“போராட்டமும் பொழுதுபோக்கும் ஒரே மேகத்தில்” காலை இருள் இன்னும் கரைந்திருக்க,
மழை கோபமாக தரையைத் தாக்க,
குடையை மார்போடு அழுத்திக் கொண்டு
வழுக்கி விழாமல்
சின்னச் சின்ன படிகளில் முன்னேறுகிறான்
ஒரு சாதாரண மனிதன்.
அவன் சிந்தனையின் உள்ளே
ஒரே ஒரு சத்தம்😌
இன்று வேலைக்கு தாமதமா ஆக கூடாது…
இல்லேனா சம்பளத்தில் குறைவு😔
குழந்தைகளின் மதிய உணவுக்கே பிரச்னை
மழை அவனை நனைத்தாலும்,
அவனின் மனதை நனைக்கவில்லை.
ஊதியக் காசில்
உணவு, பள்ளி கட்டணம், மருந்து😐
ஒவ்வொன்றும் கணக்காக நடக்கிறது.
அதனால் தான்
ஒவ்வொரு துளியும்
அவனுக்கு ஒரு பொறுப்பு.
அதே நேரத்தில்🤔
அதே மழையை
ஒரு பெரிய மாளிகையின் பின்தோட்டத்தில்
கைகள் பரப்பி
உயிரோடு ஊற்றிப் பெருகும் ஓசையாகக் கேட்கிறான்
மற்றொருவன்😎ஒரு பணக்காரன்.
விலையுயர்ந்த செடிகளின்🌹🌱 இலைகளில்
மழை தட்டும் சத்தத்தை ரசிக்கிறான்😇.
அவன் நடக்கும் பாதையில்
பெரிய கல்லணைகள், அழகான பூங்கா,
செடிகளின் வாசம்🌲
அனைத்தும் ஒரு ஓவியம் போல.
அவனுக்குப் மழை
ஒரு விளையாட்டு,
ஒரு சுகம்,
ஒரு நிம்மதி.
ஆனால் அந்த சாதாரண மனிதனுக்கோ🤔
அதே மழை
ஒரு போராட்டம்,
ஒரு கடமை,
ஒரு நாளைய நம்பிக்கையைத் தாங்கும் சுமை.
ஒரே இயற்கை🌧
ஆனால் வாழ்க்கை
இரு வேறு பாதைகளில் ஓடுகிறது.
ஒருவரின் மழை
பொறுப்புகளின் நிறை☔
மற்றொருவரின் மழை
பொழுதுபோக்கின் நிழை☔
இதுதான்
மனித வாழ்வின்
எளிய ஆனால் ஆழமான உண்மை.🔥💞
☔ 💫 𝓁𝓊𝓂𝒾𝓃𝑜𝓊𝓈 பார்வையில் குடையும் மழையும் 💫