Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 381  (Read 398 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 381

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Thenmozhi

பெண்ணே உன் அழகை வர்ணிக்க அவனியில் வார்த்தைகள் போதவில்லையடி கண்ணே!

பெண்ணே உந்தன் கயல்விழி சொல்கிறது உன் ஒட்டுமொத்த அழகினையும்!
கண்ணே உந்தன் கருவிழிப் பார்வையினால் கவர்ந்திழுத்தாய் அனைவரையும்!

மைவிழியால் மன்னனையே மயக்குகின்றாய் மங்கையே!
மை பூசிய கண்மடலினால் சிறைப்பிடித்து விட்டாய் என் இதயத்தையே!

புருவங்கள் இணையும் புள்ளியில் நீ இட்ட திலகம் !
புதுப்பொலிவு இயற்றுகின்றது உந்தன் நுதலில்!
புன்னகைக்கும் உந்தன்  கருவிழியில் எப்போதும் எந்தன் விம்பம்!

காதினில் தொங்கும் ஜிமிக்கி இசை பாடுகின்றதே!
கானம் பாடும் உன் காதணி மற்ற இசையை மறக்க வைக்கிறதே!
காதோரம் உன் கூந்தல் கதை பேசுகின்றதே!
காதணியில் ஜொலிக்கும் செவ்வர்ணம் மனதை செழிப்பாக்குகின்றதே!

சங்குக்கழுத்தினில் அணிந்த சங்கிலி மெருகூட்டுகிறதே மாது உன் வர்ணணையை!
சருமத்தின் நிறம் பள பள என ஜொலிக்கிறதே மங்கையே!

வளையல்கள் உந்தன் கரத்தை வண்ணமாக்குகிறதே!
வளையல்களின் அடுக்குகள் ஓவியம் படைக்கின்றதே!
வளையல்கள் எழுப்பும் ஓசை இன்னிசை ஆகின்றதே!

விரல்கள் பிடிக்கும் பாவனை என்னை வா என்று அழைக்கின்றதே!
விரல்களினால் நீ மீட்டுகின்ற இசை மெல்லிசையாகின்றதே!
விரல்களின் இடைவெளி நெருங்கிச் செல்வது போல் என் மனம் உன்னிடம் நெருங்குகிறதே!
விரல் நகங்களில் பூசிய பூச்சு நம் கண்களுக்கு விருந்தளிக்கிறதே!

உன் பார்வை ஒன்றே போதுமடி பெண்ணே!
உன் அக,புற அழகினை கண்டு கொள்வதற்கு!
உன் மைவிழிப் பார்வை இயம்புகிறது - நீ அமைதியானவள் என்று!

நீ உடுத்திருக்கும் உடை,
அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒரே வர்ணத்தில் இருப்பது புகட்டுகிறது நீ கலைநயம் ஆனவள் என்று!

பெண்ணே நீ தேவதையடி!
பெண்ணே உன் அழகை வர்ணிக்க வார்த்தை போதவில்லையடி!
பெண்ணே உன்னை கண்ணாக பார்த்துக்கொள்வதற்கு, அழகான உன் குடும்பம் போதுமடி கண்ணே!
பெண்ணே உன் அழகை கவி வடிக்க வந்த தேன்மொழி,இன்று மொழியற்றவளாய் மெளனமாகிறாள்!
பெண்ணே அவனியில் பேரழகி நீதான் என்று,பெருமையாக சொல்லி ,பெருமிதம் கொள்கிறேன் நானும் பெண் என்ற வகையில்!

« Last Edit: September 08, 2025, 10:04:19 PM by Thenmozhi »

Offline Clown King

ஓவியம் உயிராகிறது

எந்த ஒரு ஆண் மகனும்
கவிஞனாக உருப்பெறுவது
ஒரு மங்கையின் மை விழிகளும்
காதோடு உரசி கிடைக்கும் ஜிமிக்கியையும்
வாழைத்தண்டு போல் உள்ள கைகளில்
உறவாடும் வளையல்கள் தான்
 நான் மட்டும் விதிவிலக்கா

மௌனம் பேசும் விழிகள்
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்
 அக்கரு விழிகள் தன் எண்ணங்களின்
பிரதிபலிப்பாக அர்த்தம் கொள்ளச் செய்யும்

மையிட்ட விதிகள் அழகுக்கு கூடுதல் அழகு வானத்திலோ கரு மேகங்களின் நடுவே வெண்ணிலா நானும் இங்கு காண்பது கருநிலா வெண்மேகங்களின் நடுவே
மௌனம் பேசும் இவ் விழிகளில் அன்பு பாசம் காதல் கருணை ஏன் பல சமயங்களில் நெருப்பாக மாறுவது உண்டு இதை உணர்ந்தவர் மறுக்க மாட்டார்
இருப்பினும் காதல் கொள்ளச் செய்தாய் உன் விழிகளின் அசைவினால் என்னை


காற்று கூட ஏங்கிக் கிடக்கும் உன் காதணிகளை தழுவ மாட்டோமா என்று உன் உள்ளத்தின் சந்தோஷங்கள் வெளிப்பாடாய் நீ தலையை ஆட்டி ஆட்டி பேசும்போது உன் காதணிகள் ஆடும் அழகே உன் காதணிகள் ஆடும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை தென்றலை கண்டதில்லை ஆனால் உணரச் செய்தாய்உன் காதணிகளை அது தீண்டும் போது

வாழைத்தண்டு போன்ற உன் கைகளில் உறவாடும்  வளையல்களை என் சொல்வேன் நீ சினங்கும்போதும் அவைகள் எழுப்பும் ஒளி நீ பேசும் வார்த்தைகளுக்கு பின் இசையாக அல்லவோ மாறி இருக்கின்றது

இந்த அழகை எல்லாம் முன்னிறுத்தி பார்த்து மட்டும் சென்று விட முடியுமா எந்த ஒரு ஆண் மகனாலும் தாண்டி செல்ல முடியாது இவைகளை வர்ணிக்காது
என்னுடைய காதலும் நடக்கின்றது உன் விழிகளின் அசைவில் உன் ஜிமிக்கியின் ஆடலில் உன் கை வளையல்களின் ஓசையில் .
.....
« Last Edit: September 08, 2025, 11:58:47 PM by Clown King »

Offline Madhurangi

வெண்ணிற வாழ்க்கை

கவலையின்றி சுத்தி திரிந்தாள் பட்டாம்பூச்சி பெண்ணொருத்தி
கனவுகள் கூட வண்ணமயமாக மலர்ந்தது கல்யாண வயதை அடைந்த ,அவளையொட்டி ...

உற்றார் உறவினர் கூடி பஞ்சாங்கம் தான் பார்த்து பத்து பொருத்தமும் கச்சிதமென... பெண்ணவளின் வதுவை கோலம் காண நாள் குறித்து வாக்கு சொன்னார் பேர் பெற்ற சோதிடர்..

அடர் சிவப்பு கூறை உடுத்தி  தலை எல்லாம் கனகாம்பரமாக..
மஞ்சள் பூசிய முகமும்..செம்மை பூசிய கன்னங்களுடன்
வண்ணமயமாக கண்ணாளனின் கரம் பிடித்தாள்

நாலாம் நாள் சடங்கு முடிஞ்சு ,வண்டியேறி போன
கணவனவன் உயிரோடு,
வாழ்வின் வண்ணங்களையும்,
சேர்த்தே காலனவனுக்கு பறிகொடுத்தாள்...

குடி வெறியில் வண்டி ஒட்டிய கணவன வையல..
10 பொருத்தம் பார்த்து வச்ச  சோதிடர வையல..
4 நாள் வாழ்ந்த  மருமக ராசி  மகன கொன்றதென ,
மாமியார்காரியும் கத்தி அழுதாள் ..

25  வருடம்  வளர்த்த உறவினர் கூட 16 ம் நாள்ல சோகத்தை தலை முழுக ..4  நாள் வாழ்ந்த வாழ்வுக்காக காலம் முழுக்க துடக்கு காத்தாள்..

வானவில்லின் அனைத்து  வண்ணங்களில் சேலை உடுத்தி மகிழ்ந்தவளோ   ..
இன்று வெண்மையினை மட்டுமே சகாயமாக்கிக்கொண்டாள் ..

கரு வண்டுகள் கண்ணானதோ என மை பூசிய பெண்ணவளோ
இன்று தூக்கம் தொலைத்த  இரவுகளால், கருவளையத்தை பூசிக்கொண்டாள் ..

ஆடை வண்ணத்தில் நெற்றி பொட்டு தேடி  சூடுபவள் .. 
இன்று நெற்றி சுருக்கங்களால் நெற்றியினை நிறைத்திருந்தாள்..

ஜிமிக்கி கம்மல் , பூ கம்மல், சங்கிலி கம்மல் என ரகம் ரகமாய் கம்மல் இட்டவள் , இன்று காது துவாரம் தூராமல்  தவிர்க்க வேப்பங்குச்சியை தஞ்சமடைந்தாள்..

நெற்றி பொட்டற்ற முகம் பார்க்க பிடிக்காமல் .
கண்ணாடி பார்ப்பதை வெறுப்புடன் நிறுத்தி கொண்டாள்..

ஒலி எழுப்பாததெல்லாம் வளையலா???  என அடம் பிடித்து தங்க வளையல் விலக்கி கண்ணாடி வளையல் வாங்குபவள் ,
இன்று வெற்று கைகளே பாரமாக ஏற்றுக்கொண்டாள்..
..
உடன் கட்டையினை ஒழித்தோம்... பெண் சுதந்திரம் காத்தோம் என கொக்கரிக்கும் சமூகமே..

வண்ணமற்று  வாட்டத்தில் வாழும் இந்த வாழ்வுக்கு,
உடன்கட்டையே மேல் என..
பார்வையிலேயே ,விரக்தியை உமிழ்ந்து  சென்றாள்..
விதைவை கோலம் கொண்ட பெண்ணொருத்தி..

Offline சாக்ரடீஸ்

நான் ஒரு ஆணாக இருந்தாலும், இதில் ஒரு பெண்ணின் புரட்சி, சிந்தனைகள், கனவுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்று புனைந்து எழுத முயற்சித்துள்ளேன்

-----------------------------------------------------------
அழகை மீறும் புரட்சி !

கண்களில் தீட்டும் மை
அழகுக்காக அல்ல
என் பார்வை எரிவதற்கே
உலகம் உலுக்கும் எண்ணத்திற்கே.

இமைகளின் இடைவெளியில்
ஒவ்வொரு சுவடும்
மௌனத்தில் எழுதப்பட்ட
மறைந்த வசனம்.

என் கண்கள் பேசும் மொழி
உங்கள் உதடுகளில் ஒளிந்திருக்கும் உண்மை.

கழுத்தோடு ஓடும் கூந்தலும்
காதோரம் ஆடும் காதணியும்
இவை என் புரட்சியின் பாடல்
என் முழக்கத்தின் இசை.

ஒவ்வொரு ஓசையும்
சொல்லப்படாத கதைகளைப் பேசும்
மௌனத்தை முறிக்கும்
என் உள்ளத்தின் புயல்.

என் காதுகள் தாங்கும் இசை
சுதந்திரப் பறவையின் தாளம்.

கையில் சுழலும் வளையல்கள்
அடிமையின் சங்கிலி அல்ல
என் வாழ்க்கையை வடிக்கும்
சக்தியின் மண்டலம்.

என் கைகள் காட்டும் பாதையில்
என் உலகம் விரிகிறது
எல்லைகள் அறியாத பெருங்கனவு
அருவிபோல பாய்கிறது.

என் கைகள் காட்டும் வழி
புதிய உலகைக் காட்டும் சக்தியின் திசை.

ஆணழகு பேசும் உயிர்களின் உலகில்
மனிதரில் மட்டும் பெண்ணழகு
அளவுகோலாய் மாறியது ஏன்?
"அழகு" பெண்ணின் சுதந்திரதை கட்டுபடுத்தும்
ஒரு உளவியல் சொல்.

ஆனால்,
என் பாதை வளையாது,
என் குரல் அடங்காது.
உடல், ஆடை, அணிகலன்
என்னை அளவிட முடியாது.

என் ஒவ்வொரு செயலும் உரைக்கும்
என்னைப் பார்,
என்னை மதித்திடு,
என் சுதந்திரத்தை முறிக்காதே.

ஏனெனில்
என் கண்களில் நெருப்பு
என் காதுகளில் போர்க்குரல்
என் கையில் விடுதலை
என் உள்ளத்தில் முழுமையான புரட்சி.

நான் எழுகின்றேன்
அழகின் அடையாளமாய் அல்ல
சிந்தனையின் அடித்தளமாய்.



Offline Evil

பேசுவதற்கு மொழிகள் தேவை இல்லை என்று
உணர்த்தியது அவளின் இரு விழிகள் !

அவளின் கரு விழி முன்னே நின்ற நான் ,
ஒரு கைதியாய்  நீதி தேவதை முன்னே நிற்பது போன்று நிற்கின்றேன்
அவளின் விழிகளில் நான் உறைந்து போய் விட்டேன் !

அவளின் காதில் அசையும் காதணி கூட  
இன்னிசை இசைக்கும் என்பதை உணர்ந்தேன் ,
காற்றில் அவளின் காதணி அசையும் பொழுது!

அவளின் சின்ன சிறு விரல்கள்
யாழை இசைக்கும் இசைமகளின் விரல்களை
வரமென வாங்கி வந்தாலோ அவள் என வியக்கிறேன் !

அவள் பார்த்த ஒற்றை பார்வையில்
ஒரு நொடியில் என் உயிரை  பறித்து விட்டாள்!

சிறைப் பறவையாய் அடைந்து கிடக்கின்றேன்!
தன்னை எப்படியாவது மீட்டு விடுதலை தருவாய் என்று!

விழியின் ஓரத்தில் கானல் நீர் போல
கண்ணீர் உடன் காத்து நிற்கிறாள் அவள்!
சிறை கைதியை விட அவள் படும் வேதனைகளை நான் அறிவேன்!
இருந்த போதிலும் அவளிடம் நான் சொல்லும் ஒரே ஆறுதல்
எல்லாம் சரி ஆகிடும் என்ற ஒரு வார்த்தை
அவளின் வருத்தத்தை குறைக்கும் என்ற நம்பிக்கையில்!

அவளின் பார்வையை நான் ரசித்த பொழுது
கருமேகம் போல அவளின் கண் இமைகள் இருப்பதால்
வானில் மழைபோல கண்ணீர் பொழிந்திடுமோ என ஐயம் கொண்டேன்

ஒற்றை பார்வையாலே என் உயிரை பறித்து சென்ற
அவள் தான்  என்
அழகிய ராட்சசி!

அந்த ராட்சசி,  இந்த ராட்சசனை
சீக்கிரம் தேடி வருவாள் என்ற நம்பிக்கையில்,
என் பயணம் தொடர்கிறது
அவளின் நினைவாகவே!
« Last Edit: September 09, 2025, 03:50:00 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Yazhini

வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்
ஒருமுறையேனும் உன்னை மீண்டும் பார்த்துவிட....
மீண்டும் உன் தோள்களில் சாய்ந்திட...
உறக்கமற்ற இரக்கமற்ற இரவுகளின்
பரிசு மையின்றி தீட்டப்பட்ட கருமை
நீங்காமல் ஆரத்தழுவிய தனிமை...
என்னவனே! விழிமொழி அறிந்தவனே!
கண்ணிமைக்கா காணும் போட்டிகளில்
அதிகம் என்னை வென்றவனே!
இப்போது மட்டும் காணாதது ஏனோ...

கார்குழலோடும் செவி அணியோடும்
நீ பேசிய பேச்சு இன்றும் இனிக்குதடா...
ஒருமுறையேனும் கேட்க தோணுதடா...
உன் விரல் சுண்டிய காதணியின்
முத்துகளோடு உன் முத்தமும் பேசியதே...
இன்று சுரங்கலற்று மௌனித்ததே...
 சந்தங்களற்ற இசையாய்
காதல்பேசிய அணியும் அணியற்று போனதே...

கைப்பற்றி பயணித்த தருணங்களில்
உன் விளையாட்டு பொருளான வளைவியும்
அன்பு மொழி பேசியதே...
இன்று நினைவுச்சின்னம் ஆனதே...
மீண்டும் ஒரே ஒருமுறையேனும் கைப்பற்ற ஏங்குகிறேன்...
மாற்ற முடியாத ஓர்வுகளால் மருங்கி நிற்கிறேன்...
உன் கரங்களுக்குள் என்கரம் இருந்தபோதெல்லாம்
கருவறையின் சேய்யாகி போனேன்..
உனதன்பின் சுவடாகி வாழ்கிறேன்...
« Last Edit: September 09, 2025, 08:13:54 AM by Yazhini »

Offline SweeTie

கண்களால் பேசிடும்  காதலே
 என் கவிதையின்  ஓவியமே 
வார்த்தைகள் பேசும் உன் 
மின்சார பார்வை  அழகு
காதோரம் கொஞ்சிடும் 
லோலாக்கும் தனி அழகு
கையேடு விளையாடும் 
வளையலும்  தனி அழகு

வானத்தை வளைத்து உன்
புருவங்கள்செய்தானோ ?
 மீனொத்த விழிகளுக்கு 
விண்மீனை  கொண்டானோ  ?
முத்துப்போல  பல்வரிசை
மின்னலென    மின்னிடவே
செம்பவளம்   கொண்டு
சிறு வாயை  செய்தானோ ? ?

கருநாகம்  கூந்தலதை
கருமேகம் தன்னிடமே 
கடன் வாங்கி வந்தானோ?உன்
வெண்சங்கு கழுத்தோடு 
ஒட்டி உறவாடி மகிழ?
  மலரோடு உறவாடும்
கரு வண்டின்  ரீங்காரம்
களவாடி  வந்தானோ?  உன்
கண்ணாடி வளையல்களின்
காதல்  ரீங்காரம்  கேட்க   

என்  ரத்தஅழுத்தம்  ஏறுதடி 
காதல்  மேலும்  சுரக்குதடி
சிட்டு  உன்னை  பார்க்கையிலே
என் சிந்தை எல்லாம் மயங்குதடி
ஓவியமாய்  நீ இருக்க 
கவி பாட  நான்  இருக்க
வேறென்ன வேணும்  இனி 
வாழ்ந்திடுவோம்  காதலோடு
   



=]
« Last Edit: September 09, 2025, 03:25:45 AM by SweeTie »

Offline VenMaThI



மாலையில் அந்த மௌன நொடியினில்
என் மனம் எங்கோ பறந்த அவ்வேளையில்
மௌனத்தை களைக்கும் ஒளியாய்
பல ரீங்கார இசைகள் கேட்க

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி  போனேன் - - என
ஏதோ ஒரு கவி பாடியதைப்போல்
சிறிது சிறிதாய் என் மனதை
கொள்ளையடித்த அத்தருணங்கள்...

வெள்ளி கொலுசு அணிந்த - அந்த
வெண்கமல பாதங்கள்.....
நிசப்த நொடியில் ஒரு நாட்டிய நிகழ்வு
நடைக்கு ஏற்ப இசைத்த அந்த கொலுசின் அசைவு....

கைகளில் அணிந்த வளவிகளோ
அலைகளை போல் ஒன்றோடு ஒன்று மோதி
அழகாய் காற்றினில் அசைகயிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே....

கண்ணங்களை உரசும் சிமிக்கியும்
அதை தன் கட்டுக்குள் வைக்கும் அந்த கம்மலும்
முக அசைவுக்கு ஏற்ற நடனம்
காண்போரின் கண்களுக்கு ஒரு கலை விருந்து....

மௌனமாய் கிடந்த மனது - இன்னொடியில்
எங்கோ பறந்தது மகிழ்ச்சியில்
பார்க்கும் நமக்கே இத்துனை மகிழ்ச்சி எனில்
அணிந்த அவளுக்கோ சொல்லவா வேண்டும்??

யார் இவள் என்ற கேள்வியுடன்
அவளின் கயல்விழிகளை கண்டேன்
கலைநயம் அனைத்தும் உள்ளடக்கிய - சகலகலாவல்லி என
அங்கும் இங்கும் அலைந்த அந்த கருவிழிகள்...

ஓராயிரம் மொழிகள் கற்றவனும்
சற்றே குழம்பி நிற்கும் தருணமாய்
தனக்கே உரிய நடையில்
பல்லாயிரம் வார்த்தைகளை உதிர்த்தது...

காந்தமாய் காண்போரை கவர்ந்து
கள்வனை போல் நம் மனதை கொள்ளையடித்து
தான் யார் என்பதை மறக்கச்செய்யும்
மயக்க மருந்தோ இக்கண்கள்...

பெண்ணே உன் காந்த கண்களுக்கு முன்னாள்
வேறெந்த ஆபரணமும் ஈடாகாதாடி..

என்னடா இது.. ஒரு ஆண் போல நான் இங்கு
இவள் கண்களின் காதல் வலையில் சிக்கித்தவிக்கிறேன் ..
தப்பிச்செல்ல வழியுண்டோ  - இல்லை
இவ்வழகில் ஆயுள் கைதி ஆவேனோ?????
..

« Last Edit: September 10, 2025, 10:28:25 AM by VenMaThI »

Offline Ashik

என்னவளின் முக பாகங்களை வார்த்தைகளை வர்ணிக்க வாய்ப்பளித்த ஓவியம் உயிராகிறதுக்கு சொல்ல வேண்டும் அவளின் முகத்தை வர்ணிக்கும் பொது என் வார்த்தைகள் கூட உணர்வு கொண்டு உயிர் பெரும்!! விழிகளை கொண்டு வாழக்கையின் அர்த்தம் எனக்கு புரியவைத்தவள் !! அவளின் விழிகளை வர்ணிக்க வார்த்தைகள் தேடிய புலவர்கள் எல்லாம் களைத்து போனார்கள் !! மொழிகளில் இல்லாத வார்த்தையை எங்கு தேடி அவள் விழிகளை வர்ணிக்க முடியும் என்று !! இரு இமைகளுக்கு நடுவேய் மொத்த மொழியும் அடங்கி தான் போனது அவளது விழியாய் !! ஒவ்வொரு முறை அவளது விழிகள் என்னை தேடும் பொது மீண்டும் நான் மீண்டும் பிறந்தாய் உணர்தேன் !! அவளது விழியின் மொழியை  நான் அறியும் முன்னேய் தான் அறிந்து கொண்ட கர்வத்தால் என்னை பார்த்தும் ஆடும் அவளது கம்மல் !! விழிகள் சொல்லும் மொழியை எனக்கு இசையாய் உணர்த்தும் !! என்றாவது ஒரு நாள் நான் நிரந்தரமாய் பிடிக்க போகும் கரங்கள் என்று அவளது வளையங்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் ஆர்ப்பரிக்கும்  !! வலையாளின் சத்தம் எந்தன் மனதை வசிய படுத்தும் !! காதல் கொண்டு என்னவளை நான் ரசிக்க நாட்கள் காணாது என்று நெனைத்தேன் !! ஆம் நாட்கள் கடந்தது !! ரசிக்க மட்டுமே தெரிந்த என்னை கடந்து இன்று தனியாய் விட்டு சென்ற உணர்வுகளை எழுதி என்னை மீண்டும் ரசிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது !! காலம் எல்லாம் என்னவளின் விழியின் தேடலாய் வாழ நினைத்த நான் !!இன்று ஒரு நொடியேனும் அவள் தேடி செல்வாள் என்று பொய்யான நம்பிக்கையில் !! காதல் என்றும் அழிவது இல்லை !! அவள் எனக்கில்லை என்றாலும் என் காதல் மட்டும் அவளுக்கானது என்று விழியின் ஓரமாய் சிறு கண்ணீரோடு நான் !!