Author Topic: என்றும் பதினாறு போல் இளமையாக இருக்க வேண்டுமா?வேற எதையும் நம்பாதீங்க.  (Read 375 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226453
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

வெந்தயம் மட்டும் போதும்...

அழகைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. அதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு நாம் நிச்சயம் மெனக்கெட வேண்டும். அழகும் இளமையும் மாறாமல் நீடித்திருப்பது மட்டும் எளிதாக வாய்த்துவிடுமா என்ன?

கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். சிரமத்தைப் பாாத்தால், வெளியில் பேரழகியாக உலா வர முடியுமா? அப்படி உங்கள் சருமத்தை மிகவும் இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

வாழைப்பழம்

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றுமு் வைட்டமின் ஈ ஆகியவை நிரம்பியிருக்கின்றன. சருமம் தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் வாழைப்பழம் ஒரு நல்ல தீர்வாக அமையும். 2 வாழைப்பழங்களை குழைத்து, பேஸ்ட்டாக்கிக் கொண்டு, முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் வரை உலர விட்டு, பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.

வெந்தயம்

வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச்சிறந்த பொருள். வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை வெந்தயத்தில் நிரம்பியிருக்கின்றன. அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கிவிடும். ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை 2 மணி நேரம் வரையிலும் ஊற வைத்து, நன்கு மை போல அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் அதிக அளவிலான புரதம் இருக்கிறது. மேலும் அதில் பொட்டாசியமும் மக்னீசியமும் நிறைந்திருப்பதால் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கும் சிறப்பு வாய்ந்தது. முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் அப்ளை செய்தால், மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் பளிச்சிடும் சருமத்தோடு திகழ முடியும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை இயற்கையான பிளீச்சாகப் பயன்படுகிறது. அது சருமத்தை நீர்த்தன்மையுடன் வைத்திருப்பதோடு, இறந்த செல்களை நீக்கி, சருமத்தைப் புதுப்பிக்கும். எலுமிச்சை சாறினை அப்படியே முகத்தில் தடவினால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும். அதனால் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறினை சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் வரையிலும் உலர விட்டுப் பின் கழுவவும்.