Author Topic: வாரம் இருமுறை இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  (Read 2 times)

Offline MysteRy


கிடைக்கும் பயன்கள் ஏராளமாம்..

கரிசலாங்கண்ணி மூலிகை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகையாகும். இது ஞான மூலிகை என போற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது.

கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு. அந்த வகையில் இது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தற்போது கரிசலாங்கண்ணி கீரை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவதற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.