Author Topic: இயற்கை மருத்துவம்  (Read 125 times)

Offline RajKumar

இயற்கை மருத்துவம்
« on: October 31, 2025, 11:12:57 AM »
*வாய்ப்புண், வயிற்று புண்ணுக்குகளுக்கு இயற்கை வைத்தியம்...*

*கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.*

*கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.    இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.*

 *கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.*

*வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.     இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.*

*கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
« Last Edit: November 06, 2025, 10:04:21 AM by RajKumar »

Offline RajKumar

Re: இயற்கை மருத்துவம்
« Reply #1 on: November 06, 2025, 10:07:30 AM »
நெல்லிக்காயின் மகத்துவம்

   பச்சை நெல்லிக்காயை இடித்து பத்து மில்லிக்கு குறையாமல் சாறு பிழிந்து
இதனோடு இதில் பாதி அளவு
எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து

எலுமிச்சை சாற்றின் அளவில் பாதியளவு தேன் கலந்து இதை தினந்தோறும் காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் எந்த வைத்திய முறைக்கும் கட்டுப்படாத நாட்பட்ட சர்க்கரை நோயானது வெகு எளிதாக கட்டுப்படும்

இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த நெல்லிக்காய் சாற்றினை பருகி வர சர்க்கரையின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும்

     நெல்லிக்காய் சாற்றினை பருகி வருவதால் கிடைக்கின்ற பயன்கள்

உடல் வெட்டைச்சூடு தணியும்
நல்ல ரத்தம் உற்பத்தியாகும்
விந்து ஸ்கலிதம் குணமாகும்
விந்து உற்பத்தி அதிகரிக்கும்

பார்வைத் திறன் உண்டாகும்
மனதில் ஏற்படும் பயம் விலகும் மனோதிடம் ஏற்படும்

உடல் வறட்சியை நீக்கி உடல் வெப்பத்தை தணிக்கும் அதிக தாகம் குணமாகும்

பித்த வாந்தி மற்றும் ரத்த வாந்தி நிவர்த்தியாகும் தலை மயக்கம் நீங்கும்

நுரையீரலுக்கு வலிமை ஏற்படும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலம் பெறும் ரத்தம் சுத்தமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுவாச மண்டலம் சீராக இயங்கும்

எந்தவிதமான நோய்க்கிருமிகளும் சுவாசப் பாதையில் தொற்றாத வண்ணம் நமது உடலை காக்கும்

உடல் பிணிகள் அனைத்தையும் நீக்கி உடலில் நோய் வராமல் காக்கும்
ஒரு உன்னத மருத்துவம் இது

பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் இருந்பது கிராம் நெல்லி வற்றலை இடித்து இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை ஐம்பது மில்லியாக சுண்டக் காய்ச்சி இதில் பத்து மில்லி எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து பருகி வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களும் நீங்கும்.

Offline RajKumar

Re: இயற்கை மருத்துவம்
« Reply #2 on: November 13, 2025, 12:49:45 PM »
*முதுகு வலி:  எளிய தீர்வுகள்!*

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

* 1. உட்காரும் தோரணை*

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

* 2. உடற்பயிற்சி*

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

* 3.உணவு முறை*
பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

* 4. வைட்டமின்கள்*
கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

* 5. தாதுக்கள்*
 எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

* 6. சூடான குளியல்*
 வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

* 7. சப்ளிமென்ட்ஸ்* நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

*8. மசாஜ்*
 வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

* 9. கடுகு எண்ணெய்*
 எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

* 10.ஆரோகியமான சூழ்நிலை*
 சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

Offline RajKumar

Re: இயற்கை மருத்துவம்
« Reply #3 on: Today at 03:16:23 PM »
*வாய்வு பிரச்சனை* *"எப்படி உருவாகிறது*


வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது. காரணங்கள்: உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன. தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.    .சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும். சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால் குடலில் 'பெப்சின்' போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது. பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் அதிரும் படியான சத்தம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.   

*தீர்வுகள்*

:மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு எடுப்பது நல்லது.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சீரகம் உடலின் அக உறுப்புகளை சீராக்கி, உடலைப் பலப்படுத்தும். சீரகத் தண்ணீர் தினமும் காலை, மாலை வேளைகளில் இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.

சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, தேவையானபோது சுடு சோற்றில் உப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும்.

 மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

பழைய சாதத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துண்டு, மோர், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லேக்டோபேசில்லஸ், பிபிடோபாக்டீரியா, சக்காரோமைசஸ் இவைகள் சீரான அளவில் குடலில் இருந்து ஏராளமான நன்மைகள் செய்யும்.தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் உதட்டில் வைத்து குடிக்க வேண்டும். உணவை அவசரப்படாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

  இவைகளை முறையாக எடுத்து வந்தால் செரிமான மண்டல பிரச்சினைகள் சீராகி, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் நீங்கும், மலச்சிக்கல் இராது.