கற்பனையில் வாழும் காதல்
என் நினைவுகளில்
எங்கும், என்றும் அவள்
ஒரு நாள் கனவில்
அவளின் சின்ன சின்ன குறும்பு தனங்களை பார்கையில்
தோன்றியது பெரியவள் ஆனாலும் அவள் இன்னும் சிறு பிள்ளையே!
குழந்தையே போன்றே கோவித்து கொள்வாள் அவள் !
தந்தையிடம் பிள்ளைகள் எப்படி ஆடம் பிடிக்குமோ
அதே போன்றே என்னிடம் அடம் பிடித்து
காரியத்தை சாதித்து விடுவாள் அன்பால் அவள்!
சின்ன குழந்தைகளுக்கும்
பெரியவர்களுக்கும் பிடித்த ஒரே இடம் கடற்கரை
இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று !
ஓர் நாள் என் காதலி என்னும் சின்ன குழந்தை
அடம் பிடித்தாள் அழைத்து செல் என்னை
கடற்கரைக்கு என்று!
என் இரு கரம் தன்னை பற்றி கொண்டாள் அவள்!
அவளுடன் சென்ற அந்த ஒரு நாளில் ,
அவளின் சின்ன பிள்ளை போன்ற குறும்புகள்
என்னையும் சின்ன குழந்தையைகவே மாற்றிய
ஒரு அழகிய நாள்!
அது அவளும் நானும்
தாயை கண்ட குழந்தைகள் போன்று
கடல் அன்னையின் அலையில் ,
கால்களை நனைத்து -இங்கும் அங்குமாக
அலைகளுடன் விளையாடி, கடல் கரையினில் சிற்பிகள் சேகரித்து கொண்டு
பொழுதை கழித்தோம் !
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது!
என் காதல் தேவதை மீது வெயில் கூட பட கூடாது என்ற எண்ணத்தில்,
அவளுக்கு குடை ஒன்று வாங்கினேன்!
அவளுக்கோ வீண் செலவு என் செய்கிறீர்கள்? என்று
என்னிடம் செல்லமாய் கோவித்து கொள்வது போல்
நடித்து கொண்டு, முகத்தில் புன்னகை தவிழ -
அது உண்மையை காட்டி கொடுத்தது கூட தெரியாமல் ,
என் மீது கோவம் இருப்பது போன்று நடித்த படி நடந்து செல்கிறாள்!
அரக்கி
நான் அசுரன் என்பதினால் அவள் எனக்கு அரக்கியே!