Author Topic: 60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்...  (Read 309 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226453
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதனால் தான் அக்குபிரஷர் சிகிச்சையில் உடலின் ஏதோ ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் பிரச்சனைகள் குணமாகின்றன. அந்த வகையில் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்பில் உள்ளது.
இக்கட்டுரையில் குறிப்பிட்ட கைவிரல்களை 60 நொடிகள் தேய்ப்பதால் அல்லது அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து வைத்துக் கொண்டு நன்மைப் பெறுங்கள்.
பெருவிரல்:
பெருவிரலானது இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கும் போது, பெருவிரலை 60 நொடிகள் தேய்த்து அல்லது அழுத்தம் கொடுத்து, பின் இழுத்துவிடுங்கள்.
ஆள்காட்டி விரல்:
ஆள்காட்டி விரலை 60 நொடிகள் தேய்ப்பதால், அது மண்ணீரல் மற்றும் வயிற்றின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகளைப் போக்கும். மேலும் ஆள்காட்டி விரல் குடலுடனும் தொடர்புடையது என்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் போது ஆள்காட்டி விரலைத் தேய்த்துவிடுங்கள் அல்லது அழுத்தம் கொடுங்கள்.
நடுவிரல்:
பயணத்தின் போது குமட்டல் உணர்வை சந்தித்தால், நடுவிரலில் அழுத்தம் கொடுங்கள். மேலும் நடுவிரலை 60 நொடிகள் அழுத்தம் கொடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மோதிரம் மற்றும் சுண்டு விரல்:
இந்த இரண்டு விரல்களையும் ஒன்றாக சேர்த்து 60 நொடிகள் மறு கையால் அழுத்தம் கொடுக்கும் போது, அது மோசமான இரத்த ஓட்டத்தால் சந்திக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் கழுத்து வலியில் இருந்து விடுவிக்கும்.
உள்ளங்கை:
உள்ளங்கையில் நிறைய நரம்புகள் இணைவதால், இந்த இடத்தில் 60 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
முடிவளர்ச்சி குன்றியவர்கள், வழுக்கை தலை உடையவர்கள், இளமையில் வழுக்கை விழுந்தவர் களுக்கு இந்த புதிய ஹேர் தெரபி உதவும். இரண்டு கைகளின்   விரல்களை நேருக்கு நேர் வைத்து சிக்கி முக்கி கற்களை உரசுவது போல் உரச வேண்டும். அவ்வாறு உரசும் போது இரத்த நாளங்கள் தூண்டப் படுகின்றன.
மேலும் மயிர்க் கால்களுக்கு இரத்தம் செலுத்தப் படுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க் கால்கள் வழுபெறும். இறந்த மயிர்க் கால்கள் கூட மீண்டும் வளரும். ஆனால் இந்த மாற்றம் உடனே நடக்காது.
தினமும் நம்பிக்கையுடன் காலையிலும் மாலை யிலும் இரண்டு வேலை களில் இந்த பயிற்சியை 5 நிமிடம் செய்தாலே போதும். 6 மாதத்தில் நற்பலன்கள் கிடைக்கும். இந்த பயிற்சி செய்யும் போது விரல்களில் நகம் இருக்கக் கூடாது.
மேலும் கட்டைவிரல் பயன்படுத்தக் கூடாது. இரு கை விரல்களையும் உரசும் போது அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக உரசவும். கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்தப் பயிற்சியை தயவு செய்து செய்யாதீர்கள். இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி விடும். ஆனால் முடி வளர இந்தப் பயிற்சி சிறந்த பயிற்சி தான்.