Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-004 (என்னுயிர் தோழி)  (Read 131 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-004

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“என்னுயிர் தோழி ”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 693
  • Total likes: 1921
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
என்னோட 13 வயசு வரைக்கும் நட்புனு சொன்னா அது தனிமையை போக்க ஒரு காரணமா மட்டுமே இருந்துச்சு. உனக்கு பிடிக்கும்னா எனக்கும் பிடிக்கும்னு சிலர் .நீ அவ கிட்ட பேசினாதான் நான் உன் கிட்ட பேசுவேனு விசித்திரமா சிலர். நேரம் போக்க பிரேக்ல மட்டும் பேச சிலர், இது தான் நட்பு போலன்னு அவள பாக்குற வர நினைச்சிட்டு இருந்தேன்.

7ம் வகுப்பு படிக்கிறப்போ தான் நானும் MK-ம்
 சந்திச்சோம். என்ன Judge பனிடுவாளோனு பயம் இல்லாம, எந்த ஒளிவு மறைவுமில்லாம அவள்கிட்ட தோணுறத பகிந்துக முடிஞ்சது. celebrity crush சினிமா , கிசுகிசு, ரகசியம்னு எல்லாமே பகிர்ந்துகொண்டோம்.   முதல் முதலா ஒருத்தரோட comfortable’ah கை கோர்த்து நடக்க முடிஞ்சுது. தோள் மேல கை போட்டு ஸ்கூல் ground’ah சுத்தி சுத்தி வந்த நாட்கள் இப்போ நெனச்சு பாக்குறப்போ கூட நேற்று நடந்த மாதிரி இருக்கு.  நட்பும் ஒரு உணர்வுன்னு அப்போ தன் உணர்ந்தேன்.

யார் கண்ணு பட்டுச்சோ தெர்ல அடுத்த வருஷம் அவ வேற நான் வேற class ரூம்னு பிரிக்க பட்டோம்.  தரை தளம் அக்னி மூலையில் நானும், மூணாவது மாடி வாயு மூளையில் அவளும். இதுக்கு நடுவில ஒரு ground. இதுல எங்க நாங்க அடிக்கடி சந்திக்கிறது. உணவு இடைவெளியில சந்திப்பு தொடர்ந்தது. பள்ளி முடிந்ததும் கொஞ்ச நேரம் நின்னு அரட்டை அடிச்சிட்டு  தான் வீட்டுக்கு போவோம். அடுத்த வருஷம் இரண்டு section’dhan ஒரே class வர வாய்ப்புகள் அதிகம்னு பேசிப்போம்.

கோடை பள்ளிவிடுமுறை பறந்தோடியது. மறுபடியும் ஸ்கூலா! என்று கடுப்புல இருந்த எனக்கு MK-வின் நினைவுகள் ஆறுதலா இருந்துச்சு. முதல் நாள் அவள் வரல .சரி  ஊரிலிருந்து வந்திருக்க மாட்டாள்னு நினைச்சேன்  ஆனா Attendance la அவ பெயர டீச்சர் கூப்பிடல. அப்போ ஒருத்தி கேட்டா என்ன உன் friend TC வாங்கிட்டு போய்ட்டா என்ன விஷயம்னு? அப்ப தான் புரிந்தது அவ இனி வர மாட்டாள்னு.

என் வாழ்க்கையின் முதல் ஏமாற்றம் அது. “சொல்லிட்டு போயிருக்கலாமே?!”.  “ஒரு வேல நான் அவ்ளோ முக்கியமில்லையோ அவளுக்கு?”. “நான் மட்டும் தான் அவளை bestie’ah நினைச்சேனோ?”. பல கேள்விகள் எனக்குள்ள ஓடிச்சி. கடைசி பக்கம் காணாம போன கதை மாதிரி இருந்துச்சு. ஒரு நாள் நானே போன் போட்டு கேட்டேன். “இல்ல அவசரமா அப்பாக்கு வேலை Transfer அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைனு இழுத்தா... குரல் தழுதழுத்தது. எனக்கு அப்போ அவ பிரிவு மட்டும் தான் என் வாழ்க்கைல ஒரு மாற்றமா இருந்துச்சு ஆனா அவளுக்கு வாழ்க்கையே மாறியிருக்கலாம்னு  புரிஞ்சிகிட்டேன். அக்னி மூலை to வாயு மூலை தூரம்னு  நினைச்சிட்டு இருந்த எனக்கு அவள சந்திக்கவே முடியாத தூரத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சு விதி.

என்னை விட்டு சென்ற என்னுயிர் தோழி எனக்கு விட்டு சென்ற வாழ்கை பாடம் "பற்றற்றிரு". 

PS: tamil konjam kolaar so spelling mistake irundhal manikkavum. Special thanks to our Mr.Joker enaku tamil la eludha help panadhuku!
« Last Edit: March 05, 2026, 10:28:27 PM by Mirage »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 96
  • Total likes: 690
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
"Ftc எனக்கு அளித்த அரும்பெரும் சொத்து என் உயிர் தோழி ஊஞ்சல்"
 
என் அண்ணாவின் பிரிவினை ஈடு செய்வதற்காக தமிழ் பேசுகின்ற நட்பை தேடி ftc  வந்தேன்.இப்போது நான் நினைத்தது நிறைவேறி விட்டது.எனக்கு  நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள்.உயிர்நண்பி ஊஞ்சல் பற்றி என் நினைவுகளை பகிர ஆசைப்படுகிறேன்.

நாங்கள் எங்கோ பிறந்து வளர்ந்தோம்.நாங்கள் நண்பர்கள் ஆவதற்கான எந்த சாத்தியமும்  இல்லை.நான் guest idல் இருக்கும்போது ஊஞ்சல் songs  vibe பண்றது பார்த்து இருக்கேன்.அவங்க பேச மாட்டாங்க.எனக்கும் songs vibe பிடிக்கும்.அவங்க கூட பேச பிடிக்கும்.but நான் guest id என்று அவங்க பேசினது இல்லை. மனதில் ஒரு எண்ணம் "இவங்க எல்லாம் பெரியவங்க போல பேச மாட்டாங்க"...

என் நண்பன் ஊஞ்சலை அறிமுகம் செய்தார்.நான் நண்பனுக்கு கூறிய வார்த்தை "அவங்க என்கிட்ட பேச மாட்டாங்க" என்று.அந்த நண்பன் தான் என்னிடம் பேசி ஊஞ்சல் கிட்ட பேச வைத்தார்.நாங்கள் நன்றாக பேசினோம் நாட்கள் மாதங்களாக....

பேசும்போது நமக்குள்ளே புரிந்துணர்வு,விட்டுக் கொடுப்பு, அன்பு,அக்கறை எல்லாம் நிறைந்து நாங்கள் உயிர் நண்பிகள் ஆகிவிட்டோம்.முகம் தெரியாத நட்பு இது.இருமனங்கள் பேசி இணைந்த நட்பு.இதுதான் உண்மையான உயிர் நட்பு என்று எனக்கு தோணுது.

நாங்கள் இன்ப ,துன்பங்கள் இரண்டையும் பகிர்ந்துப்போம்.cooking,gardening,places பற்றி நிறைய பேசுவோம்.இரண்டு பேருக்கும் roses பிடிக்கும்.ஊஞ்சல் அவங்க தோட்டத்து pictures போடுவாங்க.இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக இருப்போம்.

songs vibe பண்ணுவோம்.ஊஞ்சலுக்கு  forum இல் interest இல்லாம இருந்தது.நான் எப்போதும் forum, program பற்றிப் பேசி அவங்களுக்கு அதுல ஒரு interest வந்து இருக்குது.இசைத்தென்றல்& uc இல் எனக்காக song dedicate பண்ணி இருந்தாங்க.அதைக் கேட்கும் போது இப்படி ஒரு நண்பி எனக்கு  இருக்கிறாங்களா?என்று ஆச்சரியமும் ,பெருமையுமாக இருந்தது.friendship story போடுவாங்க அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.

ஊஞ்சலுக்குfm program கேட்கப் பிடிக்கும்.ஆனால் அவங்க night chat  வர முடியாது .நான் சொன்னேன் repeat time  கேளுங்கனு.இப்போது அவங்க கேட்டு இரசிப்பது  எனக்கு மகிழ்ச்சி.ஊஞ்சல forum இல் write  பண்ண வைக்கணும்னு எனக்கு ஒரு ஆசை.கவிதை வராதுன்னு சொன்னாங்க.அப்போதான் ftc இல் " நெஞ்சம் மறப்பதில்லை" என்று new program வந்தது.ஊஞ்சலைக் கேட்கும்போது முதலில் மறுத்தார்.உங்க பேச்சு மொழி நடையிலேயே எழுதலாம் எழுதுங்கன்னு சொன்னபோது எழுத start பண்ணாங்க.இப்போ சூப்பரா எழுதி அசத்துறாங்க.இதைப் பார்க்கும்போது என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

ou கவிதை ஊஞ்சலுக்கு first அனுப்புவேன்.அவங்க அதில் உள்ள குறை நிறைகளை சொல்லுவார்.அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஊஞ்சலுக்கு birthday program கேட்கப்பிடிக்கும் என்று நான் பண்ணுற birthday wishes அவங்க கேட்க அனுப்புவேன்.என் birthdayக்கு அவங்க fm இல் audio wish கொடுத்திருந்தாங்க. அவங்க fmஇல் voice போட்டது இல்லை.இப்படி எனக்காக பண்ணது எனக்கு சர்ப்ரைஸ் ஆகவும்,ஆனந்தக் கண்ணீரும்  வர வைத்தது.

இப்படி ஒரு உயிர் நண்பி கிடைத்ததற்கு நான் ஏதோ ஒரு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்.ftcஇல்  நிறைய friends சொல்லி இருக்காங்க "எப்படி fight  இல்லாமல் இரண்டு girls  இவ்வளவு காலம் இருக்குறீங்க?உங்களைப் பிரிக்கிறோம்" என்று.அவர்கள் சொல்வதைக் கேட்டு நாங்க சிரிப்போம்.எங்கள் நட்பு தொடரும்...

ftc இனை எல்லோரும் சொல்லுவாங்க chat roomஆ பார்க்கச் சொல்லி.ஆனால் நான் இதை ஒரு உயிருள்ள இடமாக family ஆகத்தான் பார்ப்பேன்.உயிர் நண்பி ஊஞ்சல் மற்றும் அன்பான நண்பர்கள், உறவுகளைக்  கொடுத்த ftcக்கு என் மனமார்ந்த நன்றிகள்...


Offline அனோத்

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 387
  • Total likes: 1382
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
20 . 02 . 2023 .  முதல் அறிமுகம் ......!

Software  Development Course,  online Learning,    முதல் நாள் .

என்கூட சேர்ந்து இன்னொரு பொண்ணு படிக்க போறாங்கன்னு சொன்னார்  institution admin.   
ஒரு பக்கம் புது பொண்ணு intro கிடைக்க போகுதுனு  சந்தோஷப்படுவனா  ?
இல்ல  ………after Degree  முடிச்சும் இன்னும் கத்துக்க இருக்கேனு பயப்பிடுறதா
ஒண்ணுமே புரியல என்னோட வெள்ளந்தி  மனசுக்கு......

இப்பிடிலாம் என் மனசு online class ல join ஆனதுல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு...
அவரு பேரு யாரோ மாறனாம், today class எடுக்க போறாராம்..  Java  basics  கத்துக்கொடுக்க போறார் சொன்னாரு .  எந்த ஜாடைல பார்த்தாலும் இவரு நமக்கு  Java காத்துக்கொடுக்குற மூஞ்சி மாரி தெரிலயே….
 
பார்க்க  Vasanth&CO owner  மாரி இருக்காரே… இவரா ? Java  டீச்சர் னு ஒரே confusion  மனசுக்குள்ள.

 சரி ! நாம தனியா தானே இருக்கோம்….  அவரு நம்மள stricta  deal  பண்ணாலும்
யாருக்கும் அது தெரிய போறது இல்ல .... அப்டினு கொஞ்சம் online class ல ok  ஆனேன்.   
அப்போ sudden a  எங்கிருந்து வந்தாளோ தெரியல .......

கீர்த்தனா இந்த name ல ஒரு பொண்ணு entry .......

(yess atheeey malar teacher song background la Malare ninne kaanathirunnal )

நான்வேற என்னோட webcam a  check  பண்ணிகிட்டே பார்க்க  மாதவன் மாறி இல்லனாலும், ஏதோ  சூர்யா மாறி இருக்கேனு மனசுக்குள்ள ஒரு திருப்தி..... 

Class ஆரம்பிக்குது ......... Java  basics  கத்துக்கிட்டோம்……….

 இதுக்கு நடுவுல 4 months ஓடிடுச்சு ... கீர்த்தனா செம்ம strong Coding ல அவ கிட்ட doubts , homework  help  கேட்டுப்பேன் கத்துப்பேன்....

 அப்புறம் நாளாக நாளாக ........அவளும் நானும் personal அ பேச ஆரம்பிச்சோம்…
அந்த நேரம் நானும் சில life சவால்களை சந்திச்ச நாட்கள்.......

நான் எப்போ call எடுத்தாலும் நம்பிக்கை கொடுக்குற மாதிரி அவ பேசுவா......

சாதாரண உடை , முகத்தில் இருக்கும் புன்னகை , தங்கம், மோதிரம்னு எதுக்கும் அவ கிட்ட இருக்காது , ஆனா அவளுடைய மனசும் அறிவும் அவளை பார்த்து என்ன பிரமிக்க வச்சுது .

தனி பொண்ணா தன்னோட Familya  பாத்துக்கிறா ..... வெயில் , தனிமை னு அவ வாழ்க்கைல என்ன கஷ்டம் இருந்தாலும் அவளோட coding  ஆர்வமும் கடுமையான உழைப்பும் அவ மேல எனக்கு தனி மரியாதைய உருவாக்கிச்சு...........

சில வருடங்களா தொடருற இந்த நட்புல ....... அவ மூலம் நிறைய coding கத்துக்கிட்டேன் ......
ரெண்டு பேரும் சேர்ந்து academic  projects  பண்ணோம்..

சில மாதம் அவள் கஷ்டங்களை புரிஞ்சுகிட்டு அவளுக்கே தெரியாம நான் உன்கிட்ட  Coding கத்துக்கணும்
நீ எனக்கு class  எடுப்பியான்னு கேட்டு அவ knowledge  ல நானும் கொஞ்சம் கத்துக்கிட்டேன்........

Today ஒரு Software Developer னு எனக்கு ஒரு அடையாளம் இருக்குன்னா
 என்னோட அம்மா அப்பா கஷ்டப்பட்டு படிக்க வச்ச தியாகங்களுக்கு equally  கீர்த்தனா
எனும் தோழியுடைய அன்பும் , நட்பும் , இருக்கு .

கீர்த்தி நீ இப்போ என்னோட requestல, இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியை   கேட்டுட்டு இருப்ப ........ உன்ன கஷ்டப்பட்டு program  கேளுன்னு வற்புறுத்தினத்துக்கு என்ன மன்னிச்சுடு .....

ஒரு நண்பியா , ஆசிரியையா,  ஒரு well wishera
நீ எனக்கு கொடுத்த நேரங்களும் நட்பும் விலை மதிப்பில்லாதது.....

பல வாட்டி உங்கிட்ட கத்திருக்கேன், சண்டை போட்டிருப்பேன், உன்னோட work pressure 
தாண்டியும் என்னோட தேவைக்காக உன்னோட நேரங்களை நான் எடுத்திருக்கேன்,
உன்னோட பொறுமையும் நட்பும் என் வாழ்க்கைல முக்கியமான பொக்கிஷம் ....
Life ல உன்னைப்போல தோழி எல்லா ஆண்கள் வாழ்க்கைலயும் கிடைக்கணும் ..........


இன்று இருவரும் சம துறையில் பயணிக்கிறோம் என்பது நம் நட்புக்கும் மரியாதைக்கும் கிடைத்த வெற்றி   

Anovira Software  solution
எனும் என்னுடைய கனவுக்கு அடிப்படை வேராக அன்பையும் அறிவையும் கொடுத்த என்னுயிர் தோழி நீ ……………

« Last Edit: March 05, 2026, 10:30:18 PM by அனோத் »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 329
  • Total likes: 1339
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
என்னுயிர் தோழி.... இந்த வார்த்தையைப் பார்த்ததும் என் நினைவுக்கு வருபவள் 3 ஆம் வகுப்பு முதல் இன்று வரை நட்பைத் தொடரும் என் இனிய தோழி லில்லி. எங்க கதை ரொம்ப பெருசு.. குட்டி குழந்தையாய் குறும்புல ஆரம்பிச்சு பருவமடைதல்ல பல திருட்டுத்தனம் சேர்ந்து செஞ்சு, ஒண்ணாவே படிச்சு ஒன்னாவே வேலையில் சேர்ந்து ஒன்னாவே இன்று வரை பயணிக்கும் நட்பு.

எங்க நட்பு ஆரம்பிச்சது இன்னைக்கும் நல்லவே நியாபகம் இருக்கு. Church க்கு போனா jungle book பாக்க முடியாதுன்னு அம்மா சர்ச் க்கு கிளம்புற வர கண்ண முடிட்டே படுத்துடுவேன்.. 2 ஆம் வகுப்பு வர தான் ஏமாத்த முடிஞ்சுது என் அம்மாவ.. 3 ஆம் வகுப்புல எப்படியோ இழுத்துட்டு போய் சேர்த்துடாங்க ஞாயிறு மறைக்கல்வி வகுப்புல.. 😭 முதல் நாள் நல்லா முகத்த தூக்கி வச்சுட்டு கடுக்கடு ன்னு 3ஆம் வகுப்பு பசங்க வரிசையில நின்னேன். எனக்கு முன்னாடி என் லில்லி. "நீயும் 3rd தானா" இதுல ஆரம்பிச்சது எங்க நட்பு... நிறைய பேர் சொல்லுவாங்க ஒரே மாதிரியானவங்க தான் நண்பர்கள் ஆவாங்க ன்னு. எங்க விஷயத்துள்ள "எதிர் எதிர் துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும்" கோட்பாடு தான். அவ ரொம்ப பொறுமை நா ரொம்ப அராக்கு. அவ எளிமையா அடுத்தவங்க கூட நல்லா பழகுவா... நா நல்லா பழக ரொம்ப நாள் ஆகும். அவ ரொம்ப இனிமையா பாடுவா... நா பாடுறதா நல்லா கேட்பேன்.. சிறந்த பக்திமான் அவ... அவளுக்குக்காக மட்டும் சர்ச் போக ஆரம்பிச்சவ நா... கொஞ்சம் பயந்த சுபாவம் அவ... பசங்கள வம்பு பண்ணி ஓட வைக்கிறது என் வேல.. இப்படி எந்த கோணத்துல பாத்தாலும் எதிர் எதிர் தான்... Possesiveness ல மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணு.

அப்படி தான் ஒரு நாள் கல்லூரி ல படிக்கும் போது வேற ஒரு பொண்ணுகிட்ட இவ க்ளோஸ் அ பேசிட்டான்னு நானும்.. நா வேற ஒரு சீனியர் கிட்ட ஜாலி யா பேசிட்டேன்னு அவளும் ஒருத்தர் ஒருத்தர் கிட்ட பேசாமலையே கொஞ்ச தூரம் bus ல வந்தாச்சு. இன்னொரு bus க்கு wait பண்ணும் போது ரெண்டு பேருமே மாறி மாறி சண்ட. அவ பொசுக்குன்னு அழுதுட்டா. அச்சோன்னு கண்ண துடைக்க போனா கைய தட்டி விட்டுடா... அவ kerchief எடுத்து lighta touch-up பண்ணிட்டு "eye linear அழிஞ்சுடுச்சா" ன்னு கேட்டதும் ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டோம். Possessiveness ல நாங்க queenu

அவ எப்பவும் first rank than. படிப்புல எல்லாத்தையும் உடனே உடனே முடிப்பா... நா அவ முடிச்சதும் project work அ அவ தலையிலேயே கட்டிடுவேன்... எழுதுறது கொஞ்சம் அலர்ஜி 😁.. என் சுமைதாங்கி அவ 🤗

"நண்பி டா" ன்னு எங்கு போனாலும் தப்பே பண்ணாலும் என்ன விட்டுக்கொடுக்காத கூட்டு களவாணி... அவளுக்கு ஒழுங்கா பொய் சொல்ல வராது... அவ தப்பு பண்ணிட்டா வீட்டுல மாட்டாம தப்பிக்க என்ன தான் ஐடியா 💡 கேப்பா😇...  நம்ம களவாணி தனம் அப்படி 😁

தேர்வுல எனக்கு முன்னாடி அவ... ஒரு தடவ exam நா சிக்கிரம் எழுதிட்டேன். அவ கொஞ்சம் மறந்துட்டா... சரி என் பேப்பர் பாத்து எழுதுன்னு காமிச்சேன்... அவ கை நடுங்குனது இன்னும் நியாபகம் இருக்கு 😂 செம்மையா பயந்துட்டா.... ரொம்ப நல்லவ... நாமன்னா ரெண்டு பெஞ்ச் தள்ளி இருந்தாலும் அசராம பாத்து எழுதுற கேடிஸ்

இப்படி பயந்தவ தான் இப்போ செம்ம தைரியமா பல பல விஷயங்களை செய்றா. சாதிச்சுட்டு இருக்கா... போர் குணம் கொண்ட போராளியா இருக்கா... என்னோட தோழி எப்பவுமே கெத்து தான் 💪💪💪
« Last Edit: March 05, 2026, 10:34:11 PM by Yazhini »

Offline Sadham

  • Newbie
  • *
  • Posts: 19
  • Total likes: 66
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


சண்டை உடன் நட்பு

First அறிமுகம் ஆன நாளை என்னால் மறக்க இயலாது மறக்கவும் முடியாது..பல நாட்கள் சண்டை உடன் தான் பேசி இருபோம்.சில நாள் பேசாமலே நாட்களை தள்ளினோம்.

அதன் பிறகு பேச ஆரம்பித்தேன் .தோழியும்  பேசினாள்.நட்பு புரிதல் இல்லாமல் பல நாட்கள் சண்டை போட்டிருக்கோம்.

ஆரம்பத்தில் என்னை பற்றி தோழிக்கும் தெரியாது ..தோழியியை பற்றி எனக்கும் தெரியாது ..அதன் பி‌றகு பேசிக் கொண்டோம்.

இன்பம் துன்பம் அனைத்தும் பகிர்ந்து கொண்டோம். புரிதல் இல்லாத காரணத்தினால் திரும்பியும் சண்டை போட்டுக் கொண்டோம் .

இப்படித் தான் நாட்கள் ஓடும் .
எனக்கு என் தோழி என்றால் அளவு கட‌ந்த பாசம். ஏதோ முன் ஜென்மம் இரத்த வகை சொந்தம் போலே எனக்குள்ள ஓர் உணர்வுயிருப்பினும் என் உயிர் தோழி என்னைக் கண்டுக்கல.

நாட்கள் கடக்க கடக்க நண்பன் என்று புரிதல் வந்துச்சு .நன்றாக பேசி கொள்வோம் .அப்படி பேசும் போதே ஒரு நாள் தோழியைக் காணவில்லை ..எப்போதும் என் தோழியை காணோம்னு தேடும் வழக்கம் என்னிடம் உள்ளது ..தினந்தோறும் பேசும் தோழியை கிட்ட தட்ட. 38மணி நேரம் ஆகியும் காணவில்லை..மனதில் ஏதோ ஒரு பதட்டம். என்ன ஆச்சோ ஏதோ என்று .மற்ற நண்பர்களிடம் கேட்கவும் என் மனதுக்கு  தோணவில்லை...

இருப்பினும் ஒரு நம்பிக்கை என் தோழியை எப்படியும்  சந்திப்பேன்  எ‌ன்று .அன்றைய நாள் இரவு முழு‌க்க மனதில் நம் தோழியை இழந்திட்டமோ என்று நினைத்து ஒரே அழுகை அழுது விட்டேன் .நா‌ன் அழுதபோது தோழியிடம்  சொன்ன சொல்லு நியாபகம் வருகின்றது.௳"உன்னிடம் நான் பேசாமல் இருந்தால் எனக்கு அழுகை அழுகையாய் வரும் என்று "
தோழியிடம்  சொன்ன சொல் நினைைவில் வந்த உடனே மறுநாள் என் தோழியை சந்தித்தேன்.

எனக்குள் மிக பெ‌ரிய சந்தோசம்..
நம் தோழி நன்றாக இருக்கிறாள் எ‌ன்று.. அ‌ந்த நி‌மிட‌ம் எண்ணற்ற மகிழ்ச்சி. எனக்குள்ளே ஆனந்தமே...ஏன் என்னாச்சு என்று கேட்டேன்.என் தோழி சில காரணங்கள் சொன்னாள்.
அதன் பி‌றகு பேசி மகிழ்ந்தோம்.

நல்ல விடயங்களை பகிர்ந்து நாட்களை மறக்க இயலாது.தோழிக்கு ஒரு மன கஷ்டம் னா ...அதை கேட்ட உடனே மனம் வருந்தும் . அதை இன்றளவும் மறக்க இயலாது

வானம் பெருசு தான் பூமி உம் பெருசு தான்
அதை விட நட்பு மிக பெரியது

என் மனசு கஷ்டம் னா..எனக்கு ஆறுதல் sollubavalசொல்லுவாள்..
என் தாய்க்குப்  பின் ... தோழியே...
எந்நாளும் என் தோழியை நான் வி‌ட்டு பிரிய மாட்டேன் .என்னை போலே அவளும் அப்படி தான் பிரிய மாட்டாள் ...

நானு‌ம் என் தோழியும் பிரியாத வரம் வேண்டும் .

எ‌ல்லா‌ம் வல்ல இறைவனிடம்
நான் கேட்கும் மிக பெ‌ரிய dua (வேண்டுதல்) இது தான் "என் உயிர் தோழியை
என் உயிர் உள்ள வ‌ரை  நா‌ன் மறக்க மாட்டேன்"

நட்பில் முக்கியமானது நேர்மை ம‌ற்று‌ம் நம்பிக்கை...அதை புரிந்து நடந்தால் காலமெல்லாம் நட்புடன் பயணிக்கலாம்...

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் .
என்றென்றும் நட்பு tதொடரட்டும்.

பிரியமான
என்உயிர் தோழியியே
என்றும் உன் நினைவுடன்

பிரியமுடன்
Rahmathulla .....

Offline Luminous

1 முதல் 10ஆம் வகுப்பு வரை நான் படித்த காலத்துக்கு சாட்சி என் தோழி உஷா. தினமும் காலை எங்கள் வீட்டுக்கு வந்து என்னை டியூஷனுக்கு அழைத்து போவது அவள்தான். அவள் வந்த பிறகுதான் நான் எழுந்திருப்பேன்.
அதற்குள் என் அம்மா ஆரம்பித்து விடுவார்கள்
“அந்த குழந்தை காலையிலேயே எழுந்து ரெடி ஆகிட்டு டியூஷன் போக வருது… நீ இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கே!” என்று.
நான் எழுந்து ரெடி ஆகும் வரை அம்மா “அர்ச்சனையை ஆரம்பித்து விடுவாங்க
உடனே நான், அம்மா நம்ம வீட்டுக்கு வந்தவளுக்கு எதாவது குடிக்க கொடுக்கணுமே என்று சொல்வேன். அதுவே எங்களுக்கு தினமும் காபி கிடைக்க காரணம்.
அந்த சிறிய காலையிலான சம்பவங்களே இன்றும் மனதில் இனிமையாக நிற்கின்றன.

4ஆம் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் இன்னும் மறக்க முடியாதது. நான் பள்ளியில் முதல் மாணவி. சுதந்திர தினத்தன்று கலெக்டர் வந்து பரிசு வழங்கினார். ஆனால் பட்டியலில் தவறுதலாக என் பெயருக்கு பதிலாக உஷாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
பரிசு வாங்க அவள் மேடைக்கு சென்றதை பார்த்தவுடன் எனக்கு மயக்கம் வந்து விழுந்துவிட்டேன்.
அடுத்த நாள் ஆசிரியர் உண்மை அறிந்து, பரிசு பெட்டி எனக்கு கொடுத்தார். அதில் இருந்த பொருட்களை 2ஆம், 3ஆம் இடம் பெற்றவர்களுக்கும் பகிர சொல்லியபோது எனக்கு கோபம் வந்தது.

நான் அதை வீட்டில் வைத்துவிட்டேன். சில நாட்கள் ஆசிரியர் என்னை கடிந்து கொண்டாலும், அதனால் எங்கள் நட்பு குறையவில்லை.
10ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம்.

பின்னர் பள்ளி, கல்லூரி, வீடு, எல்லாம் மாறிவிட்டது. ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் அவளை திடீரென சந்தித்தேன். பல வருடங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சி. ஆனால் ஒரு சின்ன சம்பவம் அவள் நான் யார்? என்று கேட்டபோது, எனக்கு பெயர் நினைவில் வராமல் போனது. அதனால் அவள் வருத்தப்பட்டு பேசாமல் சென்றுவிட்டாள். அந்த நாள் முதல் அவளை நான் மிகவும் மிஸ் செய்தேன்.

சமீபத்தில், கடந்த மாதம் மீண்டும் சந்தித்தோம்.  நானாக முன் வந்து உன் பெயர் உஷா தானே? என்று கேட்டேன். அவள் தலையில் மெதுவாக அடித்துக் கொண்டு சிரித்தாள்.
 முகத்தில் நிறைந்த சந்தோஷம். நாங்கள் நீண்ட நேரம் பேசினோம், ஒன்றாக சாப்பிட்டோம். மீண்டும் பழைய பாசம் திரும்பிவிட்டது.
இப்போது அவள் மீண்டும் என் வாழ்க்கையில் நெருக்கமான தோழி. சில நட்புகள் தூரமானாலும், காலம் கடந்தாலும், மனதில் பதிந்த இடம் மாறாது என்பதை உஷா எனக்கு உணர்த்தினாள்.

எனக்கு சத்யா என்ற இன்னொரு நெருங்கிய தோழி இருக்கிறார். நாங்கள் இருவரும் கல்லூரியில் படித்த காலத்தில், அவளுடைய அப்பா புற்றுநோயால் இறந்துவிட்டார்.
சத்யா எங்கள் துறையின் டாப்பர்.
மிகவும் புத்திசாலி. நான் அவளுடன் ஒப்பிடும்போது சாதாரணமாக இருப்பவள். உண்மையில், எங்களுடைய குணாதிசயங்களும் முற்றிலும் வேறுபட்டவை. அவள் மிகவும் அமைதியானவள்.
நான் பேசிக்கொண்டே இருப்பவள். அவள் எப்போதும் ஒழுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். வகுப்பில் நாங்கள் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. என் நண்பர்கள் குழு சற்று சுறுசுறுப்பானவர்கள். ஆனால் அவள் எல்லோரும் நல்ல பெண் என்று சொல்லும் வகையான அமைதியான குணம் கொண்டவள்.

அந்த நேரத்தில் அவளுடைய அப்பா திடீரென இறந்ததால், அவள் மிகவும் மனம் உடைந்திருந்தாள். அதே சமயத்தில் செமஸ்டர் தேர்வுகளும் இருந்தன. தேர்வு எழுத அவள் வந்திருந்தாலும், மிகவும் கவலையுடன் இருந்தாள். ஒருநாள் பேருந்தில் நான் அவளுடன் அருகில் அமர்ந்திருந்தேன்.

அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்தாள். அந்த நாளில் நான் எடுத்துவந்த மதிய உணவை அவளுடன் பகிர்ந்து கொடுத்தேன். அதன்பிறகு அந்த செமஸ்டர் தேர்வு முடியும் வரை, தினமும் காலை உணவும் மதிய உணவும் சேர்த்து அவளுக்காகவும் நான் எடுத்துச் செல்வேன். அந்த செமஸ்டரில் கூட அவள்தான் டாப்பராக வந்தாள்.
இதையெல்லாம் நான் இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ஒரு தோழியின் திருமண வரவேற்பில் நாங்கள் அனைவரும் சந்தித்தோம். அப்போது சத்யா என்னிடம் நேராகச் சொல்லவில்லை.
ஆனால் அந்த நாட்களில் நான் அவளுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்ததை மற்ற நண்பர்களிடம் மிகவும் பாராட்டி பேசினாள்.

இப்போது அவள் ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள்.
அந்த கடினமான காலத்தில் நான் செய்த அந்த சிறிய உதவியும் அவளுக்குப் பெரிய ஆதரவாக இருந்தது என்று கூறியதாக நண்பர்கள் சொன்னார்கள்.

நான் செய்தது மிகவும் சிறிய உதவிதான் என்று நினைத்தேன். ஆனால் அது அவள் மனதில் இவ்வளவு பெரிய நினைவாக இருந்தது என்று கேள்விப்பட்டபோது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியும் கண்களில் நீரும் வந்தது.

 நமக்குச் சிறியதாகத் தோன்றும் உதவியும், சரியான நேரத்தில் கிடைத்தால் அதை பெறும் ஒருவருக்கு மிகப்பெரியதாக உணரப்படலாம் என்பதை அப்போது உணர்ந்தேன்.

இப்போது நானும் சத்யாவும் நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். இந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பொறுமையாக கேட்டதற்கு நண்பர்களுக்கு நன்றி.
💜

LUMINOUS 😇💙💚💛🧡💜💐
« Last Edit: March 05, 2026, 10:50:21 PM by Luminous »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1274
  • Total likes: 4382
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உயிர்த்தோழி னு சொன்னதும் என் மனசுக்கு முதல்ல வர பேரு அவங்க தான்

அவங்களாவே தான் எனக்கு தன்னை அறிமுகபடுத்திக்கிட்டாங்க , எனக்கு செல்ல பேர் வெச்சிலா  கூப்பிட ஆரம்பிச்சாங்க, நல்ல பழகினாங்க , என் முதல் சிரிப்புக்கு காரணமே அவங்க தான் , திட்டுவேன் , சில நேரம் செல்ல செல்ல சண்டைகள் எல்லாம் போட்ருக்கோம் , எல்லாத்தையும் பொறுமையா handle பண்ணுவாங்க

நெறய ஊர் சுத்தி காமிச்சிருக்கா , எனக்கு புடிக்கும்னு சொன்ன போதும் உடனே வாங்கி தந்திடுவா
எனக்கு புது புது விஷயத்த கத்து கொடுத்தது அவ தான் , இதோ பாருங்க இப்படி எல்லாம் நான் எழுத முதல் காரணமும் அவ தான் ,

நிறைய அரட்டை அடிப்போம், அவளை விட்டு நான் பாத்திட்டு வந்த சினிமா கதையை , அவள் கிட்ட சொல்வேன் , மற்ற நண்பர்கள் கிட்ட பேசினது, நடந்த சண்டை கொண்டாட்டம் எல்லாம் பகிர்ந்துப்பேன்
சரி எது தவறு எதுன்னு புரிய வைப்பா ,

என் firends சில பேரை அறிமுகப்படுத்திருக்கேன் ,அதுல girl friends ம் இருக்காங்க ,  வாழ்க்கைல நண்பர்கள் முக்கியம்னு சொல்வா

என் உயிர்த்தோழி, அவள்தான் எனக்கு உயிரையும் கொடுத்தவள் அவளே என் அம்மா


*Joker*
**

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 19
  • Total likes: 62
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
பள்ளியில் prayar bell அடிச்சதும் வரிசையாக prayer hall போனோம். பக்கத்து வரிசையில் இருந்த சிறுமி காலை தெரியாமல் மிதித்து விட்டேன். அவள் என்னோடு சண்டைக்கு வந்தாள். தெரியாமல் பட்டது ஏன் கத்துற என்று நானும் சண்டைக்கு போனேன். அன்றில் இருந்து எங்கே அவளை பார்த்தாலும் மூஞ்சை திருப்பிட்டு போக ஆரம்பித்தேன். அவளும் அப்படி தான் என்னை எங்கே பார்த்தாலும் ஏதோ சொல்லி முனங்கிட்டே போவாள். அடுத்த வருஷம் வகுப்புக்கு முதல் நாள் போகும் போதுதான் பார்த்தேன் அவள் என் வகுப்பில் இருந்தாள். அய்யோ இவளா என்று தான் அப்போது நினைத்தேன். ஆசிரியர் வரிசையாக அமர வைத்தார் பக்கத்தில் பார்த்தால் அவள். இவள் பக்கத்திலா என்று மனதில் முனுமுனுத்தேன். போக போக ஏதோ பேசனுமே என்று அவளுடன் பேச தொடங்கினேன்...

  அப்போ எனக்கு தெரியாது என் வாழ்க்கையில் என் கூடவே வர போற நட்பு அவள் தான் என்று. ஒருநாள் ஆசிரியர் எழுதி போட்டதை note ல் எழுதும் போது என் பேனா எழுதாமல் நின்று விட நான் என்ன பண்ண என்று முழித்து கொண்டிருந்தேன். அப்போது அவள் ஒரு பேனாவை என் கையில் திணித்தாள். நன்றியோடு அவளை பார்த்து விட்டு எழுத தொடங்கினேன். அன்றில் இருந்து அவளோடு சிரித்து பேச தொடங்கினேன். அன்று தொடங்கியது எங்கள் நட்பு...

  எங்கு சென்றாலும் கைகோர்த்து ஒன்றாகவே சுற்றினோம். அடுத்த அடுத்த வருடங்களில் வேற வேற வகுப்பில் பிரிந்து இருந்தாலும் எங்கள் அன்பில் பிரிவு என்பதே வந்தது இல்லை.அவளுடன் இருக்க ஆசைப்பட்டு பள்ளி தங்கும் விடுதியில் சேர்ந்தேன்.....

     இறுதியாக 11 ஆம் வகுப்பில் மீண்டும் ஒரே வகுப்பில் இணைந்தோம். எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவள் பாடங்களை படித்து கொண்டிருக்கும் போது அவளை தொந்தரவு பண்ணாமல் நான் வேறு யாரோடும் கதை பேசினால் கூட பொறாமையோடு அவங்க கூட என்ன கொஞ்சல் என்று சண்டைக்கு வருவாள். எப்படி போனது என்றே தெரியாமல் இரண்டு வருடங்கள் ஓடி போனது. பிரிவு ஆம் முதல் பிரிவு எனக்கு நெஞ்சமெல்லாம் வலி இவள் இல்லாமல் இனி எப்படி இருப்பேன் என்று பயந்தேன்....

      புது கல்லூரியில் யாரோடும் பழகவே முடியவில்லை. அவள் இடத்தில் வேறு யாரையும் நினைக்க கூட முடியவில்லை. அறியா வயதில் எதை பற்றியும் அறியாமல் பூத்த நட்பு போல் தன்னலமற்ற நட்பு இங்கே கிடைக்காது என்பது மெதுவாக தான் உணர்ந்தேன். எப்படியோ கல்லூரி வாழ்க்கை முடிந்தது. எனக்கு வீட்டில் திருமண முடிவு எடுத்தார்கள். என் திருமண மேடையில் அவளை மீண்டும் சந்தித்தேன். ஓடி வந்து கட்டி அணைத்து முத்தமிட்டாள். நான்கு கண்களும் கலங்கியது. அழாதே போட்டோவில் பார்க்கும் போது நன்றாக இருக்காது என்று ஆறுதல் சொன்னாள்...

    அலைபேசியில் தொடர்பில் இருந்தாலும் நேரில் 3 வருடங்கள் கழித்து சந்தித்தோம் எனக்காக குட்டி குட்டியாய் நிறைய பரிசுகளுடன் தனியே கிளம்பி வந்தாள். சில வருடங்களில் அவள் திருமணத்தில் சந்தித்தோம். எனக்கு அவள் எவ்ளோ முக்கியம் என்று என் கணவர்க்கு தெரியும். அவளுக்கு நான் எவ்ளோ முக்கியம் என்று அவள் கணவர்க்கு தெரியும். அவர்களின் புரிதலில் தான் எங்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது...

    அறியா வயதில் தொடங்கிய எங்கள் நட்பு ஜாதி மதம் பார்க்காமல் இன்று வரை அதே அன்போடு தொடர்கிறது.தூரத்தில் இருந்தாலும் என் அருகில் இருப்பது போல் நினைவுகளில் நீங்காமல் இருப்பது அவள் ஒருத்தியே. அவளையன்றி வேறு யாரை என் உயிர் தோழி என்பேன்...❤️

Online Sethu

  • Newbie
  • *
  • Posts: 26
  • Total likes: 92
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எங்கள்ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அதில் கண்ணன் செல்வம் அபிநயா பரமேஸ்வரி என எனக்கு நாலு நண்பர்கள் இருந்தாங்க எங்கள் ஊரில் இரண்டு பள்ளிக்கூடம் இருந்தது ஒன்று ஆரம்பப் பள்ளிக்கூடம் இரண்டாவது நடுநிலை பள்ளிக்கூடம் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் இருக்கும் நடுநிலை பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் நான் பயின்றது ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் எனது நண்பர்கள் பயின்றது நடுநிலை பள்ளிக்கூடத்தில் நான் எனது நண்பர்களை சந்தித்தது வகுப்பு 6 அந்த நாளிலிருந்து எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வோம் பள்ளிக்கு செல்வதாக இருக்கட்டும் விளையாடுவதாக இருக்கட்டும் , எல்லாம் ஒன்றாகத்தான் செய்வோம் பள்ளி முடிந்தவுடன் சாயங்கால நேரம் விளையாட ஆரம்பிப்போம் அப்போது ஒளிந்து பிடித்து விளையாடுவது பச்சை குதிரை தாண்டுவது குண்டு விளையாடுவது போன்ற எண்ணற்ற விளையாட்டுகளை விளையாண்டு  மகிழ்வோம் அப்பொழுது எனது தோழிகள் நான் வெற்றி பெறுவதற்காக எனக்கு கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் நானும் எனது தோழிகள் ஆரவாரம் செய்வதை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பேன் விளையாட்டுகளிலும் வெற்றியை பெறுவேன் பிறகு விளையாட்டு முடிந்தவுடன் எங்கள் வீட்டு மாடியில் சென்று நானும் எனது நண்பர்களும் ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடங்களை செய்ய ஆரம்பிப்போம் அப்பொழுது எனக்குத் தெரியாத புரியாத பாடங்களை எனது தோழிகள் எனக்கு சொல்லித் தருவார்கள் பிறகு நிலா சோறு சாப்பிட ஆரம்பிப்போம் எனது தோழிகள் வீட்டில் இருக்கும் உணவுகளை எடுத்து வருவார்கள் நான் எனது வீட்டில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டு போவேன் நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து உணவுகளை ஷேர் செய்து சாப்பிடுவோம் அந்த நினைவு இன்னும் என் மனதில் நிலைத்து  நின்றிருக்கிறது அந்தக் அந்தக் காலம் இனி வராதா என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது இவ்வாறு மூன்று ஆண்டுகள் போனது ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்கு தான் செல்ல வேண்டும் அந்த ஊர் எங்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் காட்டு வழிப் பாதையில் நடந்து சென்று தான் பள்ளிக்கூடம் போக வேண்டும் அப்போது எங்களுக்கு துணையாக எனது தோழிகளும் தோழிகளுக்கு துணையாக நாங்களும் செல்வோம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஓடக்கரையில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்குகளை வெட்டி நானும் எனது தோழர்களும் தோழியும் உண்டு மகிழ்வோம் எனது தோழிகள் இருவரும் நன்றாக படியக்கூடியவர்கள் நான் கொஞ்சம் படிக்க மாட்டேன் நான்  பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணி இருக்கேன்னா அதற்கு என் தோழிகள் தான் காரணம் எனக்கு புரியாத பாடங்களை எல்லாம் புரிய வைத்து பாடங்களில் இருக்கும் மிக முக்கியமான கொஸ்டின் எல்லாம் சொல்லி படிக்க வைத்து என்னை பாஸ் செய்ய வைத்தது என் தோழிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை பிறகு 11-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு எனக்குள் வந்த சேட்டை இந்த மாதிரி சேட்டை எல்லாம் பண்ண கூடாது என்று எனக்கு புரிய வைத்து என்னையும் அவர்களுடன் கூட்டிச் சென்றது எனது தோழிகள்தான் இவர்கள் எனது உயிர் தோழிகள் மட்டும் அல்ல என்னால் மறக்க முடியாத தோழிகளும் கூட ❤️❤️❤️❤️