Author Topic: நெல்லிக்காய் சாறு ரத்த சோகை முற்றிலும் விரட்டும் ஒரு அருமருந்து...  (Read 492 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226630
  • Total likes: 29011
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருக்கின்றது நெல்லிக்காயில் கால்சியம் வைட்டமின் சி புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோல டேனின் ஃப்ளேவனாய்ட்ஸ் எலாஜிக் அசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருக்கின்றது எலும்புகள் உறுதியாகும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் ரத்த சோகைக்கு நெல்லிக்காய் சிறந்த நல்ல ஒரு மருந்தாகும். நெல்லிக் காயை பச்சையாக சாப்பிடும்போது தான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றது

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் சாப்பிடலாம் நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லிக்காய் உண்டு வந்தால் சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச்சாறு அருந்தி வந்தால் தேவையற்ற எடையை குறைத்து கொழுப்புகளை குறைத்து சிக்கென்ற தோற்றத்தைப் பெற்று விடலாம்.

நெல்லிக்காயுடன் புதினா இஞ்சி எலுமிச்சம் சேர்த்து கலக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடும் காயங்களைக் குணப்படுத்தவும்
புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
கீழாநெல்லி கரிசலாங்கண்ணி உடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.