Author Topic: பெண்களுக்கு சில வார்த்தைகள்....  (Read 41 times)

Online MysteRy


1. உங்களுக்கு உறவு இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள் . அவர் எவ்வளவு நம்பிக்கைகுரியவராக இருந்த போதிலும்.

ஆசிரியராக,
நண்பணாக,
டிரைவராக,
பக்கத்து வீட்டுக்காரனாக,
Whats app நண்பனாக,
வகுப்பில் படிக்கும் ஆணாக,
கூட வேலை செய்பவனாக...
வியாபாரியாக,
இருந்த போதிலும், அவர்களை அந்த அந்த இடங்களில் மட்டும் விட்டுவிடு... மொபைல் மூலம் உன் வீடு வரை வரவைக்காதே.

ஒரு ஆணை நீங்கள் நண்பனாகவோ , சகோதரனாகவோ, தந்தையாகவோ, வேறு எந்த முறையிலும் நினைத்து பழகலாம் கொஞ்சம் சிந்தித்து பார் பெண்ணே. அவரின் பார்வையும் அதே மாதிரி உள்ளது என உன்னால் கூறமுடியாது...

நீங்கள் ஆணிடம் இருந்து எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் அவனது மனதை உன்னால் தெரிந்து கொள்ள முடியாது..

பெண்ணே நீ சொல்லலாம் “அவனது பார்வை தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு உறுதியாக கூறுவாய்.. அதை நீ கண் சிமிட்டும் நேரத்தில் அவன் உன்னை தப்பான என்னத்துடன் ரசித்தால் உன் நிலமை என்னவாகும்?

பெண்கள் கூடுமானவரை ஆணின் பண வசதியை பேஸ்புக்கில் பார்த்து தயவு செய்து ஏமாறக்கூடாது. பேஸ்புக்கில் வரும் ப்ரோபைல்கள் முக்கால்வாசி பொய் பேசுபவை. ஒரு ப்ரோபைலை நாம் பார்க்கும் போதே தெரிந்துவிடும் ஒருவரின் உண்மையான அந்தஸ்து. கால்வாசிகள் ப்ரோபைலை லாக் செய்து விடுகிறார்கள். ஆணோ பெண்ணோ உண்மையோ பொய்யோ ப்ரொபைலை லாக் செய்யாமல் தைரியமாக வெளியிடுவார்கள். இதை வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு ஆணிடம் பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடக்கூடாது அது ஒரு வியாபாரமாக இருந்தாலும் சரி மற்ற விதத்தில் நட்பு ரீதியாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக பெண்களுக்கு எச்சரிக்கை தேவை. எவ்வளவுதான் எல்லோரும் தைரியமாக இருந்தாலும் நமக்கு பிரச்சனை என்று வரும்போது எல்லோரும் கைவிரித்து விடுவார்கள்.

பெண்ணே.. நீ சிறு வயதில் இருந்து நன்றாக பழகிய ஆணாக இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை உணர்வு உண்டு என்பதை மறந்து விடாதே..

தந்தையே மகளைக் கற்பழிக்கும் போது மற்ற ஆண்களை எவ்வாறு உன்னால் நம்ப முடிகிறது .

நல்ல ஆண்கள் உன்னிடம் எல்லை தாண்டி வரமாட்டார்கள்.. அதே போல் நீயும் நல்ல பெண் என்றாள் எல்லை தாண்டமாட்டாய்...

நாம் சரியாக இருந்தாலே போதும் நமக்கெதிரான குறறங்கள் பாதியாக குறைந்துவிடும்....