Author Topic: இயற்கை மருத்துவம்  (Read 4058 times)

Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #15 on: March 10, 2026, 06:03:22 PM »
*சுண்டைக்காயின்  ஆரோக்கிய பயன்கள்:*

இரத்த சுத்திகரிப்பு: இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி, கொழுப்பு படிவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

வயிற்றுப் புழுக்கள் நீக்கம்: குடலில் உள்ள புழுக்களை அழித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: ஆரஞ்சு பழத்தை விட அதிக வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூட்டு வலி மற்றும் தசை பலவீனம்: கால் வலி, மூட்டு வலி மற்றும் உடல் பலவீனத்தைப் போக்க உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை: இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வயிற்றுப் புண் (Ulcer): வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.


Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #16 on: March 10, 2026, 06:06:37 PM »
♦️🚨 *20 வகையான பாட்டி வைத்தியம்*

♦️ நெஞ்சு சளி
♦️ தலைவலி
♦️ தொண்டை கரகரப்பு
♦️ தொடர் விக்கல்
♦️ வாய் நாற்றம்
♦️ உதட்டு வெடிப்பு
♦️ அஜீரணம்
♦️ குடல்புண்
♦️ வாயு தொல்லை
♦️ வயிற்று வலி
♦️ மலச்சிக்கல்
♦️ சீதபேதி
♦️ பித்த வெடிப்பு
♦️ மூச்சுப்பிடிப்பு
♦️ சரும நோய்
♦️ தேமல்
♦️ மூலம்
♦️ தீப்புண்
♦️ மூக்கடைப்பு
♦️ வரட்டு இருமல்

🚨 *1. நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

🚨 *2. தலைவலி*

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,
2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

🚨 *3. தொண்டை கரகரப்பு*

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

🚨 *4. தொடர் விக்கல்*

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

🚨 *5. வாய் நாற்றம்*

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

🚨 *6. உதட்டு வெடிப்பு*

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

🚨 *7. அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

🚨 *8. குடல்புண்*

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

🚨 *9. வாயு தொல்லை*

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

🚨 *10. வயிற்று வலி*

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

🚨 *11. மலச்சிக்கல்*

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

🚨 *12. சீதபேதி*

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

🚨 *13. பித்த வெடிப்பு*

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

🚨 *14. மூச்சுப்பிடிப்பு*

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🚨 *15. சரும நோய்*

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

🚨 *16. தேமல்*

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

🚨 *17. மூலம்*

கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

🚨 *18. தீப்புண்*

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

🚨 *19. மூக்கடைப்பு*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

🚨 *20. வரட்டு இருமல்*

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #17 on: March 28, 2026, 02:54:25 PM »
*பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”* என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.


Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #18 on: March 28, 2026, 03:01:47 PM »
*காலில் நரம்பு சுரண்டல் (Varicose veins / Nerve strain) என்பது இன்று பலருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக நீண்ட நேரம் நிற்கும் வேலை செய்தால் இது அதிகமாகும்.*

நீண்ட நேரம் நின்று வேலை செய்வது

ரத்த ஓட்டம் சரியாக இல்லாமை

உடல் எடை அதிகம்

உடற்பயிற்சி இல்லாமை

வயது காரணமாக நரம்பு பலவீனம்

 *அறிகுறிகள்*

காலில் நரம்பு வீக்கம் / புடைசுருள் போல் தெரிதல்

வலி, எரிச்சல்

கனத்த உணர்வு

இரவு நேரத்தில் பிடிப்பு
 *இயற்கை வைத்திய முறைகள்*

 *எள்ளெண்ணெய் + பூண்டு மசாஜ்*

எள்ளெண்ணெய் சூடு செய்து அதில் பூண்டு சேர்த்து கொதிக்கவைத்து

குளிர்ந்ததும் தினமும் காலில் மெதுவாக தடவவும்
*ரத்த ஓட்டம் மேம்படும், வலி குறையும்*
 *வெந்தய நீர்*

இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து

காலையில் குடிக்கவும்
 *நரம்பு பலம் அதிகரிக்கும்*
*முருங்கை இலை சாறு*

முருங்கை இலை அரைத்து சாறு எடுத்து குடிக்கலாம்
*ரத்த ஓட்டத்தை சீராக்கும்*
 *சூடு-குளிர் தண்ணீர் முறை*

நிமிடம் சூடான தண்ணீர்
 நிமிடம் குளிர்ந்த தண்ணீர்
மாறி மாறி காலில் ஊற்றவும்
 *நரம்பு சுருக்கம் குறையும்*

*கால்களை உயரத்தில் வைத்தல்*

படுக்கும் போது கால்களை தலையணை வைத்து உயர்த்தி வைக்கவும்
 *ரத்தம் கீழே தேங்காமல் இருக்கும்*

 *சிறிய உடற்பயிற்சி*

தினமும் 15–20 நிமிடம் நடை

கால்களை மேலே கீழே அசைக்கும் exercise
 *நரம்பு தளர்ச்சி குறையும்*

 *உணவில் கவனம்*
 :o
*அதிக உப்பு தவிர்க்கவும்*

பச்சை கீரைகள் (பொன்னாங்கண்ணி, முருங்கை)

வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்த்து சாப்பிடவும்

*கவனிக்க வேண்டியது*

நரம்பு மிக அதிகமாக வீங்கி வலி இருந்தால்

தோல் கருமை / காயம் வந்தால்

Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #19 on: July 06, 2026, 05:12:08 PM »
*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்...! 👑*

எள்ளு மிட்டாய், எள்ளுருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம்.🪷 பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்டை சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுன்னு தெரியல. ஆனால், இதை சாப்பிட்டதால் வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.  ✍️

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இதை விட்டு வைக்க மாட்டீங்க.. முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல் இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..

எள் சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

எள்- உயிர் காக்கும் நண்பன்:

இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 / கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான்.

Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இருப்பு சத்து, வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.


Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #20 on: July 09, 2026, 03:51:23 PM »
🌿 நோயற்ற வாழ்வின் ரகசியம்..

"நல்ல தண்ணீர் என்றால் பாட்டில் தண்ணீர்தானா?" 🤔

ஒரு காலத்தில் ஆறு, ஊற்று, கிணறு, தெருக்குழாய் என எங்கிருந்தாலும் கையால் அள்ளிக் குடித்த தண்ணீரே நம் உடலுக்கு உயிர் கொடுத்தது. இன்று "குடிநீர்" என்றாலே பாட்டில், பாக்கெட், கேன் என்ற எண்ணம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஆனால், சுத்திகரிப்பு என்ற பெயரில் தண்ணீரிலுள்ள பல இயற்கைத் தாதுக்கள் நீக்கப்படுகின்றன என்று சித்த மருத்துவம் எச்சரிக்கிறது. உடலுக்குத் தேவையான மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் குறைந்தால், எலும்பு, பல், உடல்நலம் ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படலாம்.

🌱 நம் முன்னோர்களின் இயற்கை அறிவு என்ன சொல்கிறது?

✔️ நெல்லிமரக் கட்டை, தேற்றான் கொட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி நீரை இயற்கையாகச் சுத்திகரித்தனர்.

✔️ மண்பானையில் வெட்டிவேர், கருங்காலி மரக்கட்டை அல்லது சீரகம் சேர்த்து வைத்த நீர் மணமும் மருத்துவப் பயனும் கொண்டதாகக் கருதப்பட்டது.

✔️ கொதிக்கவைத்த நீரை செம்புப் பாத்திரத்தில் ஊற்றி மறுநாள் அருந்தும் பழக்கமும் இருந்தது.

✔️ ஓமம், துளசி, வில்வம், புதினா போன்ற மூலிகைகளை நீருடன் பயன்படுத்தி, தேவைக்கேற்ப உடல்நல நன்மைகளைப் பெற்றனர்.

💧 தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்?

சித்தர்கள் கூறும் ஒரு எளிய வழிமுறை:

👉 அதிக தாகம் இருந்தாலும் ஒரே மூச்சில் குடிக்காமல், மெதுவாகச் சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.

👉 பாத்திரத்தை உதட்டில் வைத்து குடிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

👉 உணவுப் பழக்கங்களைப் போலவே, தண்ணீர் குடிக்கும் முறையும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சித்தர்களின் கருத்து.

🌿 நவீன வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதோடு, நம் பாரம்பரியத்தில் இருந்த நல்ல பழக்கங்களையும் அறிவோடு மீட்டெடுத்தால், அது நம் உடல்நலத்திற்கு ஒரு நல்ல முதலீடாக அமையும்.

நம் முன்னோர்களின் அறிவை மதிப்போம்... ஆரோக்கியமான வாழ்வை நோக்கி நகர்வோம்! 💚


Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #21 on: July 09, 2026, 04:10:01 PM »
🥥🌿 **தேங்காய் + எள் = எலும்புகளுக்கு சக்திவாய்ந்த கூட்டணி! 🦴**

நம் பாரம்பரிய உணவில் இருக்கும் **தேங்காய்** மற்றும் **எள்** சுவைக்காக மட்டுமல்ல, முக்கியமான ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன.

🌿 **எள்** கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும்.

🥥 **தேங்காய்** நல்ல கொழுப்புகள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்தை வழங்குகிறது.

இந்த இரண்டு உணவுகளையும் **அளவாக**, **சமநிலையான உணவின் ஒரு பகுதியாக** சேர்த்துக்கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவலாம்.

🦴 ஆனால், பலமான எலும்புகளுக்கு இதுவே போதாது!

✅ போதுமான கால்சியம்
✅ வைட்டமின் D
✅ புரதம் நிறைந்த உணவு
✅ தினசரி உடற்பயிற்சி
✅ சூரியஒளி

இவை அனைத்தும் சேர்ந்து தான் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன.

📌 **நினைவில் கொள்ளுங்கள்:** ஒரு உணவு மட்டும் எந்த ஆரோக்கிய பிரச்சனையையும் தீர்க்காது. பல்வகை சத்துகள் கொண்ட சமநிலையான உணவுமுறையே நீண்டகால ஆரோக்கியத்திற்கு முக்கியம்.


Offline Baaski

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1322
  • Total likes: 1210
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #22 on: July 09, 2026, 04:15:06 PM »
*மண்பானை வாங்கிப் பயன்படுத்துங்கள்!*

சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்!

சளி என்கிற கழிவைத்தான் மண்பானை வெளியேற்றும்!

உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

மண்பானை நீர்- 7- 8 pH அளவு"

இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

 இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
 
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு

மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.
தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.