Author Topic: அனிச்சம் மலரவள் 🥀  (Read 49 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 326
  • Total likes: 1329
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
அனிச்சம் மலரவள் 🥀
« on: March 01, 2026, 10:58:55 PM »
                                       

அனிச்சம் மலர் அவள்....
ஆம்... அனிச்சம் மலர் தான் அவள்
பெரும் புயலுக்கும் அசையாது நிற்பவள்..
சிறு முகம் சுழிப்பிற்கு வாடிப்போகிறாள்
போராட்டங்கள் பல கடந்தவள்-
ஒரு சிறு கோபப்பார்வையில் திணறுகிறாள்
கரடுமுரடு பாதைகள் பல கடந்தவள் ஆயினும்
அனிச்சம் மலராகிறாள்...
அன்பினால் மீண்டும் மீண்டும்
சிதறடிக்கப்பட்டு கோர்க்கப்படுகிறாள்...

ஒரு சில பிரிவுகள்
தவிர்க்க முடியாதது மட்டுமல்ல
 தேவையானதும் 🙃
« Last Edit: March 02, 2026, 03:09:14 AM by Yazhini »

Offline Shreya

Re: அனிச்சம் மலரவள் 🥀
« Reply #1 on: March 02, 2026, 05:25:06 AM »
தேவையான பிரிவுகள் கசப்பதில்லை...
அவை தனிமையில் உன்னோடு
நான் பேசும் மௌன மொழிகள்!

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1273
  • Total likes: 4367
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அனிச்சம் மலரவள் 🥀
« Reply #2 on: Today at 08:45:14 PM »
நினைவுகளில் கலந்துவிட்ட பின்
பிரிவென்பது
மெய்யான பொய்


யாழினி Sis

அனிச்சம் மலர் நல்ல உவமை
அருமையான கவிதை

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "