Author Topic: புரியாத புதிர் !  (Read 2 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1248
  • Total likes: 4267
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
புரியாத புதிர் !
« on: Today at 05:23:40 PM »
என் கையில் பட்டு சிதறிய 
மழைத்துளி
இப்போது மறைந்து விட்டது
வானமும், மேகமும்,
இந்த நீண்ட கடலும் அல்லவா
அதன் உண்மையான சொந்தக்காரர்கள்
நான் அல்லவே
போகட்டும்

கணநேரம் மட்டுமே என்றறிந்திருந்தும்,
மீண்டும் அந்த மழைத்துளிக்காக
கைகள்
வெற்றிடத்தை நோக்கி
நீளுவதுதான்
இன்னும் புரியாதது

அப்படித்தான்
சிறுது நேரமே
என்னை கண்ட
அவளின் ஒர பார்வை
மீண்டும் காண
காத்திருக்கிறது
என் மனம்
அவள் நேற்று வந்து நின்ற
வெற்றிடத்தை நோக்கி  :)


****Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "