🎧🎶இசையின் மடியில்🎶🎧
🥁🎙️🎧🎻🥁🎙️🎧🎻
படம் :வாரிசு😍
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை : தமன் எஸ்
பாடல் ஆசிரியர் : விவேக்
................✨✨✨..................
பெண் : அ.. ஆஆ.. அ.. ஆஆ..
பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா…
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா…
பெண் : என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே…
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே…
குழு (பெண்கள்) : இந்த நொடி நேரம்…
என்னுயிரில் ஈரம்…
கண்ணெதிரில் காலம்…
நின்று விடுமா…
குழு (பெண்கள்) : என் இதழின் ஓரம்…
புன்னகையின் கோலம்…
இந்த வரம் யாவும்…
தங்கி விடுமா…
பெண் : அ… ஆஆ… அ… ஆஆ..
குழு (பெண்கள்) : பால் முகம் கானவே நான் தவித்தேன்…
இன்று நீ வர கேட்டதேன் ஆரோ…
கால் தடம் வீழவே நான் துடித்தேன்…
உனை தாய் மடி ஏந்துதே தாலோ…
..........✨✨✨✨✨✨...........