Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 380  (Read 477 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .


Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



நிழல் படம் எண் : 380

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Lakshya

நம்பிக்கை பேசுகிறேன் !!!

ஏன் பயப்படுறே? நான் உன்னோடு இருக்கிறேன்...
உன் கண்களில் ஒளியாக, உன் இதயத்தில் துணிவாக... என்றென்றும் உனக்கு துணையாக...

நீ கீழே விழுந்தாலும் உன் கைகளை பிடித்து எழுப்புகிறேன்...நீ செல்லும் பாதை மறந்தாலும் நான் உன் பாதையாகிறேன்...

இருள் சூழ்ந்த பாதையிலும், ஒளியை தேடி நடக்கும் காலடி - நானே ( நம்பிக்கை )...

சின்னஞ்சிறு விதையையும்
பெரும் மரமாக மாற்றும் வல்லமை,என்னுள் தான் மறைந்திருக்கிறது...

நான் இருந்தால் வாழ்க்கை சவாலல்ல,
அது தான் வெற்றியின் முதலடி...

அம்மாவின் நம்பிக்கை நம்மை வெற்றியை நோக்கி நடக்க செய்யும்...
அப்பாவின் நம்பிக்கை
ஒரு மகளின் பாசமான வலிமை...

உலகம் " இல்லை " என்றாலும் நீ " ஆம் " என்று சொல்லி பழகிக்கொள்...நம்பிக்கை உன்னை அழகாகும்...உன் வலி கலந்த சிரிப்பையும் வலிமையாக்கும்...

ஏனெனில் நீயே எனது உயிர்...உனக்காக ஒரு ஒரு நாளும் ஒரு புதிய கதை காத்திருக்கிறது...எழுந்திரு !!!
« Last Edit: August 26, 2025, 01:40:09 PM by Lakshya »

Offline Thenmozhi

    நம் வாழ்வில் நம்பிக்கை பேணுவோம்

அன்னை வயிற்றில் கருவாக நான் இருந்த போது தொப்புள் கொடியை நம்பினேன் உணவுக்கு,பாதுகாப்புக்கு!
அம்மாவின் கருவறை என்னை பத்து திஙகள் சுமந்த போது பத்திரமாக இருந்தேன் எதுவும் நெருங்காது என்ற நம்பிக்கையுடன்!
அன்னை வயிற்றில் இருந்து வெளி உலகம் பார்க்க வரும்போது வைத்தியர்களை நம்பினேன் பக்குவமாய் என்னை தாங்கிப்பிடிப்பார்கள் என்று!
அப்பா கையில் என்னை தாங்கியபோது இதை விட நம்பிக்கை வேற எதுவும் இல்லை என்று என் மனதில் ஒரு எண்ணம்!
அண்ணா என் கை பற்றிய போது இதை விட உலகில் சிறந்த நம்பிக்கை எதுவும் இல்லை என்று ஒரு அளவில்லா சந்தோசம்!

என் புது வரவினை கொண்டாட வீட்டுக்கு வருகை தந்தனர் உறவுகள் ,நண்பர்கள்!
என் நம்பிக்கை இன்னும் உறுதியானது அவர்கள் பேசிய பேச்சுக்கள் என் செவிகளில் நம்பிக்கையினை மெருகூட்டியது!
என் ஆசிரியர்கள் அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியை ஊட்டியபோது உதித்தது வாழ்வின் நம்பிக்கை!

நட்புக்கள் சிறந்தது என்று சொல்ல அவர்கள் மீது நான் கொண்ட நம்பிக்கை!
நம்பிக்கை நிறைந்த அன்பு மட்டுமே நிலையானது!
நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று தன்னம்பிக்கை!
நம் வெற்றிகளுக்கும்,இன்பமான வாழ்க்கைக்கும் சிகரம் தன்னம்பிக்கையே!
நம்பிக்கை உனக்கே உன்மீது இல்லை என்றால் கடவுள் வந்தா கூட எதுவும் பயனில்லை!

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது துரோகத்தின் உச்சம்!
நம்பிக்கையை பிறருக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள் பல மடங்கு நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்!
நம்மை நம்பும் உறவுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருப்போம்!

எங்களுக்கு தெரிந்த விடயங்களை மற்றவர்களுடன் பேசி பழகிடுவோம்! -இதுவே
எங்கள் மீதான நம்பிக்கை,மரியாதையினை அதிகப்படுத்திடும்!
நாம் சுமக்கும் நம்பிக்கை நாம் கீழே விழுகின்ற வேளையில் நம்மை சுமக்கும்!

பயத்தை விட வலிமையானது நம்பிக்கை!
பலமான நம்பிக்கை தான் வெற்றியின் முதல் படி!
பாரினில் விலை உயர்ந்த பொக்கிக்ஷம் நம்பிக்கை!
பல முயற்சிகள் தோல்விகளை தழுவினாலும் நம்பிக்கையுடன் அடுத்த முயற்சிக்கு அடி எடுத்து வைப்போம்!

முதல் நடை பயின்ற போது என் மீது இருந்த நம்பிக்கயில் கை விட்டு நடந்தேன்!
முயன்ற வேளையில் விழுந்த போது தூக்கிவிட குடும்பம் இருந்த நம்பிக்கையில் நடந்தேன்! -இப்போது
முழு உலகமும்  சுற்றுலா செல்கிறேன் அதுவும் நம்பிக்கையே!

மனிதனின் நோய்களை குணமாக்கும்  ஒரே மருந்து நம்பிக்கை!
மனதில் நம்பிக்கை இருந்தால் ஊனம் கூட ஒரு தடை அல்ல!
மனதில் நம்பிக்கை, பொறுமை இருந்தால் வாழ்வில் கிடைக்காதது எதுவும் இல்லை!

அவமானப்பட்டாலும் ,தோற்றாலும் நம்பிக்கையுடன் உறுதியாய் இருப்போம்!
அகத்தில் நம்பிக்கை கொண்டால் வெற்றி தேடி வரும்!
ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கையில் தான் வாழ்க்கை நகர்கின்றது!
எதையும் சாதிப்போம் என்று நம்புவோம்!
இறைவன் நம் அருகில் இருக்கிறார் என்று உணர்வோம்!
அனைத்து உயிர்களும் நம்பிக்கையில் தான் வாழ்கின்றன!
வாழ்வில் நம்பிக்கை என்பதை பேணுவோம்!
வாழ்வினை இன்பமயமாக்கி வெற்றி வாகை சூடுவோம்!






Offline Yazhini

துவண்டு போன மனமும்
அனிச்சையாக கசியும் கண்ணீரும்
திகைத்து திரியும் வழியறியா பறவையாய்
திசைமாறி போன வாழ்வும்.
உடைந்து போன விலங்காய்
உதறி செல்லும் உறவுகள்
கசக்கும் உண்மைகள்...
அதில் விலகும் பொய்திரைகள்...
ஒடுங்கும் மன சிறகுகள்...

கூட்டில் அடைபடும் கூட்டுபுழு வண்ணத்துப்பூச்சியாகும்
பொறுமையில் அடைக்காக்கப்படும் முட்டை பறவையாகும்
அழுத்தத்தை தாங்கும் மரமும் வைரமாகும்
அனைத்தும் நம்பிக்கையினால் உருமாறும்
தன்னிலை அடைய போராடும்.

சிறகுகள் விண்ணில் பறப்பதற்கே
அடைபட்டு கிடப்பதற்கல்ல...
என உணரும் பறவை
உயரத்தைக் கண்டு அஞ்சுவதில்லை
தனிமையில் துவளுவதுமில்லை...
தன்னம்பிக்கையோடு
துணிகையில் மலையும் சிறுதுகளே...
பெருஞ்சுமையும் சிறுபனியே...
இப்பிரபஞ்சமும் அதன் கூடே...

சிறிது இளைப்பாறுதலும் தேவைதான்
அதன் மனவலிமையைக் கூட்ட ,
சிறகுகள் வலுபெற மீண்டும்
பல மைல்கல்லை கடக்க...
எதிர் காற்றை சந்திக்க...
போராடும் மனமும் பறவையும்
தன் இலட்சியக்கனவை எட்டும்வரை ஓய்வதில்லை
பயணங்களும் முடிவதில்லை...
« Last Edit: August 26, 2025, 09:14:27 PM by Yazhini »

Offline VenMaThI


நம்பிக்கை

அடுத்தவர் நம் மீது வைத்தாலும்
நாம் பிறர் மீது வைத்தாலும்.. உடைக்க
சில நொடித்துளிகளே போதும்
வளர்க்கவோ பல யுகங்கள் கூட போதாது....

"உன்னால் முடியாது" என்று
கோடி குரல் கேட்பினும்
"ஒரு வேலை முடியுமோ" என்று
எங்கோ கேட்கும் அசரீரி கூட நம்பிக்கையாய் மாறும்....

துயறுற்று துவண்ட போதும்
மனமுருகி மன்றாடுவது -  கண்ணால் காணாத போதும்
எங்கோ இருக்கிறார் நம்மை காக்கிறார்
என்று அந்த கடவுள் மீது கொண்ட நம்பிக்கையே...

உன்னால் முடியும் என்று உசுப்பிவிட்டு
உழைப்புக்கு உயிர் கொடுத்து
உழைப்பால் உயர்ந்தோன் என்ற அந்தஸ்த்தை தருவது
நமக்கே தெரியாமல் நமக்குள் வாழும் நம்பிக்கையே...

சட்டென கரையும் மெழுகின் ஒளியில்
இலகுவாக இரவின் இருளை
கடக்க முடியும் என்ற எண்ணமே - வாழ்வின்
இன்னல்களை தகற்க உதவும் நம்பிக்கையாகும்....

வாழ்வில் கை இழந்தவனையும்
வாழ்வாங்கு வாழ வைப்பது....
முடியும் என்ற மந்திர சொல்லை விதைத்து
அவன் வளர்க்கும் தன்னம்பிக்கையே....

மூட நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு
அவ நம்பிக்கையை அழித்து
தன்னம்பிக்கை என்ற விதையை விதைப்போம்
வாழ்வில் என்றும் வெற்றியை அறுவடை செய்வோம்....





Offline சாக்ரடீஸ்

தனிமனிதனின் சுதந்திரம்
நம்பிக்கையின் சோதனை

சுதந்திரமாய் பறந்து
போவாயே
அன்பை மறவாதே
பிள்ளையே.

அம்மா
கையால் நீ நடந்தாய்
அவள்
புன்னகையிலே நீ பிறந்தாய்.

அப்பா
உன் கனவுக்கு ஓர்மை
அவனை
மறப்பது பாவமடி நெஞ்சமை.

நம்பிக்கை
அருமை பொக்கிஷம்
அதுதான் வாழ்வின்
ஒளிக்கதிர் நிச்சயம்.

சுதந்திரம்
நல்லது பொறுப்புடன்
அன்பு சேரும்
பாதை வளமுடன்.

அம்மா அன்பு
வாழ்வின் வளம்
அப்பா ஆசை
வெற்றிக்குக் கலம்.

அன்போடு நடந்தால்
உன் பயணம்
பெற்றோர் நம்பிக்கையே
உன் உயிர் குணம்.

நம்பிக்கை காப்பது
வாழ்வின் செல்வம்
அதுவே அன்பின்
நிலையான பலம்.
« Last Edit: August 28, 2025, 12:13:48 PM by சாக்ரடீஸ் »

Offline Ashik

வானம் வசப்படும் !! துணித்தவனுக்கு தூக்கு மேடை கூட பஞ்சு மெத்தை !! வேடிக்கை பார்த்து வாழ்வதை விட போராடி சாவதே மேல் !! முயற்சி திருவினையாக்கும் !! நம் முன்னோர்கள் நம் நம்பிக்கை வளர சொன்ன சில வார்த்தைகளில் ஆரம்பிப்பதால் இந்த ஓவியம் கூட நம்பிக்கை பெற்று உயிராகும் என்ற நம்பிக்கையோடு  !!   !! உயிரற்ற ஓவியமாய் மாறி போன என் வாழ்க்கைக்கு உயிரை பரிசளித்தவள் அவள் !! நம்பிக்கை என்னும் வேர்களை என்னுள் விதைத்து காதல் என்னும் மரத்தை என் மனதில் வளர செய்தவள் அவள்  !! தயக்கம் என்னும் விலங்கை உடைத்து சிறககடிக்கும் பறவையாய் என்னை வானில் பறக்க செய்தவள் அவள் !! பேசும் வார்த்தைகலால் என்னுள்  இருந்த பயம் விலகி எதையும் எதிர்கொள்ளும் சக்தியை சூரிய வெளிச்சம் போல மனதில் படர செய்தவள் அவள்  !! காதல் மட்டுமே வேர் அற்ற மரங்களை கூட செழிப்பாய் வளர செய்யும் என்ற நம்பிக்கை என்னுள் வளர செய்தவள் அவள் !! என் முயற்சிக்கு எல்லாம் உறுதுணையாய் என்றும் நிலைத்திருந்தவள் அவள் !! அவள் என்ற சொல் போதும் என்னும் எண்ணம் எல்லாம் செயலாய் மாறி போகும் என்று நம்ப வைத்தவள் அவள் !! என் வாழ்க்கை என்னும் வீட்டின் நம்பிக்கை  என்னும் தூணாய் மாறிப்போனவள் அவள் !! அமுதமாய்  நாவில் ருசித்து நான் பேசும் வார்த்தைகளாய் எனக்காக இருந்தவள் அவள் !! அவள் என்ற வார்த்தை ஏனோ இன்று விஷமாகி போனது !! தூணாய் இருந்தவள் இன்று என்னை துரும்பாய்  வீசி எறிந்தாள் !! தேனாக இனித்தவள் ஏனோ விஷமாக என்னை கொன்றுவிட்டால் !! மொழியாய் நான் நினைத்தவள் என்னை ஊமையாக அழவைத்தாள் !! ராணியாய் என்னுள் வாழ்ந்தவள் தேனியாய் வேறு   மலர் தேடி பறந்துவிட்டாள் !! அவளே நம்பிக்கை என்று இருந்த என்னை பொழுது போக்காய் வீணடித்தாள்!! இதுவும் கடந்து போகும் இது தான் வாழ்க்கை என்னும் நம்பிக்கையில் எனக்கான விடைபெரும் தருணத்தை கொடுத்தாள் !! அவளால் உடைந்த நான் மீண்டும் வருவேன் உயிர் கிடைத்த ஓவியமாய் !! நம் முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளின் சாட்சியமாய் !! 💔🚶‍♂️

Offline RajKumar

அகத்தில் நம்பிக்கையும் புறத்தில் உழைப்பும் வெற்றியின்
தாரக மந்திரம்
வெற்றியே நம்பிக்கையின் அச்சாணி
அந்த வெற்றி‌ நம்பிக்கை உடையேரிடம் வரும்
எத்தனை முறை தன் முட்டையிடும் கூட்டை களைத்தாலும் நம்பிக்கையுடன் காகம் அதே இடத்தில்
மீண்டும் கூடுக்கட்டி முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கும்
மண்ணில் இருந்து விதைகள்
நம்பிக்கையுடன் துளித்து செடியாகி
இனிய சுவை கொண்ட பழத்தை
தரும் மரமாகிறது
ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளை அடைய‌ நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்தால்  நிச்சயம் வெற்றி பெறலாம்
லட்சியத்தை நம்மால் அடைய முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்கலாம் நம்பிக்கை மட்டும் இழக்கக் கூடாது

ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் தடைகள் தாண்டி
ஓட வேண்டும் வெற்றியை நோக்கி

எதிர் மறை சிந்தனைகளை சிதைத்து
வளர்முகு சிந்தனை வளர்த்து நம்பிக்கையுடன் நடந்தால் தோல்விகள் கூட
தோற்று போகும்ஓரு நாள்




 
« Last Edit: August 27, 2025, 01:53:30 PM by RajKumar »

Offline Sankari

உன்னை நீ நம்பு !
நீ பள்ளியில் வெகுளித்தனமாக விளையாடிக் கொண்டிருந்தபோது...
உங்களுக்குத் தெரியாத வயதில் உங்கள் குடும்பத்தால் அதை வாங்க முடியாது என்று குத்தி காட்டுவார்கள்,
அந்த நேரத்தில் உன்னை நீ நம்பு !
நீ ஒரு பெண் என்பதால் சமூகம் உன் படிப்பு தீர்வுகளை சந்தேகிக்க வைக்கும்,
அந்த நேரத்தில் உன்னை நீ நம்பு !
வீட்டிலும் சில சமயங்களில் பாதுகாப்பு என்ற போர்வையில் உன்னை தடுத்து நிறுத்துவார்கள்
அந்த நேரத்திலும் உன்னை நீ நம்பு !

இப்படி செய்தால் பயமாக இருக்கும்,..
அப்படி செய்தாள் கடினமாக இருக்கும்,..
இது ஒரு தவறான தீர்வு,..
வேற ஏதாவது முயற்சி செய்,..
இதைப்போல் யாரு என்ன சொன்னாலும்,
அந்த நேரத்தில் நீ உன்னை மட்டுமே நம்பு !

அந்த கூண்டு தெரியுதா ?
எவ்வளவு பிரகாசமா இருக்கிறது ?
ஆனால் அது ரொம்ப சிறியது...
பார்க்க தான் பல பலனு இருக்கும் !

சிறகுகள் எதற்கு ? பறக்கு தானே ?
அந்த கூண்டு இருக்கே ...
அது உன் மனதில் மட்டும் தான் இருக்கு,
அது ஒரு கற்பனை,
இந்த சமுதாயம், சொந்தங்கள், தெரியாதவங்க, தெரிஞ்சவங்க..
எல்லாரும் உருவாக்கின ஒரு கூண்டு !
அதில் நீ இருக்கணும் என்று அவசியம் இல்லை,
சங்கிலியை உடைச்சிடு !
பறந்து போ !
சிறகை விரிந்து போ !
உன்னை நீ நம்பு !
« Last Edit: August 27, 2025, 07:33:45 PM by Sankari »
banniere" border="0