Author Topic: யாரும் சூடா மலர்!!  (Read 496 times)

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 277
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
யாரும் சூடா மலர்!!
« on: February 05, 2026, 07:40:01 AM »
விதியின் சதியோ? இல்லை வாழ்வின் சாபமோ?
யாரும் தீண்டாத காட்டில் பூத்தத் தனிமை மலரோ நான்?

​அன்பு வறண்ட பாலைவனத் திசைகளில்,
என் கால்கள் ஏன் இன்னும் தழும்பேற நடக்க வேண்டும்?
எவர் மனதிலும் ஒளியேற்றாத இந்த உயிர்,
இனி எதற்காக இங்கே மெல்ல அணைய வேண்டும்?

​யார் பொருட்டும் இல்லாத ஒரு தேவையற்றப் பக்கம் நான்,
வாசிப்பார் யாருமின்றிச் சிதைந்துப் போவதே மேல்!!