தை
அவனுக்கே பரிசளித்து அவனுடன்
நான் வாழ வேண்டும் !!

மலரின் வாசத்தை நுகர முட்களை
சிறுது நாம் தாங்கி கொள்ள வேண்டும் !!
ஆம்! என்னவனின் அன்பை பெற
நானோ அவனின் சிறு கோபங்களை
தாங்கிக் கொள்கிறேன் ...

ரோஜாவின் வாசத்தை போல
அவனும் தனித்துவமானவன்
அன்பை எனக்கு மட்டும் கொடுப்பதில்!!
கண் கவரும் வெள்ளை மலராய்
நான் இருக்க என்னை சுற்றி மட்டும்
இந்த தோட்டத்தில் எண்ணற்ற வண்டுகள் !!
யாருக்கும் இடம் கொடுக்காத
என் இதயத்தில் முழுதும் அவன்
நினைவுகளை நிரப்பி ,
அவனுக்காக என்றும்
நான் காத்திருப்பேன் !!

கனவில் கண்ட ரோஜா தோட்டம் !!
அங்கே ஒரு வெள்ளை மலரை சுற்றி
ஆயிரம் சிவப்பு நிற ரோஜாக்கள் !!

எனக்கோ அந்த வெள்ளை மலர்
என்னவன் போல தெரிந்தது !!
ஆம் என்னவன் எப்போதும் எனக்கு
தனித்தே தெரிவான் !!

அந்த தோட்டத்தில் நான்
இறங்கி நடந்தேன் !!
அந்த மலரை என் கூந்தலில்
சூடி கொள்ள !!
என்னவனை என் இதயத்தில்
சுமப்பது போல அந்த மலரை
நான் கூந்தலில் சூடினேன் !!
மலரின் வாசம் என்னவின்
பாசத்தை போல என்னை
முழுதும் ஆட்கொண்டது !!

என் இதயம் என்னவனை தேட ..
நானோ அந்த மலரை
அவனை  வருடுவது போல
வருடிப்பார்த்தேன்..
அதன் மென்மை அவன் என்மீது
கொண்ட காதலை போல
என்னை மெய் மறக்கச் செய்தது!

நான் காண்பது கனவு என்றாலும்
என்னவன் மீது நான் கொண்ட காதல்
என்றும் என்னை விட்டு விலகாத நிஜம்!!
மலரின் வாசத்தை நுகர நான்
சிறு முட்களை தாண்டி வந்தேன்!!
என் அவனின் காதலை பெற
அவனின் சிறு கோபங்களை
தாங்கி கொண்டது போல ...

இங்கே ஆயிரம்  ரோஜாக்கள்
இருந்தாலும் ஏனோ பல வண்டுகள்
அந்த வெள்ளை மலரை
சுற்றி கொண்டு இருந்தது ...
என்னை சுற்றி வரும் சில வண்டுகளை
எனக்கு நினைவுக்கு கொண்டு
வருவது போல ...
ஏனோ அந்த மலர் எந்த வண்டும்
தன்னை நெருங்க விடாமல்
மூடிக் கொண்டது !!
மலருக்கும் என்னவனை போல
ஒரு காதலன் இருப்பானோ?
என்ற எண்ணம் என் மனதில்!!
« Last Edit: March 09, 2026, 11:05:53 PM by Thenmozhi »

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 69
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
காலையில் கண் விழித்ததும்
என் மனதை புத்துணர்ச்சி
ஆக்கிடும் ஒரு காப்பி..
அதன் பின் சமையலை
தொடங்கி விட்டு நான்
ஓடும்  இடம் - என்
ரோஜா தோட்டம் தான்

வெயில் ஏறும் முன்
தண்ணீர் ஊத்தனுமே
என்று நான் ஓடினால்
எப்போ தண்ணீர் ஊற்ற
நான் வருவேன்
என்று காத்திருக்கும்
என் ரோஜாக்கள்....

தண்ணீர் ஊற்றும் போதே
எந்த செடியில் மொட்டுக்கள்
மலர்ந்திருக்கு என்று தான்
நொட்டமிடும் என் கண்கள்!

மழை நேரத்தில் தண்ணீரில்
நனைந்து நிற்கும் ரோஜாக்களை
பார்த்தாலே சந்தோசத்தில்
ஆர்ப்பரிக்கும் என் முகம்!
மனதில் உள்ள கவலைகள்
எல்லாம் பறந்து போய்விடும்
ரோஜாப் பூக்களின் அழகினை
இரசிக்கின்ற பொழுதில்...

விதவிதமான வர்ண நிறங்களில் பூத்திருக்கும் ரோஜா பூக்களே
உங்கள் அழகினை காண
கண் இரண்டு போதாது!
முட்கள் கூட அழகு தான் !
உங்களை  பாதுகாப்பதால்
அந்த முட்களினால் என் கைகளில்
ஏற்படும் காயங்களை கூட
பெரிது படுத்த மாட்டேன்
உந்தன் அழகில் !

என் மனதை இழந்ததினால்
உன்னை இந்த கோடை
வெயிலின் தாக்கத்தில் காப்பாற்ற
நான் படும்பாடு கொஞ்சமா?
இது எல்லாமே நான் உன் மீது
கொண்ட காதலின்
வெளிப்பாடன்றி வேறென்ன!

வெள்ளை, மஞ்சள் ,சிவப்பு ,
செம்மஞ்சள்,இளஞ்சிவப்பு
நிறங்களில்  நீ பூப்பத்தால்
நான் மட்டுமா உன்னை
கண்டு மகிழ்கிறேன் !
என்னோடு கூட சேர்ந்து
பறக்கும் பட்டாம்பூச்சிகளை
கேட்டுபார் ....
நீ மலர்ந்தவுடன் உன்னில்
தேனெடுக்க வரும் தேனீக்கள்
எண்ணிக்கையை பார்த்தால்
உன் வாசத்தின் அருமை புரியும்

காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
உன் வாழ்வே
இத்தனை அழகு
இந்த ஒரு நாளில்
நீ எத்தனை பேர் வாழ்வில்
மகிழ்ச்சியை தருகிறாய்
என்று உனக்கு தெரியுமா?
சிறுமியின் தலையில் பூவாய்
காதலன் காதலிக்கு தரும்
அன்பு பரிசாய்..
கோவிலில் அர்ச்சனை மலர்களாய்
நீ தானே மலர்களின் ராணி !
உனக்கு ஈடு இணை ஏது!

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1276
  • Total likes: 4391
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
சிவப்பு ரத்தத்தின் நடுவே
பூத்த  ஒற்றை வெள்ளை பூ
அமைதியின்
சின்னமாய்
மலர்கிறது

அது தனிமையில் இல்லை
யாரும் கண்ணுக்கு எட்டிய வரை
தன்னை போல துணைக்கு யாரும் இருப்பதாய்
தெரியவில்லை
ஆனால்
அது அங்கு அழகான அமைதியை
விதைக்க முயல்கிறது

இருளின் கோரத்தை மறைக்க முயலும்
வானத்தில் தோன்றும் அழகான "நிலவை" போல
தனது தனித்துவத்தை மறக்காமல்
நீ என்றும் நீயாக இரு என்ற தத்துவத்தை
உணர்த்திகிறதோ  அந்த ஒற்றை பூ
என தோன்றுகிறது

கூட்டத்தில் இவன் மட்டும் ஏன்
விசித்திரமாக என ஏளனமாக
பார்த்த கூட்டம்
காலம் கடந்து சென்றது.
ஒரு நாள்
அதே கூட்டம்
அவனை பார்த்து வியந்தது
அவனின் தனித்துவத்தை ரசித்தது

அவன் நடந்த மெதுவான பாதை
ஒரு புதிய வழியாக
மாறி இருந்தது.

தனியாக நடந்தவன்
தவறானவன் அல்ல,
புதிய பாதையை
முதல் முறையாகத் தேர்ந்தெடுத்தவன்

கூட்டத்திலிருந்து மாறுபட்டு
தன் பாதையை உருவாக்கிய
அந்த ஒருவனை மட்டும்
என்றும் இவ்வுலகம் மறக்காது…

காற்று வருகிறது , பூக்கள் எல்லாம் அசைந்து
ஒன்றோடு ஒன்று மோதுகிறது
அந்த பூ தனிமையில் இல்லை
ஆனால்
என்றும் தனித்துவமாய்
இம்மண்ணில்
வேரூண்டிருக்கிறது 


***Joker****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 226606
  • Total likes: 28993
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆழமான இளஞ்சிவப்பு நிற துலிப் மலர்
உன் மீதான என் உணர்வு
உன் இதயத்திற்கான என் திறவுகோல்
நீ செய்யும் அனைத்திற்கும் நன்றி.

அதன் நறுமணம் எனக்கு
இனிமையான வாசனை திரவியத்தை நினைவூட்டுகிறது
உன் அழகைப் போல இந்த துலிப் மலர்கள்
எந்த அறையையும் பிரகாசமாக்குகின்றன.

பார்ப்போரை இழுக்கும் உன் அழகு மகிமை வாய்ந்தது
அதன் இதழ்களோ என் உடலை மென்மையாக தடவி செல்கிறது
என் ஆசைகள் உன் பாவம்

இளஞ்சிவப்பு துலிப் மலர்கள் சொல்லும் நம் காதல் கதை
அது ஒரு  இனிமையான காதல் கதை
என்னை நரகத்திலிருந்து சொர்கத்திற்கு
கொண்டு செல்லும்

அழகான இனிமையான துலிப் மலர்கள்
நம் பயணத்தின் நினைவு சின்னமாய் என்றும் மனதிலிருக்கும்
அதன் ஒவ்வொரு இதழ்களும் நம் பயணத்தின் முதல் படியாய்
நம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீங்கா இடம் கொள்ளும்


Note.: Thank you EVIL Samyoo Patti thickering ku🌷🌷🌷