Author Topic: கொட்டாவி...  (Read 17 times)

Offline MysteRy

கொட்டாவி...
« on: October 05, 2025, 08:22:24 AM »

பொதுவாக நமக்கு கொட்டாவி ஏன் வருகிறது? ஒருவருக்கு கொட்டாவி வந்தவுடன் அடுத்தவரும் கொட்டாவி விடுவது ஏன்? தன்னிச்சையாக வாயைப் பெரிதாகத் திறந்து, மூச்சுக்காற்றை வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுத்து, ( செவிப்பறை விரிவடைந்து) நுரையீரலில் இருந்து காற்றை வாய்வழியாக வெளி விடுவதுமான செயல்தான் கொட்டாவி.

நமக்கு கொட்டாவி ஏன் வருகிறது?

கொட்டாவி வருவதற்கான முக்கியமான காரணம் உடலுக்கு தூக்கம் தேவை என்பதை அறிவிக்கவே. கொட்டாவி என்பது ஒரு நோயல்ல. ஆனால் அடிக்கடி கொட்டாவி ஏற்பட்டால் கண்டிப்பாக வைத்தியரை அணுகவேண்டும்.
கல்லீரல் பலவீனமாகவோ, அல்லது செயல்திறன் குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கொட்டாவி வரும். மூளையழற்சி ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் கொட்டாவி வரலாம். மூளையில் ஏற்படும் புண் காரணமாகவும் கொட்டாவி வரலாம் .

உடற்சோர்வு , மன அழுத்தம் , வேலைப்பழு , ஆர்வமின்மை என்பவற்றின் காரணமாகவும் கொட்டாவி வரலாம் மூளைக்குச் செல்லும் ஆக்சிசன் அளவு குறைவடையும் போதும் கொட்டாவி வரலாம். பொதுவாக உடல் வெப்பநிலை குறைவாக இருக்கின்ற குளிர்காலங்களிலேயே அதிகளவாக கொட்டாவி ஏற்படும்.

ஒருவருக்கு கொட்டாவி வந்தவுடன் அடுத்தவரும் கொட்டாவி விடுவது ஏன்? துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துப்படி ஒருவர் கொட்டாவி வருவதை பார்த்து மற்றவர்களுக்கும் கொட்டாவி வருவதற்கு காரணம் அவர்களின் மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள்தான். ஒருவருக்கு சலிப்பா இருந்தாலும், அலுப்பாக இருந்தாலும் கொட்டாவி வரும். அதை பார்க்கின்ற இன்னொருவருக்கும் கிட்டத்தட்ட அதே மனநிலை இருந்தால் அவருடைய மூளைஅவருக்கும் கொட்டாவியை ஏற்படுத்தும்.